Posts

Showing posts from February, 2018

திராவிட அரசியல்!

முன்னுரை : திராவிட அரசியல் பற்றியும் அதன் கொள்கை பற்றியும் சமீப காலங்களில் மிகப்பெரும் விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படி என்ன சாதித்துவிட்டன திராவிடக்கட்சிகள் ? ஒரு முன்னேற்றமும் இல்லை , மாநிலமே சீரழிந்து போய்விட்டது என்ற பொய் பரப்புரையை துவங்கி விட்டிருக்கிறார்கள் பலர். அந்த நிலையில் தான் இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று எனக்கு தோன்றியது. இனி வரும் பத்திகளில் திராவிட கட்சிகளின் துவக்கம் , அவர்களில் அரசியல் கொள்கை , ஆரம்பம் , பின் அவர்கள் வழி வந்த ஆட்சி இவற்றை பற்றி சற்றே விரிவாக எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதப் போகிறேன். ஏதேனும் பிழை இருப்பின் திருத்தவும். முடிந்தளவு சரியான தரவுகளையும் , புள்ளி விவரங்களையும் தர முயற்சிக்கிறேன்! திராவிடம் : திராவிடம் என்ற சொல் தமிழம் என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் , அம்பேத்கரும் கூறுகின்றனர். தமிழம் - > த்ரமிளம் - > த்ரவிடம் - > திராவிடம் ஆரியம் , மராட்டியம் , வங்காளம் போன்று தமிழன் என்றொரு தனி இனத்தின் பெயரே தமிழம் , திராவிடம் என்பது. கி.மு. முதல் நூற்றாண்டிலேயே திராவிடம் என்ற சொல் பயன்படு