Posts

Showing posts from September, 2017

கடவுள்!

கோயிலுக்கே பூட்டுக்கள் தொங்கிடும்போது எந்தக் கடவுள் வந்திங்கே உமைக்காக்கும்?!​ ​ -அ.ச.கி.

பிரிவு!

பிரிவு! கண்ணை விட்டு நீரைப் போல் சதையை விட்டு ரத்தம் போல் உடலை விட்டு உயிரினைப் போல் இன்று பிரியப் போகும் என் கல்லூரி இளைய நண்பர்களே! வலிகளோடு வளர்வதுதான் வாழ்க்கை! பிரிவுகளால் எழுதப்படுவதுதான் வருங்காலம்! நட்போ, நண்பர்களோ பிரிவதில்லை. கோர்த்திருந்த கைகள் பிரிகின்றன. சேர்ந்தே ஓடிய கால்கள் தூரம் நகர்கின்றன. அருகே கேட்ட சிரிப்புச் சத்தம், சற்று விலகிப்போகிறது. எதுவும் மாறாது, மாளாது! கல்லூரிகள் வெறும் திசைகாட்டிகளே! எந்தத் திசை எங்குகொண்டு சேர்க்கும் என்பதை மட்டுமே அது சொல்லும். அதில் எந்தத் திசையில் பயணிப்பது என்பது உங்கள் தேர்வு! சரியானதை தேர்ந்தெடுத்து அடுத்த பயணம் துவங்குங்கள். பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள். கடந்தகாலத்தோடு கைகுலுக்கி பிரியுங்கள்! வருங்காலம் நிச்சயம் வாரி அணைக்கும்! -அ.ச.கி.

சொர்க்க சொப்பனம்!

சொர்க்க சொப்பனம்! உன் விழிகொண்டு என் உலகம் காண ஆசை கொண்டேன்! உன் இதயம் துடிக்க என் உயிர் வாழும் என்று எண்ணியிருந்தேன்! உன் மனம் சிந்தும் வண்ணங்களில் என் வாழ்க்கை வரையப்படும் என்று ஏக்கம் கொண்டேன்! என் உதிரம் உன் வயிற்றில் உயிராய் முளைக்கும் என்று கனவு கொண்டேன்! உன் வாழ்வின் கேள்விகளுக்கெல்லாம் நானே விடையாய் மாறிட மனம் கொண்டேன்! உன் அன்பு கடலில் நான் மட்டும் நீந்திட ஆசை கொண்டேன்! உன் மடியே என் இறுதி படுக்கை என்று இறுமாப்பு கொண்டேன்! உன்னை நான் பிரிந்தால், உலகத்தை பிரிந்த சூரியன் உதித்து என்ன பயன் என்றேன்! சொன்ன ஆசை எல்லாம் சொர்கத்திலேனும் நடக்குமென்ற சொப்பனத்தில் இன்னும் நான்! -அ.ச.கி.

கண்ணாடி வழி சிரிக்கும் கண்ணிரண்டு!

கண்ணாடி வழி சிரிக்கும் கண்ணிரண்டு! பொன்னே பொன்னை போல் பொண்ணு மூணு பெற்றமகராசி! கண்ணே கண்ணு போல காத்து வளர்த்த மகராசி!! உன் நடை தளர்நடை தான்! உன் நெஞ்சு உளர்கடை தான்! ஒடுங்கி கன்னம் சிறுத்தாலும் உடையா உளம் உனது! நடுங்கி குரல் குழைந்தாலும் கிடையாது ஓய்வென்பது! உறவுகூடும் நாளெல்லாம் உற்சவ பெருவிழாதான்! அந்நாளில் ஆளைஉருக்கும் ஆஸ்மாவும் அடியிரண்டு தள்ளிநிற்கும்! பொத்தி பொத்தி பார்த்திருந்த உன்னை புதைத்துவிட்டோம் என்கிறார்கள்! பொக்கை வாய்ச் சிரிப்பை இனி காணுவதெங்கே?! வெற்றிலை கொட்டுரலில் புறப்படும் ஸ்வரங்கள் இனி கேட்பதெங்கே?! குடும்பம் குழுமியிருக்க உணர்வுகள் பரிமாறி உருண்டை சோறு உண்பதெங்கே?! அர்ச்சுனக் கதைகள் சொல்வதற்கு இனி யாரிங்கே?! அரிச்சுவடிகள் இணையாகுமா அனுபவச் சுவடுகளுக்கு?! நினைவுகள் கோடி கொட்டி வளர்த்த நிமிடங்கள் எல்லாம் கொதிமணலில் புதைகிறது! புதைந்த அந்நொடிக்குள் புகும் வழி கிடைத்தால் உன் இறுதி நொடி திரட்டி ஒளித்து வைப்பேன்! என்ன சொல்லி என்ன செய்ய! கண்ணாடி வழி சிரிக்கும் கண்ணிரண்டை கடைசியாய் ஒரு முறை கண்டிருக்கலாம்! -அ.ச.கி.

தலித்தியம்!

தலித்தியம்! சமீபத்தில் அனிதா சம்பவத்தின்போது 'தலித்' என்ற சொல்லாடலை பயன்படுத்திய போது பெரும்பாலானோர் அதை எதிர்ப்பதை பார்த்தேன்! எதிர்த்த அனைவரும் நல்நோக்கோடு தான் அதை செய்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அப்படி சொல்லவதால் நன்மை தான் விளையும் என்பது என் தாழ்மையான கருத்து. அதற்கான காரணங்கள்: -முதலில் தலித் என்பது ஒரு சாதி பெயர் அல்ல. ஒரு இயக்கம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கென குரல் கொடுக்க துவங்கிய இயக்கம். -தலித் என்பதால் ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதில்லை. ஒருவன் ஒடுக்கப்பட்டதால் அவன் தலித் என்ற ஒற்றை குடையினுள் நின்று தன் எதிர்ப்புக் குரலை பதிவிடுகிறான். -இப்படி எண்ணிப்பாருங்கள்:-      =>ஒரு மாணவி 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் எடுத்தாள்.      =>ஒரு தலித் மாணவி 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் எடுத்தாள். மேற்சொன்ன இரண்டுமே ஒரே செய்திதான். ஆனால் இரண்டாம் வரியை படிக்கும்போது நம் உணர்வு சற்று மேலோங்கும். ஏனெனில் 'தலித்' எனும்போது அவளின் தினசரி வாழ்க்கை, அதன் கஷ்டங்கள் அனைத்தும் உடன் சேரும். அதை தாண்டி அவள் சாதித்திருக்கிறாள் என்பதுதான் நம்முள் அவ்வுணர்ச்சி

நீட்! (NEET)

⁠⁠⁠ நீட்! (NEET) பல்வேறு கருத்தாடல்கள். மிகக்குழப்பமான சூழல். அரசாங்கம் நம் நல்லதுக்குதான் செய்கிறது என்கிறார்கள். தரம்வாய்ந்த தகுதிவாய்ந்த மாணாக்கர் மட்டுமே மருத்துவர் ஆவர் என்கிறார்கள். எல்லாத்தையும் விட்டு விடுவோம் எனக்கு ஒரே ஒரு கேள்விதான். இந்த அரசாங்கம் நம் நல்லதுக்குதான் செய்கிறது என்று கொள்வோம். எனில் நீவிர் சொல்லும் நல்லதையும் அந்த அரசாங்கமே செய்யலாம் அல்லவா? 1. மாநில பாடத்திட்டத்தை மாற்றுவது. இன்னும் தெளிவாகச் சொன்னால் நீங்கள் சொல்வது போல் தரமில்லாத இந்த பாடத்திட்டத்தை மத்தியக் கல்வித்தரத்துக்கு உயர்த்தலாமே? 2. நம்மைவிட கல்வியில் இன்னும் பின் தங்கியுள்ள மாநிலம் ஏராளம். அவற்றை சரி செய்யலாமே? 3. எல்லா மாநிலங்களில் முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் ஆட்சியில் இருக்கும் வட மாநிலங்களையாவது சரி செய்யலாம். 4. அதை எப்படி மத்திய அரசு செய்யலாம் என கேட்பின், உயர்படிப்பில் மட்டும் கைவைக்க உரிமையும் உணர்வும் பெற்றிருக்கிறதா மத்திய அரசு? 5. இந்தபாடத்திட்டத்தில் 'மனித உடல்கூறியலை' விட்டுவிட்டு படித்தாலே உயர் மதிப்பெண் எடுக்கமுடியும் என்கிறீர்களே, நீட் தேர்வுக்கும் நிச்சயம் நீங்

அக்கா மகள்!

அக்கா மகள்! பூவையிவள் பூப்படைந்தாள் இன்று! பூவே இவள் பூத்துவிட்டாள் இன்று!! மொட்டவிழ்ந்த சேதி ஒன்றை கொட்டடித்து சொல்லோம், வாரீர்!! உடல் மறைக்கும் பச்சை சேலை உடுத்திவிட அத்தைமாரே வருக! முற்றம் மறைக்கும் பச்சை ஓலை முடைந்துகட்ட மாமன்மாரே வருக!! சத்து சேர்க்கும் பச்சை முட்டை மிச்சமில்லாமல் குடிச்சிடனும்! மாமன்பேசும் குறும்புவார்த்தை அத்தைக்கு சொல்லாம வெச்சுகிடனும்!! இப்படி அப்படி அறிவுரை சொல்லி மனசுக்கும் வயசுக்கும் பலம்சேர்க்க மற்றோர் எல்லாம் வருக!! பார்வதி (கௌரி) மகளை பாடிட வருக! வள்ளிமணாளன்(முத்துக்குமார்) வாரிசுக்கு வாழ்த்துச் சொல்ல வருக! -அ.ச.கி.

நண்பர்கள் தினம்!

நண்பர்கள் தினம்! இன்று ஒருநாள் போதுமா? நீயும் நானும் சேர்ந்ததை சொல்ல இன்று ஒருநாள் போதுமா?! உலகை ஆளும் நட்பைச் சொல்ல இன்று ஒருநாள் போதுமா?! நட்பையும் நம்மையும் கொண்டாட இன்று ஒருநாள் போதுமா?! வாழும் வாழ்வை வரிந்துகட்ட இன்று ஒருநாள் போதுமா?! ஒரு ஆயுள்தான் போதுமா?! -அ.ச.கி.

விரல் வழி வழியும் கவிதைகள்!

விரல் வழி வழியும் கவிதைகள்! முன்பு கைகோர்த்த நொடிகள் எல்லாம் கண் முன்னே விரிகிறதே! இன்று உன்னை நினைக்கையில் உள்ளே நீர்கோர்த்து கொல்கிறதே! முன்பு காதலின் நீளத்தை எல்லாம் காத்திருப்பு அளந்திடுமே! இன்று காத்திருப்பின் இனிமையை சொல்ல காதலிடம் தெளிவில்லையே! முன்பு இரண்டே மணிநேரம் பேசி இரு ஆயுள் வாழ்ந்திருப்போம்! இன்று இருபது நொடிகூட போதும் இந்த உயிர் அர்த்தப்படும்! கண்ணை விட்டு நீரைப் போல் சதையை விட்டு ரத்தம் போல் உடலை விட்டு உயிரே போல் உறவை உதறி சென்றாயே! தேடித்தேடி உன்னையே தொலைந்து நானும் போகிறேன்! விட்டுசென்ற பெண்மையே கலைந்து நானும் சாகிறேன்!! மகிழ்வாய் ஒரு வாழ்க்கை செய்து ஒற்றை கோப்பையில் நீ தந்தாய்! பருகும்வரை பொறுமை இல்லையோ பறித்துக்கொண்டு ஏன் சென்றாய்?! பொதுவாய் சில நொடிகள் மனதிலே புதைந்திருக்கும்! புதைந்த அந்நொடிகள் மனதை அரித்திருக்கும்! விரல் வழி வழியும் கவிதைகள் எல்லாம் காகிதம்கூட அறிகிறது! விழி கொண்டு பார்த்தும் பெண்ணே என் வலி(ரி) உனக்கு புரியலையா?! காவி ஏற்க மனமில்லை - என் காதலை ஏற்றிடு! பாவி - தோற்க மனமில்லை சாதலை நோற்கிறேன்! -அ.ச.கி.

சிலிர்ப்பு!

சிலிர்ப்பு! இராட்டினச் சவாரி.. ரோசா செடியின் முதல் பூ.. அந்தப் பூவிதழில் பனித்துளி.. பனிநாளில் நெடும்பயணம்.. மழையோடு அடிக்கும் வெயில்.. எதிர்பாரா நாளில் விடுமுறை அறிவிக்கும் மழை.. மேகத்துக்கு நிழல் விழுமாறு பறக்கும் பறவை.. இரவின் கருப்பில் மதிற்பூனையின் கண்கள்!.. இன்னும் அழியா கள்ளிச்செடி கல்வெட்டுகள்.. விடியல் நேரத்தில் ஒற்றைக் குயில் சத்தம்.. கொன்றைமரம் உதிர்த்த மஞ்சள் மழை.. பச்சை போர்த்திய வயல்.. மருதாணி கைகள்.. முடிகோதும் விரல்கள்.. இப்படி என்னை சிலிர்ப்பூட்டும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று முதல் இணைகிறது- உன் மையிட்ட கண்கள்.. மையமான புன்னகை.. மயக்கும் சுருள்முடி.. கனவை நிறைக்கும் நீள் கழுத்து.. தூக்கம் மறக்கும் குளிர் பேச்சு.. கவி கொடுக்கும் உன் இதழ்.. களி கொடுக்கும் உன் குரல்.. சொர்க்கம் சொட்டும் சொப்பன நிமிடங்கள்.. உன் அருகாமையில் கிட்டும் உணர்ச்சியின் எல்லை.. நினைவு இழக்கும்படி அழுத்தப் பார்வை.. உயிர் தொலையும்படி ஒரு தீண்டல்.! -அ.ச.கி.

அனிதாக்களின் தேசம்!

அனிதாக்களின் தேசம்! குட்ட குட்ட குனிவது எங்கள் குணமென்று கொண்டீரோ?! திட்ட திட்ட தீர்வது எங்கள் இனமென்று கொண்டீரோ?! முட்ட முட்ட மூழ்குவது எங்கள் இயல்பென்று கொண்டீரோ?! வெட்ட வெட்ட சாவது எங்கள் இயல்பென்று கொண்டீரோ?! குட்ட குட்ட கூடுவோம்! திட்ட திட்ட திமிர்வோம்! முட்ட முட்ட முறைப்போம்! வெட்ட வெட்ட வளர்வோம்! நெஞ்சம் நிமிர்ந்து நின்றால் கொஞ்சம் திமிர்ந்து நின்றால் ஊர் தாளுமா?! பார் வாழுமா?! புனிதத்தின் பெயரைச் சொல்லி மனிதத்தை கொன்றொழித்தார்! ஒற்றைத்தேசம் என்றே சொல்லி வேற்றுமையை தூண்டிவிட்டார்! தரமென்று சொல்லிச் சொல்லி நீதியை தூக்கிலிட்டார்! அனிதாக்களின் தேசமிது எத்துணை பெருமையிது? இனியொரு முறை நிகழ்ந்திடவா பொறுப்போம்? நிகழும் சூழலை வேரோடு அறுப்போம்!! எங்கும் தமிழ் இனமுண்டு அதற்கு தனியே குணமுண்டு! அமிழ்தம் அவனது மொழிதான்! ஆனால் அன்பே வழியாய் கொள்ளாதே! அறத்தை வழியாய் கொள் தமிழா! - எதிரி சிரத்தை ஒழித்து கொல் தமிழா! அறச்சீற்றம் கொண்டு நில் தமிழா! யுகமாற்றம் வேண்டும் வெல் தமிழா! -அ.ச.கி கரு. பழனியப்பன் சொல்லியது போன்று 'ஒன்றாய் இரு