Posts

Showing posts from June, 2017

கம்யூனிஸம்

கம்யூனிஸம் உனக்கு அது ஒட்டடை! இன்னொருவருக்கு அது வீடு! -அ.ச.கி.

வர்ணம்!

வர்ணம்! --------- மூ'வர்ணம்' என்றாலே இந்தியா நினைவு வரும்! ஒரு காலத்தில் இது நான்காக இருந்தது! -அ.ச.கி.

எதை எனக்கு அருள்வாய்?!

எதை எனக்கு அருள்வாய்?! பஞ்சணை தேவையில்லை - உன் நெஞ்சணைத்த போதினிலே! துஞ்சிட தோணவில்லை - நீ கொஞ்சி பேசயிலே!   காணும் திசை யாவிலும் கண்ணே உன்னால் நகர்கிறேன்! பாரின் மிசை சாவிலும் பெண்ணே உன்னை நுகர்கிறேன்!   காதலும் ஓர் நோய்தான் உருக்குதே உயிரையும்! சாதலும் ஓர் வரம்தான் சேர்க்குமே நம்மையும்!   நம்மிடையே காதலை அழைப்புகள் அளக்குமே! காதலின் கரைகளை கண்ணீர் வரையுமே!   காதலை பிரிந்தபின் உயிர் வாழ்வது எவ்விதம்?! தீயும் அணைந்தபின் வெப்பம் இருக்குமே அவ்விதம்!   உந்தன் விழி கண்மையே கலைந்து விடக்கூடாதே! என்னை ஈர்த்த பெண்மையே நீயும் அழுது விடாதே!   எதுகையும் மோனையும் எதுக்கடி உன்னிடம்?! என் கவிதைத் தமிழுமே பிறந்ததே உன்னிடம்!   தாண்டி செல்ல மனமில்லை - உன் தூண்டில் விழி வீழ்ந்தபின்! மண்டி யிட்டு கேட்கிறேன் ஏன்டி எதை எனக்கருள்வாய்?!   காவி ஏற்க (எனக்கு) மனமில்லை - என் காதலை ஏற்றிடு! பாவி - தோற்க மனமில்லை சாதலை நோற்கிறேன்! -அ.ச.கி.

தனிமைத் துணை!

தனிமைத் துணை! ---------------- இருட்டை விலக்கி வைத்த ஓர் அறை! கற்றை காகிதம் கட்டுக்களாய் புத்தகம் மையிட்ட பேனா! இதைச் சுற்றி என் மனம்! ஒரு ஓரமாய் என் உடல்! இவைதவிர அறையில் மிஞ்சும் இடமெல்லாம் தனிமையே ததும்புகிறது! -அ.ச.கி.

உருவுகண்டுஎள்ளாமை!

உருவுகண்டு எள்ளாமை! எந்த ஒரு மழைத்துளிக்கும்‬ ‪முத்தாகும் சத்துண்டு!‬ ‪எந்த சிறு தீப்பொறிக்கும்‬ ‪காட்டை எரிக்கும் சக்தியுண்டு!‬ ‪ -அ.ச.கி.

மழை!

மழை!   தேர்தல் வாக்குறுதிக்கும் - பின்வரும் அரசின் திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒத்திருந்தது நேற்றைய மழை! -அ.ச.கி.