Posts

Showing posts from December, 2017

வேடிக்கை பார்த்தவை!

இதுவரை என் வாழ்நாளில் நான் எழுதிய மிக நீண்ட கவிதை இது தான். 2017 - ஒரு பார்வை! வேடிக்கை பார்த்தவை! அம்மாவுடன் முடிந்து அழுக்குடனும் அதிரடியாகவும் ஆயிரம் அரசியலை சுமந்தவாறு விடிந்தது 2017! மாதம் ஒன்று: தமிழுக்கும் தமிழருக்குமாய் ஒரு போராட்டம்! இனி வருடந்தோறும் - எம் தெருக்களில் ஏரோட்டம்! இளைஞர் பெருங்கூட்டத்தால் மனத்தினில் களியாட்டம்! இளைஞர் மூட்டிய தீயணைக்க தீவிரவாதம் என்றோர் தீவைத்து தீர்த்தனர் மாபெரும் யுத்தத்தை ஆர்த்தனர் தீவிரவாத ரத்தத்தை! மாதம் இரண்டு: நாட்டின் உச்ச அரசியலும் எச்ச அரசியலும் - அதன் நர்த்தனம் துவங்கிய மாதம்! சின்னம்மா எழுச்சியும் அய்யாவின் தியானமும் சிறையிலே சென்று களித்ததும் பன்னீரும் ஸ்டாலினும் பார்த்து பேசி சிரித்ததும் இம்மாதமே! காவி வண்ணம் மெல்லமாய் காலை ஊன்றி நின்றதும் கால் இல்லாதவரெல்லாம் நாற்காலியை வென்றதும் இம்மாதமே! மாதம் மூன்று: சோறிட்ட எங்கப்பனும் மாரிலிட்டு பாலுட்டிய எங்கம்மையும் தெருவிலிட்டு அநாதையாய் அம்மணமாய் எலி கடித்து உருண்டிருந்தபோது, ஏசியிட்ட அறையில் கைகுலுக்கி புகைபடத்துக்கு முகம்காட்டி பல்லிளித்து பரிசளித்து முதல் பக்கவிளம்பரம் கொடுத்து மகிழ்ந

ஊனம்!

ஊனம்! முழுதும் செயலற்று போவதல்ல ஊனம்! முடியாது என்று நினைப்பதே ஊனம்!! -அ.ச.கி.

அவள் பெயர் கௌசல்யா!

அவள் பெயர் கௌசல்யா! நீதி மீண்டு(ம்) ஒருமுறை நிலைகுத்தி கம்பீரமாய் நிற்கிறது! நீதியின் காலடியில் காதல்ரத்தம் ஈரமாய் நிற்கிறது! காதலின் ரத்தம் எடுத்து சாதியின் வேர்களுக்கா விட்டுவைத்தீர்? உன் ஒருத்தனுக்கு ஒளிகிடைக்க ஊரையா பற்ற வைப்பீர்? உணர்வில்லா வெறும் உடல் கொண்ட உனக்கு உயிர் எதற்கு?! உடை எதற்கு?! அதர்மத்தின் அடியொற்றி வாழும் அடியோன் உனக்கு அடுத்தவன் அம்மணம்தானே மூலதனம்! உன் முகத்தில் உமிழ்வதைக்கூட என் மனம் விரும்பவில்லை! மலம் விற்று பிழைக்கும் உனக்கு எச்சில் எல்லாம் எம்மாத்திரம்? என்னதான் சொன்னாலும் ஒப்பாறி வைத்தாலும் தூக்குக் கயிறாலும் கூட துக்கத்தின் தழும்பை சீர் செய்யமுடியுமா? தீ சுட்ட காயத்தினை நேர் செய்யமுடியுமா? -அ.ச.கி.

வள்ளுவன்!

வள்ளுவன்! ஒற்றை நூல் தந்தவன்! இரண்டடியில் உலகளந்தவன்! முப்பாலில் வாழ்வை பிரித்தவன்! நால்திசை எங்கும் தமிழ்சுவை நவின்றவன்! ஐந்திணை நிலத்துக்கும் இலக்கணம் வகுத்தவன்! ஆறு போல் நல்கருத்ததை அளித்தவன்! ஏழ்கடலை புகட்டி சிறு குறள் தறித்தவன்! எட்டும் இடமெல்லாம் சிறப்புற வாழ்பவன்! உலகோர் யாவருக்கும் உய்யும் வழி மொழிந்தவன்! மதம் இனம் மொழி வேற்றுமை களைந்தவன்! எவரும் ஏற்கும் பொதுமறை தந்தவன்! நம் முப்பாட்டன் வள்ளுவன்.....!! -அ.ச.கி.

இதையும் உள்ளடக்கியது தான் மஹாபாரதம்!

இதையும் உள்ளடக்கியது தான் மஹாபாரதம்! பாரதம் தெய்வ வரலாறாக சொல்லப்படுகிறது! அதில் எனக்கு தோன்றிய சில முரண் இடங்கள். பாரதத்தில் மிசச் சிறந்த வில்லாளன் யார் தெரியுமா? கர்ணன்? அர்ச்சுனன்? துரோணர்? பீஷ்மர்? நிச்சயம் இவர் எவரும் இல்லை. ஏகலைவன் தான் மிகச் சிறந்த வில்லாளனாக கருதப்பட வேண்டியவன். அவ்வகையில் உருவாக்கப் பட்டிருக்க வேண்டியவன். ஆனால் என்ன நிகழ்ந்தது அவனுக்கு? வேடுவன் என்ற ஒற்றை காரணத்தால் கட்டை விரலை தட்சணையாக பெற்று அவன் கலைக்கும் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் துரோணர். இவர் தான் சிறந்த குரு என்று பாரதத்தில் கொண்டாடப்படுகின்றார். நீதி தவறிய இவர் எப்படி நல்ல குருவாக சீடர்களுக்கு நன்னெறி புகட்ட முடியும்?   பாண்டவர்கள் தம் தாயுடன் ஓய்வெடுப்பதற்காக அரக்கு மாளிகைக்கு செல்கின்றனர். அரக்கு மாளிகைக்கு தீ வைத்து பாண்டவர்களை குடும்பத்தோடு எரிக்க திட்டமிடுகிறார்கள் சகுனியும், துரியோதனனும். ஆனால் அங்கிருக்கும் சூழ்ச்சி குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றது. பாண்டவர்களும் தப்பித்துவிடுகின்றனர். ஆனால் அங்கு தான் கேள்வி. பாண்டவர்கள் வெறுமனே தப்பித்து போகமாட்டார்கள். அங்கு

இராமன்!

இராமன்! சீதையின் நன்னிலை உரசிடும் பொருட்டு சிதையில் இட்டது அறச்செயலோ? தொட்டால் தலை சிதறும் என்பது இராமன் அறியா திருந்தவனோ? எவரும் அறியா சாபம் என்பின் - அதை எழுத்தர் அறிந்தது எங்ஙனமோ? இராமன் அறிகிலன் என்றே கொண்டால் அவன் தெய்வம் ஆகுதல் எங்ஙனமோ? -அ.ச.கி.