Posts

Showing posts from November, 2016

கனவு தூரிகை!

கனவு தூரிகை! ஏ! பெண்ணே!! கண்டநொடி முதல் கண்ணாலே பேசி கிறங்கடிக்கிறாய்! காணாத நாட்களில் என் தூக்கத்தைத் துரத்துகிறாய்!! என் கனவு தூரிகையில் சிக்கிய ஓவியமாய் சிந்தையில் நிற்கிறாய்! விழி வழி நுழைந்து - என்னை வீழ்த்தியது போதும்! செவி வழி பிளந்து இதயம் சென்றடைய உன்னை பேசச் சொல்லி கேட்கிறேன்!! அதற்கு நீ தீர்க்கமாய் உதிர்த்த அந்த ஒற்றை சிரிப்பில் சிதைந்து போன கோபுரச் சீமான்கள் எத்தனையோ!!           - அ.ச.கி.

அறிவாயா நீ?!

அறிவாயா நீ?! நீ உன் முந்தானையில் தலை துவட்டிவிடுவாய் என்பதற்காகவே நான் மழையை ரசிக்கிறேன்!! நீ காலையில் ஈரம் சொட்டும் கூந்தலோடு காபி தருவாய் என்பதற்காகவே நான் நெடுநேரம் உறங்குகிறேன்!! அறிவாயா நீ?!!          -அ.ச.கி.

மகன்!!

மகன்!! எனக்கு இரு பிள்ளைகள்! ஒன்று பெற்றெடுத்த பிள்ளை! மற்றொன்று தென்னம் பிள்ளை!! எனது கண்ணீர் கண்டு களிகொள்வான் முதலாமவன்! தாகத்தை இளநீர் கொண்டு தீர்த்திடுவான் இரண்டாமவன்!! எனக்கு இகழ் தந்து இச்சிப்பான் மகனானவன்! நிழல் தந்து இரச்சிப்பான் மரமானவன்!! என் இறப்புக்கும் எட்டிப்பார்க்காது போனான் என்னவன்! இறந்த பின்னும் எனைச் சுமந்தான் பின்னவன்!! மரமே! (மன்னிக்கவும்) மகனே!! பல்லாண்டு வாழ்வாயாக!! - அ.ச.கி.

கணிப்பான்!

கணிப்பான்! இட்ட பணிகளைச் செய்யும் - கணினி! கொடுக்கும் கணக்குகளைச் சரியாக - கணி நீ!! ஏழைகளுக்கு என்றும் எட்டாத - கனி நீ! மக்களுக்கு ஆகிடுவாய் - கண் இனி!! - அ.ச.கி.

மாலை நேரம்!

மாலை நேரம்! வெளிச்சம் போயாச்சு வெள்ளாடு மேஞ்சாச்சு வெள்ளையம்மா இங்கிருக்க வெள்ளச்சாமி எங்க போற?!! ஆட்டை கொண்டு போய் அடச்சு வெச்சுப்புட்டு! ஆத்தோரம் போய் அழகா குளிச்சுப்புட்டு!! வீடு வந்து பாத்தாதான் வீட்டு விளக்கு விழிச்சிருக்கும்! அவ முகத்த பாத்தா அழகா சிரிச்சிருக்கும்!! வெள்ளச்சாமி... வீரநடை போட்டு வந்த வீராச்சாமி எங்க போனான்?! வில் போல் பார்வை கொண்ட வில் விசயன் எங்க போனான்?!! வெள்ளயம்மா முகத்த பாத்து வெக்கப்பட்டு ஓடிப் போனான்!!! - அ.ச.கி.