Posts

Showing posts from 2016

GCT

GCT என் கனவுகளின் வாசல்! எதிர்காலத்தை எட்டிப்பிடிக்க உதவும் ஏணி! அக்கினிகுஞ்சுகள் அடைகாக்கப்படும் கூடு! நாளை சிறகு விரித்து பறக்கப் போகும் பருந்துகளின் பிறப்பிடம்!!    - அ.ச.கி.

தேவதையோடு சில உரையாடல்கள்!!

தேவதையோடு சில உரையாடல்கள்!! தூங்கி சாய்கிறேன் கனவின் வாசலில்! அங்கே ஓர் தேவதை கேள்விகளோடு என்னை வரவேற்றாள்!! தேவதை :- "பூமியில் புன்னகைக்க க் கூ ட நேரமிருக்கிறதா?! உன் புன்னகையின் காரணம்?!" நான் :- "அவளின் பொன்னான பூமுகம்!!" ( கேள்வி ப தி ல் க ள் தொட ர் கிற து ...) இ ந்த பூமியில் எப்படி இருக்கிறாய்?! அவளின் விழியீர்ப்பு விசையினால்!! வாழ்க்கை மிரட்டியதுண்டா?! குழந்தைபோல் மிரட்சியில் அவள் இருக்கையில்!! உயிர் உணர்ந்த நேரம்?! முடியிரண்டு முகம் மோதிய நேரம்!! வானில் பறந்த அனுபவம்?! அடியிரண்டு தள்ளி அவள் அமர்ந்தபோது!! அன்பு அரவணைப்பு அறிந்ததுண்டா?! காதல் நேசம் காட்டியதுண்டு!! வாழ்வு போதும் என்றெண்ணியதுண்டா?! சாகசம் என்றெண்ணி நான் செய்த கோமாளித்தனம் கண்டு அவள் சிரித்த நொடி!! நீ தொட விரும்புவது?! இந்த கவிதையின் மூலம் அவள் மனதை!! தொடர விரும்புவது?! அவள் விட்டு செல்லும் பாதச்சுவடு!! விட்டுவிட விரும்புவது?! அவளின் மடியில் என் இறுதி மூச்சு!! தேவலோக பெண்கள் கண்டதுண்டா?! பூமியில் தேவதை கண்டதுண

கனவு தூரிகை!

கனவு தூரிகை! ஏ! பெண்ணே!! கண்டநொடி முதல் கண்ணாலே பேசி கிறங்கடிக்கிறாய்! காணாத நாட்களில் என் தூக்கத்தைத் துரத்துகிறாய்!! என் கனவு தூரிகையில் சிக்கிய ஓவியமாய் சிந்தையில் நிற்கிறாய்! விழி வழி நுழைந்து - என்னை வீழ்த்தியது போதும்! செவி வழி பிளந்து இதயம் சென்றடைய உன்னை பேசச் சொல்லி கேட்கிறேன்!! அதற்கு நீ தீர்க்கமாய் உதிர்த்த அந்த ஒற்றை சிரிப்பில் சிதைந்து போன கோபுரச் சீமான்கள் எத்தனையோ!!           - அ.ச.கி.

அறிவாயா நீ?!

அறிவாயா நீ?! நீ உன் முந்தானையில் தலை துவட்டிவிடுவாய் என்பதற்காகவே நான் மழையை ரசிக்கிறேன்!! நீ காலையில் ஈரம் சொட்டும் கூந்தலோடு காபி தருவாய் என்பதற்காகவே நான் நெடுநேரம் உறங்குகிறேன்!! அறிவாயா நீ?!!          -அ.ச.கி.

மகன்!!

மகன்!! எனக்கு இரு பிள்ளைகள்! ஒன்று பெற்றெடுத்த பிள்ளை! மற்றொன்று தென்னம் பிள்ளை!! எனது கண்ணீர் கண்டு களிகொள்வான் முதலாமவன்! தாகத்தை இளநீர் கொண்டு தீர்த்திடுவான் இரண்டாமவன்!! எனக்கு இகழ் தந்து இச்சிப்பான் மகனானவன்! நிழல் தந்து இரச்சிப்பான் மரமானவன்!! என் இறப்புக்கும் எட்டிப்பார்க்காது போனான் என்னவன்! இறந்த பின்னும் எனைச் சுமந்தான் பின்னவன்!! மரமே! (மன்னிக்கவும்) மகனே!! பல்லாண்டு வாழ்வாயாக!! - அ.ச.கி.

கணிப்பான்!

கணிப்பான்! இட்ட பணிகளைச் செய்யும் - கணினி! கொடுக்கும் கணக்குகளைச் சரியாக - கணி நீ!! ஏழைகளுக்கு என்றும் எட்டாத - கனி நீ! மக்களுக்கு ஆகிடுவாய் - கண் இனி!! - அ.ச.கி.

மாலை நேரம்!

மாலை நேரம்! வெளிச்சம் போயாச்சு வெள்ளாடு மேஞ்சாச்சு வெள்ளையம்மா இங்கிருக்க வெள்ளச்சாமி எங்க போற?!! ஆட்டை கொண்டு போய் அடச்சு வெச்சுப்புட்டு! ஆத்தோரம் போய் அழகா குளிச்சுப்புட்டு!! வீடு வந்து பாத்தாதான் வீட்டு விளக்கு விழிச்சிருக்கும்! அவ முகத்த பாத்தா அழகா சிரிச்சிருக்கும்!! வெள்ளச்சாமி... வீரநடை போட்டு வந்த வீராச்சாமி எங்க போனான்?! வில் போல் பார்வை கொண்ட வில் விசயன் எங்க போனான்?!! வெள்ளயம்மா முகத்த பாத்து வெக்கப்பட்டு ஓடிப் போனான்!!! - அ.ச.கி.

மெளனம்!!

மெளனம்!! மெளனத்தால் கொல்லும் வித்தை எங்கு பயின்றாய்?! - அ.ச.கி.

காதலி இல்லா இடம்!!

காதலி இல்லா இடம்!!   தன் காதலி இல்லா இடம் தேவையில்லை என்று எண்ணியாதால் தானோ இயேசுவும் தன் கல்லறையில் இருந்து எழுந்துவிட்டார்!!      - அ.ச.கி.

கைக்குட்டை!

கைக்குட்டை!   நான் கைக்குட்டையாக பிறந்திருக்கலாம்! நண்பனாக உன் கண்ணீர் துடைப்பதற்கும்! காதலனாக உன் உதட்டை வருடுவதற்கும்!!      - அ.ச.கி.

கைக்குழந்தை!

கைக்குழந்தை! நான் கைக்குழந்தையாக மாறவும் தயங்கமாட்டேன்! அப்பொழுதாவது நீ எனக்கு முத்தம் தருவாய் என்றால்!!      - அ.ச.கி.

மலர்தான் நான்!

மலர்தான் நான்! இன்னும் எத்தனை நேரம்?! இப்படியே அசைவற்று இருப்பது! இன்னும் எத்தனை நேரம்?! இமைநிறைய வேடிக்கை மட்டுமே காண்பது! இன்னும் எத்தனை நேரம்?! கரையின்மேல் அமர்ந்து கொண்டே கடலோடு உரையாடுவது!! நான் அசையாமல் இருக்க இருகைகள் அழுத்திப் பிடிக்கின்றன! காற்றோடு பறக்கலாம் என்றால் கயிறு கொண்டு கட்டிவிட்டார்கள்! ஏன்?! என்னை மட்டும் ஏன்! இத்தனை பேர் சுற்றியிருக்க என்மேல் மட்டும் ஏன் இத்தனை கரிசனம்?! விளையாடுவதில் கிடைக்கும் விடலைகளின் இன்பம் யார் அறிவார்?! சரி! எனக்காய் இத்தனை பிரயத்தனப்படும் இவர்களுக்கென, இரண்டு நிமிடம் துறவியாகிறேன்! ஆசைகளை துறக்கிறேன்!! அட! நான் மனதில் நினைத்ததை இவர்கள் செவிக்கு தூது சொன்னவன் யார்?!! துறவி என்றவுடன் தூக்கி பூஜையில் அமர்த்துகிறார்கள்!! "கவனிப்புகள்" கூடுகின்றன! ஊதுவர்த்தி தொடங்கி ஆர்த்திவரை அத்தனையும் செய்தாகிவிட்டது!! சாதமும் பரிமாறுகிறார்கள்?! பூஜைக்கு பின் பிரசாதமோ! ஆஹா! ஆவலாய்! ஆர்வமாய்!! ஆசையாய்!!! நான் எதிர்பார்த்த நொடி வந்தேவிட்டது!! கடலுடன் என்

எழுந்திடமாட்டாயோ?!!

எழுந்திடமாட்டாயோ?!! கண்டோர் எல்லாம் கைகூப்பிய முகம் ஒண்ணு! குரலே ஒசத்தாத குழந்தை முகம் ஒண்ணு! வழிந்தோடும் அன்புகொண்ட வாஞ்சை முகம் ஒண்ணு! வெளியுலகம் காணாம வாழ்ந்த முகம் ஒண்ணு! வெள்ளந்தியாய் வாழ்ந்த வெள்ளை முகம் ஒண்ணு!! ஐவ்வகை முகமும் இன்று ஐஸ்பெட்டியில் வச்சு - இன்னும் வெளுக்குதம்மா!!! கலையாத தலமுடிய கணம் ஒரு தடவ சீவி! நிதம் ஒரு தடவ நீவி! நின் முடி தன் நிறம் இழந்ததம்மா!! காப்பித் தண்ணியக்கூட ஆத்திக்குடிச்சிடுவ!! காலம் ஆத்தாத மனக்குறைய ஆத்தா - நீ சுமந்த!!! சுமையும் தாங்காமதான் சுகம் தொலைச்சயம்மா!! காய்ச்சல் வந்தாக்கூட கவனம் நிறைச்சுடுவ! சுகவீனம் சிறிதானாலும் - உன்னயே சுருக்கித்தான் சரி செஞ்சிடுவ!! உன் உடல் ஏற்கும் பதம் அறிஞ்சு பதனமா எட்டு வெப்ப! எட்டு திசை சுத்தி பாக்கவா எட்டாத இந்த முடிவு எடுத்த!!! உன் வழி நடந்தே வாழ்க்கை நடத்திய கூட்டம் வந்திருக்கு! எழுந்திடமாட்டயோ?!! பொங்குபாளையத்துல பொங்கு பொசுக்குனு போயிட்ட! - உன்னால பொறப்பு எடுத்து - நீ பொத்தி வளர்த்த பேரன் வந்திருக்கேன்! எழு

செவ்வாய்!!

செவ்வா ய்!! எனக்கும் செவ்வாயில் குடிபுக ஆசை!! உன் உதட்டைப் பார்த்ததில் இருந்து!!      - அ.ச.கி.

வெட்கம்!!!

வெட்கம்!!! உன்னை நினைத்தால்- வெட்கப்பட்டு வார்த்தைகள் கூட வெளிவர மறுக்கின்றன!!       - அ.ச.கி.

காதல் தீ!!

காதல் தீ !! நீ உன் அன்பால் அனைவரையும் "அணைக்க"த்தானே செய்தாய்?! எனக்குள் மட்டும் ஏன் பற்ற வைத்தாய்?! காதல் தீயை!!          - அ.ச.கி.

காப்பிரைட்!!

காப்பிரைட் !! நான் தவம் கிடக்கிறேன்! என் காதலுக்கு உன்னிடம் "காப்பிரைட்" வரம் வாங்க!!                  -அ . ச . கி .

ஆக்சிஜன்!!

ஆக்சிஜன்!!!   நீ இறந்தவுடன் நானும் இறந்துவிடுவேன்!! ஆக்சிஜன் இல்லா இடத்தில் ஆறடி உடம்பு இருந்து என்னபயன்?!                  -அ . ச . கி .  

எதிர்பாரா நேரத்தில்!!

எதிர்பாரா நேரத்தில்!! எதிர்பாரா நேரத்தில் சட்டென தந்துவிடுகிறாய்! சேர்த்து வைக்க இடமில்லாமல் தவிக்கிறேன் நான்!! உன் முத்தத்தையும்! என் வெட்கத்தையும்!!                       -அ . ச . கி .

என்ன செய்வாய் நீ?!!

என்ன செய்வாய் நீ?!! எதிரில் நீ அமர்ந்திருக்கிறாய்! எட்டிவிடும் தூரம்! கைகள் கட்டிவிடும் தூரம்!! கண்கள் தேடுகின்றன! விரல்கள் நீள்கின்றன!! என் உடலால் உன் உடல் பூசுகிறேன்!! சுடும் மூச்சுக்காற்று சுகமாய் தீண்ட! உரசிடும் தூரத்தில் உதடுகள்!! முட்டி விடு! முத்தம் பதி! - உதட்டு யுத்தம் செய்!! என்று உன் உதடு துடிக்கின்றது!! சட்டென்று தீண்டாமல் நகர்ந்தால் என்ன செய்வாய் நீ?!!           -அ . ச . கி .  

கண்ணோடு கண்ணினை!

கண்ணோடு கண்ணினை! உன் கண்ணில் என் கண்ணை உற்றுப்பார்த்த வேளை... வள்ளுவன் குறளுக்கு தெளிவுரை கிடைத்தது!!              - அ . ச . கி .

நான் ஏங்கித்தவிக்கும் சில தருணங்கள்!!!

நான் ஏங்கித்தவிக்கும் சில தருணங்கள் !!! ஒவ்வொரு நாளும் விழித்து எழும்போது - உன் விழியில் விழுந்து எழவேண்டும் !! நீ தூங்கி விழும்போது என் மடியையே தூளி ஆக்கி தாலாட்ட வேண்டும் !! சிறிதும் பெரிதுமாய் நான் செய்யும் தவறுக்கு சிலிர்த்திடும் உன் புன்னகையால் தண்டிக்க வேண்டும் !! தோல்வியால் துவண்டு விழும்போது தோள் கொடுத்து தேற்றி விடவேண்டும் !! உன்னுள் வலி வலுக்கும்போது என் மார்பில் - உன் முகம் சாத்தி , முத்தத்தால் உடல் போர்த்தி கதகதப்பு சேர்த்திடுவேன் !! சோகம் சூழ்ந்துகொண்டு வருத்தும்போது உன் மார்பில் முகம் புதைத்து மல்கும் என் கண்ணீரை தேக்கவேண்டும் !! சிரித்து சிலாகித்து மகிழ்ந்திருக்கும்போது முத்தத்தில் உன்னை மூழ்கடிக்க வேண்டும் !! சில மாலைகள் சின்னக் குழந்தைகள் போல சிணுங்கல்களுடன் செலவிட வேண்டும் !! வாரக் கடைசியில் உனக்கு விடுமுறை அளித்து வித்தியாச சமையல் செய்வேன் ! சில சமயம்

முட்டாள் தினம்!!!

முட்டாள் தினம் !!! ஏமாற்றப்படும் சில தருணங்கள் !!! விட்டு விடுதலையாகிறோம் கருவறை என்னும் சிறு அறையை விட்டு - என்றெண்ணி சிரிக்கும் குழந்தை சிறைபட்டது பரந்த உலகில் !! தெரிந்த கேள்விகளை தேர்வு வினாத்தாளில் தேடும் மாணவன் !! இன்றாவது , என்னை கவனிப்பாளா ?! - என்ற நினைப்பில் என் கல்லூரித் தோழன் !! கனவில் வடித்த சிலை உயிர்பெற்றார் போல் - ஓர் மனைவி !! என்றெண்ணும் வாலிபன் !! இறுக்க மூடியிருக்கும் பிறந்த குழந்தையின் பிஞ்சுக் கையை பிரித்துப்பார்க்கும் தகப்பன் !! தன் துயரம் தனயன் அறியக்கூடாது - என்று தவிக்கும் தந்தை !!! இப்படி பல தருணங்களில் ஏமாறப் போகிறோம் எனத்தெரிந்தே ஏமாறுகிறோம் !! இவை எல்லாம் நமக்கு சுகம்தரும் ஏமாற்றங்கள் !! இதைத் தவிர இன்னும் சில !! நாளை வீட்டுக்கே வரும் உதவித்தொகை - என உரைக்கும் உயரதிகாரியின் பேச்சைகேட்டுத் திரும்பும் ஊன்றுகோல் கிழவன் !! மூன்றே மாதத்தில்