Posts

தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (3)

Image
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (3) இந்தக் கட்டுரையில் பழந்தமிழரின் வழிபாட்டு முறைகளையும் அதில் நிகழ்ந்து வந்த மாற்றங்களையும் பற்றி காண்போம். அவர்கள் இயற்கைக்கு நெருக்கமான வாழ்க்கை வந்தாலும், அவர்களின் வழிபாட்டு முறைகளிலும் இயற்கை ஆற்றல்கள் தான் பெரும்பான்மை இடத்தை பிடித்திருந்தன. ஆனாலும் மூடநம்பிக்கைகளும் தனித்த இடம் கொண்டிருந்தன. தமிழர் பின்பற்றிய வழிபாட்டு முறைக்கு தனித்த பெயர் இருந்ததில்லை. அதை ‘ தமிழர் வழிபாடு ’ என்றே கொள்வோம். அந்த தமிழர் வழிபாட்டில் ஒவ்வொரு வாழிடத்திற்கும் தகுந்தார் போல் வழிபாட்டுத் தெய்வங்கள் இருந்தன. குறிஞ்சி நிலத்தில் சேயோனும் , முல்லை நிலத்தில் மாயோனும் , மருத நிலத்தில் வேந்தனும் , நெய்தல் நிலத்தில் கடலோனும் , பாலை நிலத்திற்கு கொற்றவையும் வழிபாட்டுத் தெய்வங்களாய் இருந்து வந்தனர். இவை தவிர போரில் இறந்தவர்களையும், மூதாதையர்களையும் தெய்வமாய் வழிபடும் பழக்கமு தமிழர்களிடையே இருந்து வந்தது. போரில் இறந்தவர்களுக்கு ‘ நடுகற்கள் ’ அமைத்து அவர்கள் பெருமையை போற்றினர். இன்று இருக்கும் பல ஹிந்து வழிப்பாட்டுத் தலங்கள் ஒரு காலத்தில் தமிழர் வழிபாட்டிடங்கள

தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (2)

Image
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (2) தொல்பழங்காலத்தலிருந்தே திராவிட இன மக்கள் அல்லது தமிழ்ப்பூர்வக்குடிகள் இந்தியா முழுமையும் பரவியிருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. சிந்துப்பகுதிகளில், மஹாராஷ்டிரத்தில், இலங்கையில், இன்ன பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் திராவிட குடியேற்றங்களுக்கான சான்றுகளை வெளிக்கொணர்ந்ததோடு, அதன் தொன்மையை, வளமையை உறுதிப்படுத்தியுள்ளன. பீஹார், வங்காளம், ஒரிஸா போன்ற இடங்களில் இன்றும் குய், குருக் போன்ற 14 தமிழின் கிளை மொழிகள் ( திராவிட மொழிக்குடும்பம் ) இன்றும் உயிர்த்திருப்பது தமிழர்கள் நாடெங்கிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நிறுவுகிறது. ஆரியர்களின் வருகையும் எழுச்சியும், அதனோடு ஒட்டி இங்கிருந்த பூர்வக்குடிகளின் வீழ்ச்சியும் தோல்வியும், அவர்களை தென்கோடி எல்லைக்கு தள்ளிவிட்டது எனலாம். ஹீராஸ் பாதிரியாரின் கூற்றுபடி ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படும் மொழி திராவிட மொழிக்குடும்பத்தின் பெற்றோராகும். அந்த வகையில் திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியான தமிழே ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படுவது என்று கொள்ள வேண்டும். பலுசிஸ்தானத்தில் காணப்படும் பிராஹ

தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (1)

Image
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (1) (நானறிந்த வரையிலான) பழந்தமிழர் வரலாற்றையும் அவர்தம் வாழ்க்கை முறையையும் அக, புற வாழ்க்கையினையும் தொகுத்து எழுதலாம் என்று எண்ணி துவங்குகிறேன். வரலாறு மிக நெடியது. சுருக்கிச் சொன்னாலும் ஒரு நாள் சொல்லலாம். அதனால் இதனை சின்னச்சின்ன தொடர் கட்டுரையாக எழுதுகிறேன். முதல் கட்டுரையில் தமிழர் பற்றிய சிறு முன்னுரை. தமிழ்நாடு மரபார்ந்த வகையில் கடல்களையும் மலைகளையும் எல்லைகளாக கொண்டுள்ளது. கால ஓட்டத்தில் ஆந்திரம், கேரளம் போன்று தனி மொழிகள் கிளைத்து தனித்தனி மாநிலங்களாகிவிட இன்று இருக்கும் தமிழகம் மட்டும் தமிழ்நாடாகியிருக்கிறது. முதன்மை நகரங்களாக முறையே மதுரை, தஞ்சாவூர், கோயமுத்தூர் மற்றும் காஞ்சிபுரம் முறையே பாண்டிய, சோழ, சேர, தொண்டை மண்டலங்களாக இருந்தன. இவை தவிர வெவ்வேறு காலக்கட்டங்களில் இலங்கையின் ஈழமும் தமிழர் வாழ்நிலமாக இருந்திருக்கிறது. தட்பவெப்ப நிலையிலும், இயற்கை வளங்களையும் கணக்கில் கொண்டால் தமிழகம் அவ்வளவு சிறப்பானது என்று கூறிவிட முடியாது. பெரும்பாலும் சூடு அதிகமான இடங்கள் தான். மழையை நம்பிய வெள்ளாமை என்பது குறைவுதான். பாசனம் தான் பெ

தமிழ்த்தந்தை வாழ்த்து!

Image
தமிழ்த்தந்தை வாழ்த்து! (03/06/1924 - 07/08/2018) —————————— குமரியில் வள்ளுவனை நிறுத்தி இந்தியா இங்கிருந்து துவங்குகிறது என்றாய்! கொச்சைத் தமிழ் நீக்கி - பல கொஞ்சு தமிழ் செய்தாய்! சிலம்பையும் குறளையும் திசையெல்லாம் நெய்தாய்! எழுபது எண்பது ஆண்டாய் எழுத்து என்பது ஆண்டாய்! தெற்கிலிருந்து உதித்த முழுச் சூரிய துண்டாய்! எழுதாத நாளில்லை எதிர்க்காத ஆளில்லை எம்கோன் தமிழ் எழுத - சிறந்த எழுது கோளில்லை! உடன்பிறப்புக் கடிதங்கள் உற்சாக பானங்கள்! உன் கரகரப்பு மோனங்கள் உயிர்தடவும் கானங்கள்! பெரியாருக்கு தடி அடையாளம் அண்ணாவுக்கு பொடி அடையாளம் உனக்கு என்றும் தமிழ்க்குடி அடையாளம்! உன் மெய் பேணா திருந்ததனால்! உன் மை பேனா திருத்தாதனால்! உண்மை ஏனோ தெரிவில்லை - சொல் வன்மை இராவணன் வரவில்லை! என் தகையே தாய்த் தமிழே கலையே கடலே காதலே கதிரே கரகரப்பே! எம் கோனே தமிழ் தேனே தெற்குச் சூரியனே மடலே கனலே நெருப்பே சுறுசுறுப்பே! இதயத்தை இரவல் பெற்ற இளவலே! அண்ணாவிடம் திருப்பித்தர போனாயோ? தமிழ

வைகை நதி நாகரிகம்!

Image
பொருளாதாரச் செழிப்பு —————————— அன்றைய மதுரையின் பொருளாதாரச் செழிப்பை உணர்த்தும் விதமாய் பல இலக்கியச் சான்றுகள், நேரடிச் சான்றுகளும் கிடைக்கின்றன. அதில் ஒருத்தியாக தான் கோதை நிற்கிறாள். அதே சமயம் பொருளாதாரம் எப்படி பரவி விரவி கிடந்தது என்பதை பறைசாற்றும் விதமாய் ‘ அழகர்கோயில் கல்வெட்டு ’ நிற்கிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணப்பள்ளி அமைக்க மதுரையைச் சேர்ந்த ‘ ஆதன் ’ என்னும் பொற்கொல்லன் தானம் அளித்துள்ளான் என்று உரைக்கிறது. இது மதுரை பொற்கொல்லர்களின் உயர்வை காட்டுகிறது. அதேபோல் அதிக எண்ணிக்கையிலான பொற்கொல்லர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் கிடைக்கின்றன. அடுத்ததாய் ஒரு இலக்கிய ஆதாரம். அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாண்டியநாட்டு செல்வத்தை நந்த வம்சத்தின் செல்வச்செழிப்புடன் ஒப்பிடுகின்றார் ஆசிரியர். பொருள் தேடி வடதிசை சென்ற தலைவன் வர காலதாமதம் ஆனதால் கோபமுற்ற தலைவி, “பாடலிபுத்திரத்திலிருந்து எடுத்து சோணை நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்து வைத்த செல்வம், நம் செல்வத்தைவிட அதிகம் என்று எண்ணி அங்கு தேடிக்கொண்டிருக்கிறானோ?” என்று அந்

கடல்தாண்டிய வணிகம்

Image
கடல்தாண்டிய வணிகம் வைகை நதி கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில் இருக்கிறது ‘ அழகன்குளம் ’ என்ற துறைமுக நகரம். இன்று கோட்டைமேடு என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், ஓரு உடைந்த பானையை கண்டுபிடித்தனர். அது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று மதிப்பிட்டனர். 16 செண்டிமீட்டர் அகலம் கொண்ட அந்த உடைந்த பானையில் ஒரு கப்பல் வரையப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கப்பல் ரோமனியக் கப்பல் என்று உறுதி செய்துள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில் ரோமனியர்களுடன் கடல் வாணிபம் இருந்தது பல ஆதாரங்களுடன் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது.​ ​ கிரேக்கர்களும், ரோம் நாட்டவரும் அன்று ‘ யவனர்கள் ’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களை பற்றிய குறிப்பும் தமிழ் இலக்கியத்தில் ஏராளமாய் உள்ளது. புறநானூறு, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் பல தமிழ்ப்புலவர்களும், பெரிபுளஸ்,  ஸ்டராபோ,  பிளினி,  தாலமி போன்ற கிரேக்கத்தை சேர்ந்த புலவர்களும் இந்த வர்த்தகத்தை பற்றி விரிவாக பதிவு செய்துள்ளனர். இதுவரை இத்தகைய இலக்கியச் சான்றுகள் தான் இந்த வணிகத்தை பற்றி பேசி வந்தன. அத