Posts

Showing posts from March, 2017

நீல நிறப்புடவை!

நீல நிறப்புடவை! பார்வை பட்டதுமே பரிதவிக்க விட்டுடுமே! அதுபோல் இல்லை! காதுமடல் கண்டதுமே காதல் கிசுகிசுக்குமே! அதுபோல் இல்லை! வசதியாய் நேரம்கிடைத்தாலும் வார்த்தைகள் தடுமாறுமே! அதுபோல் இல்லை! விரல்நுனி பட்டாலும் விசுக்கென்று விலகிடுமே! அதுபோல் இல்லை! கன்னக்குழி அழகென்று கவிதை எழுதிடுமே! அதுபோல் இல்லை! கண்டதுமே காதல் கண்ணுக்குள் கலங்கடிக்குமே! அதுபோல் இல்லை! கண்ணே! கலைமானே! காவியமொழி கேட்டிடுமே! அதுபோல் இல்லை! இமைகள் கொண்டே இதழ்கள் வருடப்படுமே! அதுபோல் இல்லை! இரவின் நீள அகலங்களை அலைபேசி அழைப்புகள் அளந்திடுமே! அதுபோல் இல்லை! இங்கும் அங்குமாய் சில உரசல்களில் உயிர் துளிர்த்திடுமே! அதுபோல் இல்லை! காதல் மனங்களில் கலர் கனவுகள் வியாபித்திருக்குமே! அதுபோல் இல்லை! விரல் இடுக்குகளில்- ஆண் பெண் விரதங்கள் நசுக்கப்படுமே! அதுபோல் இல்லை! இப்படி எதுபோலும் துவங்கவில்லை நம் காதல் நொடிகள்! பேசியே பழகினோம்! பழகுதல் வேண்டியே பேசினோம்!! அவை எல்லாம் - என் உயிர் உணர்ந்த நொடிகள்! உணர்வு இழந்த நொடிகள

சமாதானம்!

சமாதானம்! இரண்டு பக்க சன்னலோர இருக்கைகள் காலியாக இருந்தாலும் - என்றும் இடப்பக்கமே நீ உட்காருவது பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் என்னைக் காணவே என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்! வலதுபக்கம் வெயில் விழும் என்பது தெரிந்தும்! -அ.ச.கி.

தயவுசெய்து!

தயவுசெய்து! நீ என் படைப்புகளை படிக்கமாட்டாய் என்கிற தைரியத்தில்தான் உன் மீதான காதலை எல்லாம் கவிதைகளாய் பதிவிடுகிறேன்! தயவுசெய்து படித்துவிடாதே! அதன் ஆழம் உன்னை மூழ்கடித்துவிடக்கூடும்! -அ.ச.கி.

தொழில்!

தொழில்! "தல்" என முடிவதெல்லாம் தொழிற்பெயர் என்று கொண்டால் நான் செய்யும் தொழில் - காதல்!! -அ.ச.கி.

அரசியல்வாதி!

அரசியல்வாதி! மனிதன் - ஒவ்வொருவனும் ஓர் அரசியல்வாதி ! வாழும்போது வையத்தில் பதவி தேடுகிறான்! செத்தாலும் வைகுண்டத்தில் பதவி தேடுகிறான்!! -அ.ச.கி.

முயலாமை!

முயலாமை! என்று விடியும் என்று ஏங்காதே! அதுவரை நீயும் தூங்காதே!! தோல்விகளைக் கண்டு வெம்பாதே! வீழ்ந்தால் எழமுடியாதென்பார் நம்பாதே!! முடியவே முடியாதென்பார் கேளாதே! நாளைவரை உன் லட்சியம் தாளாதே!! முயலாமை என்றும் வெல்லாதே! வென்றாலும் நீ துள்ளாதே!! - அ.ச.கி.

என் கவிதை!

என்   கவிதை ! நான்   எழுதும்   கவிதையின் முதல்   ரசிகையாய் நீ   இருக்கவேண்டும்   என்று   ஏங்கி னேன் ! ஆனால்   உனக்கு   முன்னால் மருத்துவர்கள்   பார்த்துவிட்டார் களாமே நம்   குழந்தையை ?! - அ . ச . கி .

நான் உணர்ந்தவை, உண்மை என்று நம்புபவை! [5]

பண்பாட்டின் பெயரால் நம் நாட்டில் நடக்கும் இறக்குமதிகள் ஏராளம். அதைச் சுற்றி பெரும் சந்தையே அமைந்து வளம் கொழிக்கிறது. வெளிநாட்டின் பண்பாடுகள் முற்றிலும் வெறுக்கத்தக்கவை என்றோ, வேண்டத்தகாதவை என்றோ நான் அர்த்தம் புகுத்தவில்லை! ஆனால், அது நம் நாட்டுசூழலுக்கு " ஏற்புடையதா " என்பது விவாதத்துக்கு உட்படுத்தவேண்டியது அவசியம்! பண்பாடு என்பது " பண்படு " என்பதின் நீட்சியே! மனதையும் உடலையும் பண்படுத்துதல்தான் பண்பாடு, சுற்றத்துடம் சுகம்காணுதலே பண்பாடு! " ஹேராம் " படத்தில் ஒரு வசனம் வரும், "5000 ஆண்டுகட்கு முன்பே நகர் அமைத்து, அதை மிகச் சிறப்பான கட்டமைப்புடன் மேலெழுப்பி, சாக்கடைத்திட்டம் வரை ஏற்படுத்தியவர்கள் நாம்! குழந்தைக்கு விளையாட்டுப்பொருள் செய்து கொடுத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது! " #நான் உணர்ந்தவை, உண்மை என்று நம்புபவை! # அ . ச . கி .  # பகுத்தறி

இரோம் சர்மிளா

இரோம் சர்மிளா               இவரை பற்றி அறியாதவர்கள் , தயவுசெய்து உங்கள் "Google" ஆண்டவரை இதற்காகவும் உபயோகியுங்கள் . ஏறக்குறைய 5,500 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த இரும்பு பெண்.                 12 மணிநேரம் மட்டும் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, அதை 12 வருடம் சொல்லி அரசியல் செய்யும் சாக்கடைகளுக்கு மத்தியில், புனித ஆறாய் ஓடுதல் மிகக்கடினம்! அதை 16 வருடங்களாய் செய்து காட்டிய புனித ஆத்மா, இந்த இரோம் சர்மிளா. தன் மண் மணிப்பூருக்காக !                காமராசரையும், நல்லக்கண்ணுவையுமே தோற்கடித்த நாடு இது. இந்த தலைமுறைக்கு தன் சுயரூபத்தை மேலும் ஒருமுறை சர்மிளா மூலம் உணர்த்தியிருக்கிறார்கள் நம் மக்கள்!          நன்றாய் சொன்னான் கண்ணதாசன் அன்றே ,  ' இந்தநாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும் !' # அ . ச . கி .

முயற்சி போர்!

முயற்சி போர்! இனி வாழ்க்கை எல்லாம் வெள்ளைத் தாளே! புது மை ஊற்றி எழுதிடுவேன்! புதுமை தேற்றி எழுந்திடுவேன்!! நாளும் இனிமேல் எந்தன் நாளே! வெற்றிகள் வந்து, மாலை யிடும்! புகழின் உச்சியும் என் காலைத் தொடும்!! மூச்சின் இடைவெளியை வெற்றிகள் நிறைக்கும்! - இனி விரலைச் சொடுக்க, அலைகள் எழும்பும்! புருவம் உயர்த்த, மலையும் ஒதுங்கும்!! விழுவதெல்லாம் எழுந்திடவே! நம்பிக்கைகள் கொண்டே நான் நடப்பேன்! முயற்சி போர்கள் நான் தொடுப்பேன்!! வெற்றியைக் கண்ணில் காணாமல், 'முயற்சிப்போர்' தான் சோர்வதில்லை! முயற்சி 'போர்'தான் நிற்பதில்லை!! வெற்றியை எங்கும் ஒளித்திருந்தால், வானம் கிழித்து எறிந்திடுவேன்! கடலை சுழித்து எரித்திடுவேன்!! இனி வாழ்க்கை எல்லாம் வெள்ளைத் தாளே! புது மை ஊற்றி எழுதிடுவேன்! புதுமை தேற்றி எழுந்திடுவேன்!!            -அ.ச.கி.