Posts

Showing posts from 2018

சொர்க்கம்!

நீ நான் நமது வாழ்க்கை சொர்க்கம்! உலகம் தாண்டி போக வா! # அசகி

தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (3)

Image
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (3) இந்தக் கட்டுரையில் பழந்தமிழரின் வழிபாட்டு முறைகளையும் அதில் நிகழ்ந்து வந்த மாற்றங்களையும் பற்றி காண்போம். அவர்கள் இயற்கைக்கு நெருக்கமான வாழ்க்கை வந்தாலும், அவர்களின் வழிபாட்டு முறைகளிலும் இயற்கை ஆற்றல்கள் தான் பெரும்பான்மை இடத்தை பிடித்திருந்தன. ஆனாலும் மூடநம்பிக்கைகளும் தனித்த இடம் கொண்டிருந்தன. தமிழர் பின்பற்றிய வழிபாட்டு முறைக்கு தனித்த பெயர் இருந்ததில்லை. அதை ‘ தமிழர் வழிபாடு ’ என்றே கொள்வோம். அந்த தமிழர் வழிபாட்டில் ஒவ்வொரு வாழிடத்திற்கும் தகுந்தார் போல் வழிபாட்டுத் தெய்வங்கள் இருந்தன. குறிஞ்சி நிலத்தில் சேயோனும் , முல்லை நிலத்தில் மாயோனும் , மருத நிலத்தில் வேந்தனும் , நெய்தல் நிலத்தில் கடலோனும் , பாலை நிலத்திற்கு கொற்றவையும் வழிபாட்டுத் தெய்வங்களாய் இருந்து வந்தனர். இவை தவிர போரில் இறந்தவர்களையும், மூதாதையர்களையும் தெய்வமாய் வழிபடும் பழக்கமு தமிழர்களிடையே இருந்து வந்தது. போரில் இறந்தவர்களுக்கு ‘ நடுகற்கள் ’ அமைத்து அவர்கள் பெருமையை போற்றினர். இன்று இருக்கும் பல ஹிந்து வழிப்பாட்டுத் தலங்கள் ஒரு காலத்தில் தமிழர் வழிபாட்டிடங்கள

தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (2)

Image
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (2) தொல்பழங்காலத்தலிருந்தே திராவிட இன மக்கள் அல்லது தமிழ்ப்பூர்வக்குடிகள் இந்தியா முழுமையும் பரவியிருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. சிந்துப்பகுதிகளில், மஹாராஷ்டிரத்தில், இலங்கையில், இன்ன பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் திராவிட குடியேற்றங்களுக்கான சான்றுகளை வெளிக்கொணர்ந்ததோடு, அதன் தொன்மையை, வளமையை உறுதிப்படுத்தியுள்ளன. பீஹார், வங்காளம், ஒரிஸா போன்ற இடங்களில் இன்றும் குய், குருக் போன்ற 14 தமிழின் கிளை மொழிகள் ( திராவிட மொழிக்குடும்பம் ) இன்றும் உயிர்த்திருப்பது தமிழர்கள் நாடெங்கிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நிறுவுகிறது. ஆரியர்களின் வருகையும் எழுச்சியும், அதனோடு ஒட்டி இங்கிருந்த பூர்வக்குடிகளின் வீழ்ச்சியும் தோல்வியும், அவர்களை தென்கோடி எல்லைக்கு தள்ளிவிட்டது எனலாம். ஹீராஸ் பாதிரியாரின் கூற்றுபடி ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படும் மொழி திராவிட மொழிக்குடும்பத்தின் பெற்றோராகும். அந்த வகையில் திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியான தமிழே ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படுவது என்று கொள்ள வேண்டும். பலுசிஸ்தானத்தில் காணப்படும் பிராஹ

தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (1)

Image
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (1) (நானறிந்த வரையிலான) பழந்தமிழர் வரலாற்றையும் அவர்தம் வாழ்க்கை முறையையும் அக, புற வாழ்க்கையினையும் தொகுத்து எழுதலாம் என்று எண்ணி துவங்குகிறேன். வரலாறு மிக நெடியது. சுருக்கிச் சொன்னாலும் ஒரு நாள் சொல்லலாம். அதனால் இதனை சின்னச்சின்ன தொடர் கட்டுரையாக எழுதுகிறேன். முதல் கட்டுரையில் தமிழர் பற்றிய சிறு முன்னுரை. தமிழ்நாடு மரபார்ந்த வகையில் கடல்களையும் மலைகளையும் எல்லைகளாக கொண்டுள்ளது. கால ஓட்டத்தில் ஆந்திரம், கேரளம் போன்று தனி மொழிகள் கிளைத்து தனித்தனி மாநிலங்களாகிவிட இன்று இருக்கும் தமிழகம் மட்டும் தமிழ்நாடாகியிருக்கிறது. முதன்மை நகரங்களாக முறையே மதுரை, தஞ்சாவூர், கோயமுத்தூர் மற்றும் காஞ்சிபுரம் முறையே பாண்டிய, சோழ, சேர, தொண்டை மண்டலங்களாக இருந்தன. இவை தவிர வெவ்வேறு காலக்கட்டங்களில் இலங்கையின் ஈழமும் தமிழர் வாழ்நிலமாக இருந்திருக்கிறது. தட்பவெப்ப நிலையிலும், இயற்கை வளங்களையும் கணக்கில் கொண்டால் தமிழகம் அவ்வளவு சிறப்பானது என்று கூறிவிட முடியாது. பெரும்பாலும் சூடு அதிகமான இடங்கள் தான். மழையை நம்பிய வெள்ளாமை என்பது குறைவுதான். பாசனம் தான் பெ

தமிழ்த்தந்தை வாழ்த்து!

Image
தமிழ்த்தந்தை வாழ்த்து! (03/06/1924 - 07/08/2018) —————————— குமரியில் வள்ளுவனை நிறுத்தி இந்தியா இங்கிருந்து துவங்குகிறது என்றாய்! கொச்சைத் தமிழ் நீக்கி - பல கொஞ்சு தமிழ் செய்தாய்! சிலம்பையும் குறளையும் திசையெல்லாம் நெய்தாய்! எழுபது எண்பது ஆண்டாய் எழுத்து என்பது ஆண்டாய்! தெற்கிலிருந்து உதித்த முழுச் சூரிய துண்டாய்! எழுதாத நாளில்லை எதிர்க்காத ஆளில்லை எம்கோன் தமிழ் எழுத - சிறந்த எழுது கோளில்லை! உடன்பிறப்புக் கடிதங்கள் உற்சாக பானங்கள்! உன் கரகரப்பு மோனங்கள் உயிர்தடவும் கானங்கள்! பெரியாருக்கு தடி அடையாளம் அண்ணாவுக்கு பொடி அடையாளம் உனக்கு என்றும் தமிழ்க்குடி அடையாளம்! உன் மெய் பேணா திருந்ததனால்! உன் மை பேனா திருத்தாதனால்! உண்மை ஏனோ தெரிவில்லை - சொல் வன்மை இராவணன் வரவில்லை! என் தகையே தாய்த் தமிழே கலையே கடலே காதலே கதிரே கரகரப்பே! எம் கோனே தமிழ் தேனே தெற்குச் சூரியனே மடலே கனலே நெருப்பே சுறுசுறுப்பே! இதயத்தை இரவல் பெற்ற இளவலே! அண்ணாவிடம் திருப்பித்தர போனாயோ? தமிழ

வைகை நதி நாகரிகம்!

Image
பொருளாதாரச் செழிப்பு —————————— அன்றைய மதுரையின் பொருளாதாரச் செழிப்பை உணர்த்தும் விதமாய் பல இலக்கியச் சான்றுகள், நேரடிச் சான்றுகளும் கிடைக்கின்றன. அதில் ஒருத்தியாக தான் கோதை நிற்கிறாள். அதே சமயம் பொருளாதாரம் எப்படி பரவி விரவி கிடந்தது என்பதை பறைசாற்றும் விதமாய் ‘ அழகர்கோயில் கல்வெட்டு ’ நிற்கிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணப்பள்ளி அமைக்க மதுரையைச் சேர்ந்த ‘ ஆதன் ’ என்னும் பொற்கொல்லன் தானம் அளித்துள்ளான் என்று உரைக்கிறது. இது மதுரை பொற்கொல்லர்களின் உயர்வை காட்டுகிறது. அதேபோல் அதிக எண்ணிக்கையிலான பொற்கொல்லர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் கிடைக்கின்றன. அடுத்ததாய் ஒரு இலக்கிய ஆதாரம். அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாண்டியநாட்டு செல்வத்தை நந்த வம்சத்தின் செல்வச்செழிப்புடன் ஒப்பிடுகின்றார் ஆசிரியர். பொருள் தேடி வடதிசை சென்ற தலைவன் வர காலதாமதம் ஆனதால் கோபமுற்ற தலைவி, “பாடலிபுத்திரத்திலிருந்து எடுத்து சோணை நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்து வைத்த செல்வம், நம் செல்வத்தைவிட அதிகம் என்று எண்ணி அங்கு தேடிக்கொண்டிருக்கிறானோ?” என்று அந்

கடல்தாண்டிய வணிகம்

Image
கடல்தாண்டிய வணிகம் வைகை நதி கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில் இருக்கிறது ‘ அழகன்குளம் ’ என்ற துறைமுக நகரம். இன்று கோட்டைமேடு என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், ஓரு உடைந்த பானையை கண்டுபிடித்தனர். அது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று மதிப்பிட்டனர். 16 செண்டிமீட்டர் அகலம் கொண்ட அந்த உடைந்த பானையில் ஒரு கப்பல் வரையப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கப்பல் ரோமனியக் கப்பல் என்று உறுதி செய்துள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில் ரோமனியர்களுடன் கடல் வாணிபம் இருந்தது பல ஆதாரங்களுடன் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது.​ ​ கிரேக்கர்களும், ரோம் நாட்டவரும் அன்று ‘ யவனர்கள் ’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களை பற்றிய குறிப்பும் தமிழ் இலக்கியத்தில் ஏராளமாய் உள்ளது. புறநானூறு, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் பல தமிழ்ப்புலவர்களும், பெரிபுளஸ்,  ஸ்டராபோ,  பிளினி,  தாலமி போன்ற கிரேக்கத்தை சேர்ந்த புலவர்களும் இந்த வர்த்தகத்தை பற்றி விரிவாக பதிவு செய்துள்ளனர். இதுவரை இத்தகைய இலக்கியச் சான்றுகள் தான் இந்த வணிகத்தை பற்றி பேசி வந்தன. அத

அஹிம்சை பூமி!

அஹிம்சை பூமி ! வாங்க வாங்க எல்லாரும் ஒன்னா கூடுவோம்! ஊருசிரிக்கும் எங்க வாழ்க்கைய சேர்ந்து பாடுவோம்! சாதிக்க தடையான சாதியிடம் தோத்திருந்தோம்! ஈரோட்டு வெண்தாடி - வந்து சத்தமிட காத்திருந்தோம்! பெயரளவில் சாதியெல்லாம் மறைஞ்சு போக பாத்திருந்தோம்! வேரளவில் இன்னும் நின்னு - ரத்தம் உறிஞ்சு போக பாத்திருக்கோம்! உலகம்பேசும் திட்டமென்று ஊரை எரிக்கிறோம்! கையாலாகா எங்கள் நிலையை எண்ணிச் சிரிக்கிறோம்! உறவெல்லாம் சாக - நின்னு பார்த்த கண்ணிது! நம் வீட்டுக்குள்ளும் கொன்னு பார்க்கும் மண்ணிது! வள்ளலாரும் வள்ளுவனும் வாழ்ந்த மண்ணிது! எவன் செத்த எனக்கென்ன என்று நினைக்குது! நீரையுந்தான் காசுகொடுத்து வாங்க பழகினோம்! சத்து நிறைஞ்சு இருக்குதுனு பூசி மொழிகினோம்! நீட்டிய பணத்தை நமதென்று வாங்கிப் பழகினோம்! - இன்று ‘நீட்’ என்று நீட்டும்போது திக்கித் திணறினோம்! நாடுதனை உயர்த்த என்று பல வரி(லி)யும் பொறுக்கிறோம்! நல்ல கல்வி தருவோம் என்று நாலு உயிரை எடுக்கிறோம்! என்ன செய்ய! இங்கே அஹிம்சை உலகம் படைக்கக் கூட போர்கள் தானே புரிகிறோம்! #அசகி

தொன்மதுரை!

தொன்மதுரை! மதுரை என்று சங்க இலக்கியங்கள் சொல்வதெல்லாம் இன்றைய மதுரையை அல்ல என்றொரு கருத்துண்டு. அந்த கருத்தை மெய்பிக்க அல்லது பலம் சேர்க்க சங்க இலக்கியங்களில் இருந்தே பல சான்றுகளும் முன் வைக்கப்படுகின்றது. அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது அன்றைய தலைநகரான மதுரையின் இடமமைப்பு. சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் அன்றைய மதுரை என்பது திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்காக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று இருக்கும் மதுரை, திருப்பரங்குன்றத்திலிருந்து தென்கிழக்காக இருக்கிறது. மதுரையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கீழடியும் அங்கிருந்து வெளிவரும் அதிசயங்களும் அந்தக் கருத்துக்கு வலுசேர்க்கிறது. கீழடி அகழ்வாய்வு செய்யப்படும் இடம் மணலூர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும் (பாண்டியர்களின் பழைய தலைநகர் என்று குறிப்பிடப்படுகிறது). அகழ்வாய்வு மேற்கொள்ளப்படும் அந்தத் தென்னந்தோப்பு மணலூரின் கண்மாய்க்கரைமேட்டில் தான் அமைந்திருக்கிறது. முதல் தமிழ்ச்சங்கம் இருந்த மதுரையும் கபாடபுரமும் கடல்கொண்டுபோக பின் உருவானது தான் இன்றைய மதுரை என்று ‘ இறையனார் அகப்பொருள் உரை ’ என்ற நூல் சொல்

உதகை!

உதகை! மலைமீது படுத்துறங்கும் மேகம்! பச்சை படிக்கட்டோ எனத் தோன்றும் தேயிலை அடுக்குகள்! இறங்கிவந்து வருடிப் போகும் மேக மெத்தைகள்! நீரில் விழுந்து ஓடிவந்து முகம் மோதும் வாடைக்காற்று! மேற்தோலின் துளை வழியே ஊசி ஏற்றும் குளிர்! பனியோ இல்லை பால் வண்ண துணியோ என்று திகைக்கும் அளவு மூட்டம்! மூச்சுக்காற்றுக்கும் வண்ணம் ஏற்றிக்கொண்டிருக்கும் மண்ணக தொழிற்சாலை! குயில் கூவாத காலைகளையும் அழகாய் காட்டிக்கொண்டிருக்கும் விண்ணகம் பொழிற்காலை! இடம் பெயரத் தோன்றாத எண்ணம் குளிர்சோலை! சுடும் நிலவொன்றும் தந்திருக்கக்கூடாதா என்று அலற்றிட வைத்திடும் வைகறைப் பொழுதுகள்! இத்தனையும் தன்னுள் பூட்டி வைத்திருக்கிறது ஊட்டி! இத்தனை இத்தனை இருந்தும் இங்கு வந்த கண்ட பின்னும் இறந்து போக தோன்றுகிறதாமே சிலருக்கு?! #அசகி

தேனூர் கருவேலமரம்

Image
தேனூர் கருவேலமரம் முதலாம் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டும், சாடவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும், சங்க இலக்கியங்களும் தேனூரை பற்றிய சிறப்பை பதிவு செய்வதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் யாரும் தேடிக் கண்டெடுக்காமல் சுயம்புவாகவே வெளிவந்த கண்டுபிடிப்பு ஒன்று உண்டு. தேனூரில் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையில், கருவேலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தூருக்கு அடியிலிருந்து ஒரு மண்முட்டி மேலெழுந்து வர, அதை அங்கிருந்த சிறுவர்கள் எடுத்து விளையாடத் துவங்கினர். அதனுள்ளே விரலளவு உள்ள ஏழு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவை ஏழும் தங்கக்கட்டிகள், மொத்தம் சுமார் 700கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகள் . ஏழு தங்கக்கட்டிகளிலும் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிலும் ஒரே பெயர் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் ஒரு பெண்ணின் பெயர் - ‘ கோதை ’. இந்த தங்கக்கட்டிகள் கி.மு. முதல் நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்பொருள்துறை கூறுகிறது. இந்தியாவிலேயே பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் தங்கக்கட்டிகள் இங்கு தான் முதலில் கிடைத்திருக்கிறது. 2100 ஆண்டுகளுக்கு முன் த

நடுகற்கள்

Image
நடுகற்கள் கற்கள் எல்லா காலத்திலும், எல்லா இனத்திலும், எல்லா வரலாற்றிலும் முக்கிய இடம் பெறுகின்றது. உண்மையில் அவை தான் பல பழம்வரலாறுகளை சுமந்து நிற்கின்றன. இறந்தவீரன் எதிர்காலத்திலும் பேசப்பட வேண்டும் என்று எண்ணிய நம் முன்னோர் பின்பற்றிய முறை தான் நடுகற்கள். புறத்திணைகளில் ஏழுவகை, வெட்சி முதல் தும்பை வரை போர் செய்யும் முறைகளை வகுத்திருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு வகைப்போரிலும் சிறப்பான வீரத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு நடுகல் எழுப்பப்பட்டிருக்குறது. கூடுதல் ஆச்சரியமாக ஒரு நடுகல் எப்படி இருக்கவேண்டும் என்கிற இலக்கணத்தை ‘ தொல்காப்பியம் ’ பேசுகிறது. காலம் எல்லாம் பேசப்படவேண்டிய புகழ்வரிகளை சுமந்து நிற்கப்போகும் கல் அது, ஆதலால் நல்ல ‘விளைந்த கல்லாக’ இருக்க வேண்டும் என்கிறான் தொல்காப்பியன். விளைந்த கல்லா, விளையாத கல்லா என்பதை மேலோடும் ரேகையை தட்டிப்பார்த்தே சொல்பவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர். அம்மி செய்யக்கூட விளைந்த கல் தான் தேவைப்படும். விளையாத கல்லில் வைத்து இடித்தால், அம்மியும் இடிந்து போகும்! பின் அதை நன்கு நீராட்டி, நல்லதொரு இடத்தில் நடவேண்டும

சிலப்பதிகாரத்தின் நிகழ் சான்றுகள்

Image
எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய ‘ வைகைநதிநாகரிகம் ’ என்ற நூல் படித்தேன். அதிலிருந்து சிறு சிறு துணுக்குகளாக இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். அதன்படி இன்று முதலாவதாக ‘வரலாற்றின் ஆச்சரியங்களில்’ ஒன்றாக இன்றும் இருக்கும் சிலப்பதிகாரம் பற்றிய சிறு துணுக்கு. சிலப்பதிகாரத்தின் நிகழ் சான்றுகள் மதுரைக்கு அருகே உள்ள ஒரு சிற்றூர் கடச்சனேந்தல் . அங்கு ‘ கவுந்தியடிகள் ’ பெயரில் ஓர் ஆசிரமம் இருப்பதை (கவுந்தியடிகள் ஆசிரமம்) பார்த்து திகைக்கிறார் ஆசிரியர். கோவலன் கண்ணகியும் அறிந்த நம்மில் பலரும் கவுந்தியடிகளை அறிந்திருப்பது இல்லை. அவர்களை பற்றி கீழே அவ்வூர் மக்கள் வாயிலாகவே காண்போம். திகைப்புற்ற ஆசிரியர், அவ்வூர் மக்களிடம் “எதற்காக கவுந்தியடிகள் பெயரில் ஒரு ஆசிரமம்?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “அந்த அம்மாதானே கோவலனையும் கண்ணகியையும் எங்க ஊருக்கு கூட்டிட்டு வந்துச்சு”. அவ்வூரில் யாரும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் இல்லை. அதை தினமும் படித்து பகர்பவர்களும் இல்லை. இருப்பினும் சிலப்பதிகாரம் பற்றி அரைகுறையாய் பள்ளியில் பயின்ற நம்மில் பலரும் அறியாத ஓர் செய்தியை, கவுந்தியடிகள்

இலக்கியமும் வரலாறும்

இலக்கியமும் வரலாறும் பெரும்பாலும் ஊருக்கு ஒவ்வொரு விதமான கதை இருக்கும். குறைந்தபட்சம் ஒரு நாட்டுக்கு ஒரு பாணியில் கதை இருக்கும், இராமாயணத்தை போல. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான இராமாயணம் சொல்லப்படும். ஆனால் கிட்டதட்ட எல்லா ஊரிலும், எல்லாரும் அறிந்த ஒற்றைக் கதை உண்டு என்றால் அது காக்கை கதை. வீட்டிற்கு வெளியே ‘ காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள் ’ என்பது ஒரு கதை அல்லது நம்பிக்கை. இது கதை அல்ல உண்மை என்று சொன்னால் நம்புவீர்களா? மேற்கொண்டு படியுங்கள். நம்முன் இங்கு பல்வேறு இலக்கியங்களும் வரலாறுகளும் ஊடோடிக் கிடக்கின்றன. அந்த இலக்கியங்களில் பல வரலாறுகள் என்று புகட்டப்படுகின்றன. பல உண்மை வரலாறுகள் நமக்கு சொல்லப்படாமலேயே புதையுண்டு கிடக்கின்றது. அப்படி நாம் இலக்கியங்களையும் வரலாறுகளையும் பிரித்தறிவது? எது வரலாறு எது இலக்கியம் என்று வகுப்பது என்பது பெரும் சிக்கல். உணர்ச்சி வேகத்தில் எல்லா இலக்கியத்தையும் வரலாறாக்கி விட முடியாது, அதை செய்யவும் கூடாது. அதேபோல் நாம் அறியாத காரணத்தால் வரலாற்றை வெறும கதைகளாக மட்டும் இட்டுவிடக்கூடாது. நம்மிடையே உலவும் பல சிறுங்கதைகள் வ

மாமழை போற்றுதும்!

மாமழை போற்றுதும்! உயரே போகும் மின்கம்பிகளில் ஊஞ்சலாடும் மழைத்துளி! காகிதக் கப்பலின் கேப்டன்களாய் கீழ்வீட்டு சிறார்கள்! மழையை ரசிக்கிறதா ஒதுங்க இடம் தேடுகிறதா என்று புரியாவண்ணம் அலைந்து தாவும் ஒற்றைக் காக்கை! மாடத்தின் மீதமர்ந்து சிறகு உலர்த்தும் பறவைகள்! மழையின் குளிருக்கு இதமாய் தாய்க்குள் உறங்கிப்போன நாய்க்குட்டிகள்! என்னைப் போலவே மழை எழுதும் கவிதைகளை படித்து பத்திரப்படுத்தும் எதிர்வீட்டுப் பெண்ணொருத்தி! மழை என்னவோ வண்ணமின்றிதான் நிலம் தொடுகிறது! ஆனால் இயல்பாய் இருந்த நிகழ்வுகளையெல்லாம் அழகேற்றி போகிறது! அதனால் மாமழை போற்றுதும்! ====•====•====•==== இன்றைய தூக்கத்தின் ஒரு பாதி தொலைந்திடுமோ என்று அலைபாயும் கண்கள்! பாத்திரங்களை விட ஒழுகும் ஓட்டைகள் அதிகம் கொண்டிருக்கும் வீடுகள்! அகண்ட ஒரு மரத்தடிக்கு கோணி போர்த்தியபடி குடியேறும் ஒரு குடும்பம்! ( தயவுசெய்து மரங்களை வெட்டாதீர் ) வாழ்தலின் பிடிப்பற்று போகச் செய்யும் மணிநேர மழைநேரங்கள்! கந்தல் கொண்டு மூடியிருந்த அந்தரங்க அவயங்களை கூட கலைத்து போட்டு வெளிக்காட்டிவிடும் மூர்க்கத்தனம்! ஒரே ஒரு ஆகப்பெரும் சௌகரியம் - மழையில் நான் அழுவது பிறர்

ஸ்டெர்லைட் எரிகிறது!

#ஸ்டெர்லைட் எரிகிறது! எங்க மண்ணை தான கேட்டோம் அந்த ஒன்ன தான கேட்டோம்! உசிரக் கூட தாரோம் எங்க மண்ணை தான கேட்டோம்! எங்க மக்க எல்லாம் இங்க மரிச்சு கெடக்கான் நக்கி பிழைச்சவனெல்லாம் எக்கி நெஞ்சுல மிதிக்கான்! எங்க உசுர எல்லாம் மசுருனு சொன்னான்! விசிறின பணத்துக்காக தோட்டாவ தொண்டைக்குள் விட்டான்! துப்பாக்கிக்கு உசிர் இருந்தா குண்டை துப்பியிருக்குமா? துப்புக்கெட்ட அரசு அதிகாரி மண்டை தப்பியிருக்குமா? இலட்சம் 15 தர்றோம்முனு சொன்னவங்க தாங்க! இலட்சணம் - ஜனநாயகத்த கொன்னவங்க தாங்க!! சோறு கெட்டு போனா தின்னு வாழ முடியுமா? - இந்த கூறு கெட்ட போன அரசு ஆள முடியுமா? வீடு வாசக் காத்திருக்குமே என்னனு சொல்ல? குடும்பம் குழந்தை காத்திருக்கும் என்னனு சொல்ல? எங்க மண்ண தான கேட்டோம் அந்த ஒன்ன தான கேட்டோம்! உசிரக் கூட தாரோம் எங்க மண்ண தான கேட்டோம்! துப்பாக்கிக்கு உசிர் இருந்தா குண்டை துப்பியிருக்குமா? துப்புக்கெட்ட அரசு அதிகாரி மண்டை தப்பியிருக்குமா? -அ.ச.கி.

சாதிவாரியான இட ஒதுக்கீடு!

Image
சாதிவாரியான இட ஒதுக்கீடு! இந்த தலைப்பை படித்தவுடன் சாதிவாரியான இடஒதுக்கீடு தவறென்று இரண்டு பேருக்கு தோன்றும். 1. இட ஒதுக்கீடு பற்றிய முழுப்புரிதல் இல்லாமல் வேண்டாம் என்பவர்கள் 2. இட ஒதுக்கீடு பற்றிய புரிதலுடன், அது ‘ சாதிவாரியான ’ இட ஒதுக்கீடு அல்ல, ‘ வகுப்புவாரியான ’ இட ஒதுக்கீடு என்பவர்கள் இக்கட்டுரை இரண்டு பேருக்குமானது தான். முதல் குழுவில் உள்ள தோழர்கள், ‘வகுப்புவாரி’ இட ஒதுக்கீடு என்ற வார்த்தையை மனதில் நிறுத்திக் கொண்டு மேலே படிக்க வேண்டுகிறேன். இரண்டாம் குழுவில் உள்ள தோழர்கள் இது முழுமையும் படித்து தவறுகளையும், விடுபட்ட கருத்துகளை சுட்டுமாறு வேண்டுகிறேன். இதில் இரண்டிலும் சேராத தோழர்கள் முழுக்கட்டுரையையும் கருத்துரையையும் படிக்கவும். இடஒதுக்கீட்டால் பல குடும்பங்கள் வளர்ந்து வருகின்றன. கூடவே இடஒதுக்கீட்டை பற்றிய விவாதங்களும் வளர்ந்து வருகின்றன. விவாதங்கள் வேதனைக்குரியதல்ல, ஆனால் பல இடங்களில் அத்தகைய விவாதங்களை முன்னெடுப்பது இட ஒதுக்கீட்டால் வளர்ந்து வந்தவர்கள் என்பது தான் வேதனைக்குரிய செய்தி! இடஒதுக்கீட்டையும் அதன் வரலாற்றையும் பற்றி வேறோர் கட்டுரையில் (http://asaki-i

இறப்பெனும் பெரு நிகழ்வு!

இறப்பெனும் பெரு நிகழ்வு! காற்றுக்கும் துளைகளுக்கும் இடையே காதல் இசையாய் வருகிறது! பார்வையின் ஊடே பேசிய இசைதான் காதலாய் மலர்கிறது! நாட்களும் நொடிகளும் உன்னால் நகர்ந்ததாய் உன் நினைவால் நிறைந்ததாய் கிடந்தன பல யுகம்! காதலுக்கான வரைவுகளில் கட்டுண்டிராமல் பெரும்பான்மை இலக்கணங்களை உடைத்து விட்டுதான் கலந்திருந்தோம்! ஒரு நொடி பார்வைகளையே காதல் என்று பெயர் சூட்டிக்கொண்டால் நம் உறவை என்னவென்று சொல்வதுவோ? தொட்டதை தொடர்வதாய் இல்லாமல் விட்டதை (விட்டு அதை) விலகுவதாய் சொல்லாமல் பழகியதை பாழாக்கித்தான் போனோம்! என் உயிர் பிழிந்து எடுத்த மொத்த நினைவுகள் எதிலும் உன் சுவடுகள் இல்லாமல் இல்லை! ஆம். இப்போதெல்லாம் நீ என்னுடன் பேசுவதில்லை தான்! காதலெனும் கடல்தனில் இளைப்பாறுவதில்லை தான்! ஆனால் தாஜ்மஹால் இடிந்து விட்டால் காதல் இறந்தா போகும்? கோழி கூவ மறுப்பதனால் விடியல் மறந்தா போகும்? சாதலும் காதலும் இல்லாத உயிர் உலகில் இல்லை! அந்த உயிரோடு உரசாத எதுவும் காதலே இல்லை! இறப்பெனும் பெரு நிகழ்வின்போது உன் முகம் காண வேண்டும்! இறுதியாய் ஒரு நொடி உன் நிழலில் வாழ வேண்டும்! -அ.ச.கி.

திராவிட அரசியல்!

முன்னுரை : திராவிட அரசியல் பற்றியும் அதன் கொள்கை பற்றியும் சமீப காலங்களில் மிகப்பெரும் விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படி என்ன சாதித்துவிட்டன திராவிடக்கட்சிகள் ? ஒரு முன்னேற்றமும் இல்லை , மாநிலமே சீரழிந்து போய்விட்டது என்ற பொய் பரப்புரையை துவங்கி விட்டிருக்கிறார்கள் பலர். அந்த நிலையில் தான் இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று எனக்கு தோன்றியது. இனி வரும் பத்திகளில் திராவிட கட்சிகளின் துவக்கம் , அவர்களில் அரசியல் கொள்கை , ஆரம்பம் , பின் அவர்கள் வழி வந்த ஆட்சி இவற்றை பற்றி சற்றே விரிவாக எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதப் போகிறேன். ஏதேனும் பிழை இருப்பின் திருத்தவும். முடிந்தளவு சரியான தரவுகளையும் , புள்ளி விவரங்களையும் தர முயற்சிக்கிறேன்! திராவிடம் : திராவிடம் என்ற சொல் தமிழம் என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் , அம்பேத்கரும் கூறுகின்றனர். தமிழம் - > த்ரமிளம் - > த்ரவிடம் - > திராவிடம் ஆரியம் , மராட்டியம் , வங்காளம் போன்று தமிழன் என்றொரு தனி இனத்தின் பெயரே தமிழம் , திராவிடம் என்பது. கி.மு. முதல் நூற்றாண்டிலேயே திராவிடம் என்ற சொல் பயன்படு