Posts

Showing posts from August, 2017

நான் அறிந்த பெரியார்!

நான் அறிந்த பெரியார்! என்னிடம் பல நண்பர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. நீ பெரியாரை தூக்கிப் பிடிப்பது ஏன், அவர் அப்படி என்ன செய்து விட்டார், கடவுள் மறுப்பால் விளைந்தது என்ன... இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்பது வாடிக்கை! அவர்களுக்கெல்லாம் அங்கங்கே நான் பதில் சொல்லியிருந்தாலும், ஒரு முழுமையான பதில், பெரியாரைப் பற்றிய முழுத்தரவை, தகவல் தொகுப்பை எங்கேயும் தர இயலவில்லை. நேரம் இல்லாதது, சிலருக்கு விளக்கம் கேட்க மனமில்லாமை என பல காரணங்கள் உண்டு! ஆகையால் இந்த பதிவில் என்னால் இயன்றதை, நான் அறிந்ததை பதிவிடுகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகமோ, கருத்து மாறுதலோ இருப்பின் கருத்திடவும். பெரியார் என்றாலே அவரை கேள்விப்பட்டோர், அரைகுறை ஞானம் கொண்டோர், முழுதாய் அறிந்தோர் என எல்லோருக்கும் முன்வந்து நிற்பது அவர்தம் 'கடவுள் மறுப்பு கொள்கை'. அதைத் தாண்டிய அவரின் செயல்பாடுகள், அவரைப் பற்றி முழுமையாய் அறியும் முயற்சி எடுத்தவர்கள் மட்டுமே அறிந்தவை. அவையாவன: -சாதிய ஏற்றத்தாழ்வை எதிர்த்தல் -பெண்ணுக்கு சம உரிமை -கடவுள், மத நம்பிக்கை என்ற பெயரில் நிகழ்ந்த மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது -சுயமரியாதைக் கொள்கை -

வணக்கம்!

வணக்கம்! ஆழ்மன நினைவுகளில் அந்தரங்கமாய் ஒளிந்திருப்பவர்களே! அரைகுறை பிரசவம் போல் அவசரகதியில் நட்பதிகாரம் எழுதியவர்களே! இங்குதான் என் நினைவெல்லாம் இதயம்தாண்டி வேறெங்கு - என்று இலக்கண நட்பு இயற்றியவர்களே! உணர்தலும் உணர்தல் நிமித்தமுமே உண்மை நட்பென்று உணர்த்திய சில உயிர்களே! வேறு பாதை ஏற்பதில்லை உணவு வேண்டி நோற்பதில்லை உறுதி உளம் கொண்டோரே! ஓரிரு நாள் நட்போடு ஓரம் ஒதுங்கி கொண்டவரே! நட்பில் துவங்கி காதலில் முடித்தவரே! காதலென்று துவங்கி நட்பை முறித்தவரே!! உயர்வுக்கென்று ஒரு சிலரும் ஊதியம் தருமென்று ஒரு சிலரும் உருப்படியாய் படித்த வெகுசிலரே!! உத்தமம் இதுதான் என்றும் ஊரார் சொன்னார் என்றும் உகந்தது இதுதான் என்றும் உற்றார் வைதார் என்றும் கட்ஆஃப் கிடைத்தது என்றும் கதைஎழுத தெரியும் என்றும் வேறுவழி இல்லை என்றும் வேறு சிலகாரணம் கொண்டும் பொறியியல் பட்டதாரி ஆனோரே! எப்படி சந்திப்பு நிகழ்ந்திருந்தாலும் என் சிந்திப்பில் நிற்கும் என்னருமை நட்புறவுகளே! இறுதிநாள் முடியும்போது இமைவிட்டு இறங்கிய ஈரத்துளிகளின் காரணகர்த்தாக்களே! என் நினைவுகளை தூசி தட்டியபோது உங்கள் நினைவு கிட்டியது! உங்கள் எலார்க்கும் வணக்கம்