Posts

Showing posts from April, 2017

தீ!

தீ! எந்தப் பக்கம் ஊதினால் பற்றும் எந்தப் பக்கம் ஊதினால் அணையும் என்று அறிந்தவன் இன்றைய பத்திரிக்கையாளன்! -அ.ச.கி.

முட்டாள் தினம்!

முட்டாள் தினம்! ----------------- ஏமாற்றப்படும் சில தருணங்கள்! விட்டு விடுதலையாகிறோம் கருவறை எனும் சிறு அறையை விட்டு - என்றெண்ணி சிரிக்கும் குழந்தை சிறைபட்டது பரந்த உலகில்! தெரிந்த கேள்விகளை தேர்வு வினாத்தாளில் தேடும் மாணவன்! இன்றாவது என்னை கவனிப்பாளா என்னவள் என்ற நினைப்பில் என் கல்லூரித் தோழன்! கனவில் வடித்த சிலை உயிர் பெற்றார் போல் ஓர் மனைவி - என வேண்டும் வாலிபன்! இறுக்க மூடியிருக்கும் பிறந்த குழந்தையின் பிஞ்சுக் கையை பிரித்து பார்க்கும் தகப்பன்! தன் துயரம் தனயன் அறியக்கூடாது என தவிக்கும் தந்தை! இப்படி பல தருணங்களில் ஏமாறத்தான் போகிறோம் என்று தெரிந்தே ஏமாறுகிறோம்! இவையெல்லாம் நமக்கு சுகம்தரும் ஏமாற்றங்கள்! இவைதவிர இன்னும் சில... 'நாளை வீட்டுக்கே வரும் உன் உதவித்தொகை' என உரைக்கும் உயரதிகாரி சொல்கேட்டு திரும்பும் ஊன்றுகோல் கிழவன்! 'மூன்றே மாதத்தில் மும்மடங்கு பணம்' எனக் கேட்டு மும்மரமாய் முதலீடு செய்யும் முட்டாள் சாமான்யன்! 'வளமான இந்தியாவை உருவாக்குவோம்' என வரலாற்று காலம் தொட்டு வஞ்சகம் இல்லாமல் பொய்யுரைக்கும் அரசியல் ஆன்றோனின் பேச்சை அகலவாய் பிளந்து கேட்கும்

பெண் எனும் சக உயிர்!

பெண் எனும் சக உயிர்! ----------------------- மூடரே! முழங்குவதேன்?! சிந்திக்கத்தானே மூளை! நிந்தித்தே நித்தம் அலைவதேன்?! உன்னுள்ளே சரிபாதி அண்டம்தான் 'அவள்'! உறைப்பது எப்போது?! பெண்ணுள்ளே கிடந்த பிண்டம்தான் 'நீ'! உறைப்பது எப்போது?! மண்ணுள்ளே மக்கும் பண்டம்தான் 'நாம்'! உறைப்பது எப்போது?! மனிதம் கொண்டவன்தான் மனிதன்! அந்தச் சொல்லின் புனிதம் விண்டவனை என்ன சொல்லி அழைக்க?! ஓ! பெண்ணே! மறுசனனம் ஒன்றெடுத்து - ஆண் மகவு உருவெடுத்து - இம் மண்ணில் பாதம் பதி! அன்று உனக்கு இவ்வுலகில் இடம் இருக்கும்! இல்லையேல்- உன் அன்னையின் மார்பு காம்பை நீ கவ்வும்முன் இம்மண் உன்னைக் கவ்வும்! பால்மணம்- உன் நாசியை நிறைக்கும்முன் பாழும் உலகம் உன் நாடியை நெரிக்கும்!! -அ.ச.கி. https://m.youtube.com/watch?v=6OcPS5ouM0M

கண்ணீர்!

கண்ணீர்! ஏழைத் தாயின் சமையலில் என்றும் உப்பு அதிகமாகவே இருக்கிறது! -அ.ச.கி.

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் ! நித்திரை கலைத்தெழு தமிழா ! சுற்றியுள்ள ஊர் எங்கும் - உம்மை சுற்றிசுற்றி அடிக்கின்றனர் ! தண்ணீர் தர மறுக்கிறான் ஒருபுறம் ! தண்ணீர் சமாதிகள் மறுபுறம் ! செம்மரம் ஒன்றே காரணம் என்று செங்குருதி குடிக்கிறான் இன்னொருவன் ! பிரதிநாள் ஒவ்வொன்றும் - புதுப்புது பிரச்சனைகளை தேடித்தேடி பிரயத்தனப்படுகிறான் பிறிதொருவன் !! இனிச்சொல்லுங்கள் தேவைதானா இன்றைய உற்சாகம் ?! என்று வாழ்த்துக்களாக மட்டுமே வருடப்பிறப்பு இல்லாமல் வாழ்த்தும் வண்ணம் வாழ்க்கை அமையுமோ அன்று கொண்டாடுவோம் வெற்றிக் குலவையிடுவோம் தமிழனாய் தலைநிமிர்வோம் தமிழர் திருநாள் கொண்டாடுவோம் ! - அ . ச . கி .

நான் உணர்ந்தவை, உண்மை என்று நம்புபவை! [10] (சிறு சொல்லாய்வு!)

சிறு சொல்லாய்வு !      பின்வரும் சொற்களின் வேர்ச்சொல்லான வினைச்சொல் '- ற்று ' என்றே முடிகிறது . அதாவது ஆற்று , தேற்று , ஏற்று , மாற்று என்பன வேர்ச் சொற்கள் . அதன்மூலம் எழும் சொற்கள் :- ஆறுதல் - ஆற்றுதல் தேறுதல் - தேற்றுதல் ஏறுதல் - ஏற்றுதல் மாறுதல் - மாற்றுதல்      இச்சொற்களில் முதலில் வருவன , அதாவது , ஆறுதல் , தேறுதல் , ஏறுதல் , மாறுதல் என்பன ' தன்னிலை ' (First person) தன்மீதே ஆற்றும் தொழிலை குறிக்கும் சொற்கள் . அதைத்தொடர்ந்து வருவன ' தன்னிலை ' பிறர் மீது ஆற்றும் தொழிலை குறிப்பது . பின்வரும் தொடர்களை காண்க :- நான் மரம் ' ஏறுகிறேன் ' அதை மேலே ' ஏற்றுகிறேன் '      மேற்சொன்ன சொற்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமையை கவனியுங்கள் . அனைத்து சொற்களின் முதலெழுத்து நெடிலாகவே அமைந்து இருக்கிறது . முதலெழுத்து குறிலாக அமையும் வார்த்தைகள் இந்த இரட்டை முறையில் வருவது இல்லை . எ . கா :- சுற்றுதல் , கற்றல் , விற்றல்      ஆக , முதலெழுத்து நெடிலாக அமையும் சொற்களே இத்தகைய இரட்டை

அம்மாவுக்கு ஞாபக மறதி அதிகம்!

Image
அம்மாவுக்கு ஞாபக மறதி அதிகம்! தன் பசி மறப்பாள் தூக்கம் மறப்பாள் துயரை மறப்பாள் நோய் நொடி மறப்பாள் - தன்னை நேசிக்க மறப்பாள் சுவாசிக்க மறப்பாள் சுற்றம் மறப்பாள் சுகம் எல்லாம் தொலைப்பாள் உலகை மறப்பாள் உடலையும் மறப்பாள் - தானும் ஓர் உயிரென்பதையே மறப்பாள்! தான் ஈன்ற உயிர் தன் அருகிலோ தள்ளி தொலைவிலோ இருக்கும்போது!                  -அ.ச.கி.

என்று விடியும்?!

என்று விடியும்?! என்று விடியும் என்று கேட்கிறார்கள்- வறுமையை வரம் வாங்கியவர்கள்! கொடுமையில் உழன்றவர்கள்! பசி அரக்கனுக்கு இரையானவர்கள்! குண்டு சிதறலிலும் குழந்தைக் கதறலிலுமே இசை கற்று வளர்ந்தவர்கள்! சிரிப்பென்ற வார்த்தையை சிந்தித்தே அறியாதவர்கள்! அழுகை தவிர வேறேதுவும் அனுபவித்து அறியாதவர்கள்! அன்னை பூமியிலேயே அகதிப் பட்டம் வாங்கியவர்கள்!!     - அ.ச.கி.