Posts

Showing posts from July, 2018

கடல்தாண்டிய வணிகம்

Image
கடல்தாண்டிய வணிகம் வைகை நதி கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில் இருக்கிறது ‘ அழகன்குளம் ’ என்ற துறைமுக நகரம். இன்று கோட்டைமேடு என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், ஓரு உடைந்த பானையை கண்டுபிடித்தனர். அது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று மதிப்பிட்டனர். 16 செண்டிமீட்டர் அகலம் கொண்ட அந்த உடைந்த பானையில் ஒரு கப்பல் வரையப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கப்பல் ரோமனியக் கப்பல் என்று உறுதி செய்துள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில் ரோமனியர்களுடன் கடல் வாணிபம் இருந்தது பல ஆதாரங்களுடன் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது.​ ​ கிரேக்கர்களும், ரோம் நாட்டவரும் அன்று ‘ யவனர்கள் ’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களை பற்றிய குறிப்பும் தமிழ் இலக்கியத்தில் ஏராளமாய் உள்ளது. புறநானூறு, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் பல தமிழ்ப்புலவர்களும், பெரிபுளஸ்,  ஸ்டராபோ,  பிளினி,  தாலமி போன்ற கிரேக்கத்தை சேர்ந்த புலவர்களும் இந்த வர்த்தகத்தை பற்றி விரிவாக பதிவு செய்துள்ளனர். இதுவரை இத்தகைய இலக்கியச் சான்றுகள் தான் இந்த வணிகத்தை பற்றி பேசி வந்தன. அத

அஹிம்சை பூமி!

அஹிம்சை பூமி ! வாங்க வாங்க எல்லாரும் ஒன்னா கூடுவோம்! ஊருசிரிக்கும் எங்க வாழ்க்கைய சேர்ந்து பாடுவோம்! சாதிக்க தடையான சாதியிடம் தோத்திருந்தோம்! ஈரோட்டு வெண்தாடி - வந்து சத்தமிட காத்திருந்தோம்! பெயரளவில் சாதியெல்லாம் மறைஞ்சு போக பாத்திருந்தோம்! வேரளவில் இன்னும் நின்னு - ரத்தம் உறிஞ்சு போக பாத்திருக்கோம்! உலகம்பேசும் திட்டமென்று ஊரை எரிக்கிறோம்! கையாலாகா எங்கள் நிலையை எண்ணிச் சிரிக்கிறோம்! உறவெல்லாம் சாக - நின்னு பார்த்த கண்ணிது! நம் வீட்டுக்குள்ளும் கொன்னு பார்க்கும் மண்ணிது! வள்ளலாரும் வள்ளுவனும் வாழ்ந்த மண்ணிது! எவன் செத்த எனக்கென்ன என்று நினைக்குது! நீரையுந்தான் காசுகொடுத்து வாங்க பழகினோம்! சத்து நிறைஞ்சு இருக்குதுனு பூசி மொழிகினோம்! நீட்டிய பணத்தை நமதென்று வாங்கிப் பழகினோம்! - இன்று ‘நீட்’ என்று நீட்டும்போது திக்கித் திணறினோம்! நாடுதனை உயர்த்த என்று பல வரி(லி)யும் பொறுக்கிறோம்! நல்ல கல்வி தருவோம் என்று நாலு உயிரை எடுக்கிறோம்! என்ன செய்ய! இங்கே அஹிம்சை உலகம் படைக்கக் கூட போர்கள் தானே புரிகிறோம்! #அசகி

தொன்மதுரை!

தொன்மதுரை! மதுரை என்று சங்க இலக்கியங்கள் சொல்வதெல்லாம் இன்றைய மதுரையை அல்ல என்றொரு கருத்துண்டு. அந்த கருத்தை மெய்பிக்க அல்லது பலம் சேர்க்க சங்க இலக்கியங்களில் இருந்தே பல சான்றுகளும் முன் வைக்கப்படுகின்றது. அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது அன்றைய தலைநகரான மதுரையின் இடமமைப்பு. சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் அன்றைய மதுரை என்பது திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்காக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று இருக்கும் மதுரை, திருப்பரங்குன்றத்திலிருந்து தென்கிழக்காக இருக்கிறது. மதுரையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கீழடியும் அங்கிருந்து வெளிவரும் அதிசயங்களும் அந்தக் கருத்துக்கு வலுசேர்க்கிறது. கீழடி அகழ்வாய்வு செய்யப்படும் இடம் மணலூர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும் (பாண்டியர்களின் பழைய தலைநகர் என்று குறிப்பிடப்படுகிறது). அகழ்வாய்வு மேற்கொள்ளப்படும் அந்தத் தென்னந்தோப்பு மணலூரின் கண்மாய்க்கரைமேட்டில் தான் அமைந்திருக்கிறது. முதல் தமிழ்ச்சங்கம் இருந்த மதுரையும் கபாடபுரமும் கடல்கொண்டுபோக பின் உருவானது தான் இன்றைய மதுரை என்று ‘ இறையனார் அகப்பொருள் உரை ’ என்ற நூல் சொல்

உதகை!

உதகை! மலைமீது படுத்துறங்கும் மேகம்! பச்சை படிக்கட்டோ எனத் தோன்றும் தேயிலை அடுக்குகள்! இறங்கிவந்து வருடிப் போகும் மேக மெத்தைகள்! நீரில் விழுந்து ஓடிவந்து முகம் மோதும் வாடைக்காற்று! மேற்தோலின் துளை வழியே ஊசி ஏற்றும் குளிர்! பனியோ இல்லை பால் வண்ண துணியோ என்று திகைக்கும் அளவு மூட்டம்! மூச்சுக்காற்றுக்கும் வண்ணம் ஏற்றிக்கொண்டிருக்கும் மண்ணக தொழிற்சாலை! குயில் கூவாத காலைகளையும் அழகாய் காட்டிக்கொண்டிருக்கும் விண்ணகம் பொழிற்காலை! இடம் பெயரத் தோன்றாத எண்ணம் குளிர்சோலை! சுடும் நிலவொன்றும் தந்திருக்கக்கூடாதா என்று அலற்றிட வைத்திடும் வைகறைப் பொழுதுகள்! இத்தனையும் தன்னுள் பூட்டி வைத்திருக்கிறது ஊட்டி! இத்தனை இத்தனை இருந்தும் இங்கு வந்த கண்ட பின்னும் இறந்து போக தோன்றுகிறதாமே சிலருக்கு?! #அசகி