Posts

Showing posts from June, 2018

தேனூர் கருவேலமரம்

Image
தேனூர் கருவேலமரம் முதலாம் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டும், சாடவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும், சங்க இலக்கியங்களும் தேனூரை பற்றிய சிறப்பை பதிவு செய்வதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் யாரும் தேடிக் கண்டெடுக்காமல் சுயம்புவாகவே வெளிவந்த கண்டுபிடிப்பு ஒன்று உண்டு. தேனூரில் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையில், கருவேலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தூருக்கு அடியிலிருந்து ஒரு மண்முட்டி மேலெழுந்து வர, அதை அங்கிருந்த சிறுவர்கள் எடுத்து விளையாடத் துவங்கினர். அதனுள்ளே விரலளவு உள்ள ஏழு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவை ஏழும் தங்கக்கட்டிகள், மொத்தம் சுமார் 700கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகள் . ஏழு தங்கக்கட்டிகளிலும் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிலும் ஒரே பெயர் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் ஒரு பெண்ணின் பெயர் - ‘ கோதை ’. இந்த தங்கக்கட்டிகள் கி.மு. முதல் நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்பொருள்துறை கூறுகிறது. இந்தியாவிலேயே பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் தங்கக்கட்டிகள் இங்கு தான் முதலில் கிடைத்திருக்கிறது. 2100 ஆண்டுகளுக்கு முன் த

நடுகற்கள்

Image
நடுகற்கள் கற்கள் எல்லா காலத்திலும், எல்லா இனத்திலும், எல்லா வரலாற்றிலும் முக்கிய இடம் பெறுகின்றது. உண்மையில் அவை தான் பல பழம்வரலாறுகளை சுமந்து நிற்கின்றன. இறந்தவீரன் எதிர்காலத்திலும் பேசப்பட வேண்டும் என்று எண்ணிய நம் முன்னோர் பின்பற்றிய முறை தான் நடுகற்கள். புறத்திணைகளில் ஏழுவகை, வெட்சி முதல் தும்பை வரை போர் செய்யும் முறைகளை வகுத்திருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு வகைப்போரிலும் சிறப்பான வீரத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு நடுகல் எழுப்பப்பட்டிருக்குறது. கூடுதல் ஆச்சரியமாக ஒரு நடுகல் எப்படி இருக்கவேண்டும் என்கிற இலக்கணத்தை ‘ தொல்காப்பியம் ’ பேசுகிறது. காலம் எல்லாம் பேசப்படவேண்டிய புகழ்வரிகளை சுமந்து நிற்கப்போகும் கல் அது, ஆதலால் நல்ல ‘விளைந்த கல்லாக’ இருக்க வேண்டும் என்கிறான் தொல்காப்பியன். விளைந்த கல்லா, விளையாத கல்லா என்பதை மேலோடும் ரேகையை தட்டிப்பார்த்தே சொல்பவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர். அம்மி செய்யக்கூட விளைந்த கல் தான் தேவைப்படும். விளையாத கல்லில் வைத்து இடித்தால், அம்மியும் இடிந்து போகும்! பின் அதை நன்கு நீராட்டி, நல்லதொரு இடத்தில் நடவேண்டும

சிலப்பதிகாரத்தின் நிகழ் சான்றுகள்

Image
எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய ‘ வைகைநதிநாகரிகம் ’ என்ற நூல் படித்தேன். அதிலிருந்து சிறு சிறு துணுக்குகளாக இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். அதன்படி இன்று முதலாவதாக ‘வரலாற்றின் ஆச்சரியங்களில்’ ஒன்றாக இன்றும் இருக்கும் சிலப்பதிகாரம் பற்றிய சிறு துணுக்கு. சிலப்பதிகாரத்தின் நிகழ் சான்றுகள் மதுரைக்கு அருகே உள்ள ஒரு சிற்றூர் கடச்சனேந்தல் . அங்கு ‘ கவுந்தியடிகள் ’ பெயரில் ஓர் ஆசிரமம் இருப்பதை (கவுந்தியடிகள் ஆசிரமம்) பார்த்து திகைக்கிறார் ஆசிரியர். கோவலன் கண்ணகியும் அறிந்த நம்மில் பலரும் கவுந்தியடிகளை அறிந்திருப்பது இல்லை. அவர்களை பற்றி கீழே அவ்வூர் மக்கள் வாயிலாகவே காண்போம். திகைப்புற்ற ஆசிரியர், அவ்வூர் மக்களிடம் “எதற்காக கவுந்தியடிகள் பெயரில் ஒரு ஆசிரமம்?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “அந்த அம்மாதானே கோவலனையும் கண்ணகியையும் எங்க ஊருக்கு கூட்டிட்டு வந்துச்சு”. அவ்வூரில் யாரும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் இல்லை. அதை தினமும் படித்து பகர்பவர்களும் இல்லை. இருப்பினும் சிலப்பதிகாரம் பற்றி அரைகுறையாய் பள்ளியில் பயின்ற நம்மில் பலரும் அறியாத ஓர் செய்தியை, கவுந்தியடிகள்

இலக்கியமும் வரலாறும்

இலக்கியமும் வரலாறும் பெரும்பாலும் ஊருக்கு ஒவ்வொரு விதமான கதை இருக்கும். குறைந்தபட்சம் ஒரு நாட்டுக்கு ஒரு பாணியில் கதை இருக்கும், இராமாயணத்தை போல. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான இராமாயணம் சொல்லப்படும். ஆனால் கிட்டதட்ட எல்லா ஊரிலும், எல்லாரும் அறிந்த ஒற்றைக் கதை உண்டு என்றால் அது காக்கை கதை. வீட்டிற்கு வெளியே ‘ காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள் ’ என்பது ஒரு கதை அல்லது நம்பிக்கை. இது கதை அல்ல உண்மை என்று சொன்னால் நம்புவீர்களா? மேற்கொண்டு படியுங்கள். நம்முன் இங்கு பல்வேறு இலக்கியங்களும் வரலாறுகளும் ஊடோடிக் கிடக்கின்றன. அந்த இலக்கியங்களில் பல வரலாறுகள் என்று புகட்டப்படுகின்றன. பல உண்மை வரலாறுகள் நமக்கு சொல்லப்படாமலேயே புதையுண்டு கிடக்கின்றது. அப்படி நாம் இலக்கியங்களையும் வரலாறுகளையும் பிரித்தறிவது? எது வரலாறு எது இலக்கியம் என்று வகுப்பது என்பது பெரும் சிக்கல். உணர்ச்சி வேகத்தில் எல்லா இலக்கியத்தையும் வரலாறாக்கி விட முடியாது, அதை செய்யவும் கூடாது. அதேபோல் நாம் அறியாத காரணத்தால் வரலாற்றை வெறும கதைகளாக மட்டும் இட்டுவிடக்கூடாது. நம்மிடையே உலவும் பல சிறுங்கதைகள் வ

மாமழை போற்றுதும்!

மாமழை போற்றுதும்! உயரே போகும் மின்கம்பிகளில் ஊஞ்சலாடும் மழைத்துளி! காகிதக் கப்பலின் கேப்டன்களாய் கீழ்வீட்டு சிறார்கள்! மழையை ரசிக்கிறதா ஒதுங்க இடம் தேடுகிறதா என்று புரியாவண்ணம் அலைந்து தாவும் ஒற்றைக் காக்கை! மாடத்தின் மீதமர்ந்து சிறகு உலர்த்தும் பறவைகள்! மழையின் குளிருக்கு இதமாய் தாய்க்குள் உறங்கிப்போன நாய்க்குட்டிகள்! என்னைப் போலவே மழை எழுதும் கவிதைகளை படித்து பத்திரப்படுத்தும் எதிர்வீட்டுப் பெண்ணொருத்தி! மழை என்னவோ வண்ணமின்றிதான் நிலம் தொடுகிறது! ஆனால் இயல்பாய் இருந்த நிகழ்வுகளையெல்லாம் அழகேற்றி போகிறது! அதனால் மாமழை போற்றுதும்! ====•====•====•==== இன்றைய தூக்கத்தின் ஒரு பாதி தொலைந்திடுமோ என்று அலைபாயும் கண்கள்! பாத்திரங்களை விட ஒழுகும் ஓட்டைகள் அதிகம் கொண்டிருக்கும் வீடுகள்! அகண்ட ஒரு மரத்தடிக்கு கோணி போர்த்தியபடி குடியேறும் ஒரு குடும்பம்! ( தயவுசெய்து மரங்களை வெட்டாதீர் ) வாழ்தலின் பிடிப்பற்று போகச் செய்யும் மணிநேர மழைநேரங்கள்! கந்தல் கொண்டு மூடியிருந்த அந்தரங்க அவயங்களை கூட கலைத்து போட்டு வெளிக்காட்டிவிடும் மூர்க்கத்தனம்! ஒரே ஒரு ஆகப்பெரும் சௌகரியம் - மழையில் நான் அழுவது பிறர்