Posts

Showing posts from June, 2016

நான் ஏங்கித்தவிக்கும் சில தருணங்கள்!!!

நான் ஏங்கித்தவிக்கும் சில தருணங்கள் !!! ஒவ்வொரு நாளும் விழித்து எழும்போது - உன் விழியில் விழுந்து எழவேண்டும் !! நீ தூங்கி விழும்போது என் மடியையே தூளி ஆக்கி தாலாட்ட வேண்டும் !! சிறிதும் பெரிதுமாய் நான் செய்யும் தவறுக்கு சிலிர்த்திடும் உன் புன்னகையால் தண்டிக்க வேண்டும் !! தோல்வியால் துவண்டு விழும்போது தோள் கொடுத்து தேற்றி விடவேண்டும் !! உன்னுள் வலி வலுக்கும்போது என் மார்பில் - உன் முகம் சாத்தி , முத்தத்தால் உடல் போர்த்தி கதகதப்பு சேர்த்திடுவேன் !! சோகம் சூழ்ந்துகொண்டு வருத்தும்போது உன் மார்பில் முகம் புதைத்து மல்கும் என் கண்ணீரை தேக்கவேண்டும் !! சிரித்து சிலாகித்து மகிழ்ந்திருக்கும்போது முத்தத்தில் உன்னை மூழ்கடிக்க வேண்டும் !! சில மாலைகள் சின்னக் குழந்தைகள் போல சிணுங்கல்களுடன் செலவிட வேண்டும் !! வாரக் கடைசியில் உனக்கு விடுமுறை அளித்து வித்தியாச சமையல் செய்வேன் ! சில சமயம்

முட்டாள் தினம்!!!

முட்டாள் தினம் !!! ஏமாற்றப்படும் சில தருணங்கள் !!! விட்டு விடுதலையாகிறோம் கருவறை என்னும் சிறு அறையை விட்டு - என்றெண்ணி சிரிக்கும் குழந்தை சிறைபட்டது பரந்த உலகில் !! தெரிந்த கேள்விகளை தேர்வு வினாத்தாளில் தேடும் மாணவன் !! இன்றாவது , என்னை கவனிப்பாளா ?! - என்ற நினைப்பில் என் கல்லூரித் தோழன் !! கனவில் வடித்த சிலை உயிர்பெற்றார் போல் - ஓர் மனைவி !! என்றெண்ணும் வாலிபன் !! இறுக்க மூடியிருக்கும் பிறந்த குழந்தையின் பிஞ்சுக் கையை பிரித்துப்பார்க்கும் தகப்பன் !! தன் துயரம் தனயன் அறியக்கூடாது - என்று தவிக்கும் தந்தை !!! இப்படி பல தருணங்களில் ஏமாறப் போகிறோம் எனத்தெரிந்தே ஏமாறுகிறோம் !! இவை எல்லாம் நமக்கு சுகம்தரும் ஏமாற்றங்கள் !! இதைத் தவிர இன்னும் சில !! நாளை வீட்டுக்கே வரும் உதவித்தொகை - என உரைக்கும் உயரதிகாரியின் பேச்சைகேட்டுத் திரும்பும் ஊன்றுகோல் கிழவன் !! மூன்றே மாதத்தில்

உதிரிப்பூக்கள்!!

உதிரிப்பூக்கள் !! தங்கை தவிக்கிறாள்​ ​தாய்லாந்தில்!! ​ ​அண்ணன் அடைக்கப்பட்டான் அமெரிக்காவில்!! ​ ​அக்காளுக்கு அமைந்த அத்தான் அயல்நாட்டில்!! பெற்றோருக்கோ - ஓர் பெட்டி அறை!! இன்னும் மூத்தாரோ முதியோர் இல்லத்தில்!! நான் மட்டும் இங்கே தனியாய்.. பயன்படா நூலாய்!!! உதிர்ப்பூக்கள்- மணம் நிறைப்பதில்லை! மனதையும் தான்!!              - அ . ச . கி .

வல்லினம்!!

வல்லினம் !! திசையறியாது திகைத்து - துக்கத்தில் திளைத்து - ஏக்கம் திரண்டு - நம்மை தினந்தினம் வாட்டுகிறது !! இதனூடே - பகிரமுடியா பல வலிகளும் ! பச்சைக்குணம் கொண்ட - பல இச்சை நரிகளும் ! பச்சாதாபம் உண்டாக்கும் துரத்தமுடியா எலிகளும் !! பச்சோந்தி குணம் கொண்ட புல்லர்களும் !! வீழ்த்தக் காத்திருக்கும் விடம் நிறைந்த சர்ப்பங்களும் !! விழும்வரை காத்திருக்கும் ஈன கழுகுகளும் !! கிளறிவிடும் கோபம் - கிழித்து காற்றில் எறியப்பட்ட காகிதம் போல் .. கீழே மேலே ஏறி இறங்கி படப்படக்கிறது !! இதை அடக்கமுயலும் நான் - இரப்பதெல்லாம் ஒன்றே ! வல்லினம் போல் வேண்டும் இடத்து மிகும் கோபம் வேண்டும் !!!                       - அ . ச . கி .

அப்பாவுக்கு!!

அப்பாவுக்கு!! நண்ப! பிறப்பெடுத்த பின் கண்விழித்து - நான் கண்ட முதற்கணத்தின் பதிவில் நீ இருந்தாயே இல்லையோ!! என் பொக்கை வாய்ச்சிரிப்பை பொக்கிஷமாய் - உன் நெஞ்சில் பொதித்தாயோ இல்லையோ!! உன் உதட்டு ஈரம் - என் கன்னத்தை உரசியதோ இல்லையோ!! நான் கதறி அழுதநேரம் அள்ளி அணைத்து - என் கண்ணீரை - உன் நெஞ்சில் தேக்கினாயோ இல்லையோ!! தூரத்தில் நின்று தூளி ஆட்டி - நான் தூங்க - நீ உன் தூக்கம் தொலைத்தாயோ இல்லையோ!!! நான் துயில் கொண்ட பிறகு - எனை தூக்கி கொஞ்சி - கண்ணீர் துளிர்த்தாயோ இல்லையோ!! என் கைப்பிடித்து காலாற நடந்து... எனக்கு புரியா கதைகள்பேசி சிலாகித்தாயோ இல்லையோ!! நானறியேன்! ஆனால்... - இன்று நீ பிறப்பெடுக்கும் இந்நாளில் உன்னுடன் இதெல்லாம் நான் செய்து மகிழ எனக்கு இசைவு தெரிவி!! நண்ப!!!                 -அ.ச.கி.

என்று விடியும்?!

என்று விடியும் ?! சூடால் சுருக்கம் கண்ட தாய்மண் !! பள்ளத்தில் பாளம் பாளமாய் மண்சுவடு !! பாலவனமான பக்கத்து ஆறுகள் !! மனமுடைந்த குளம் !! நீருக்கலைந்த குயவன் குட ( ல ) மண் !! களைத்த நிலம் !! இளைத்த மரம் !! சுவாசம் தொலைத்த செடிகள் !! சுகந்தம் மரித்த மலர்கள் !! ஆழடிக்குழாயிலிருந்தும் அதிகமாய் அனல்காற்று !! பனி பொசுங்கிய அண்டார்டிகா !! ஏக்கத்துக்கு ஆளான எங்க வீட்டு ஆடுகள் !! எங்களை எட்டிமிதித்து எக்காளப்படும் எதிர்கிரணங்கள் !! இனி , இங்கே ஒட்டகத்துக்கு மட்டுமே கும்மாளம் !! இப்படி பகலவன் பாடாய்படுத்தினாலும் எங்களின் ஒரே கேள்வி - என்று விடியும் !!! - அ . ச . கி .