Posts

Showing posts from May, 2016

மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு என்னை மறந்து எங்கோ பறந்த இருதயம் இழுத்து வந்து!! இருநிமிடம் இருத்தி வைத்து, அமைதி கொண்டு தைத்து வைத்த சொல்லின் மெத்தை இதோ!!! அண்ணன் தங்கைக்கான உறவில் அடைந்து கிடக்கும் இன்பம் பற்றி அறிவாயா?! இதயத்தில் - என் இனியவளுக்கு மட்டுமா இடம் கொடுப்பேன்?! (இதய) சொத்தில் சமஉரிமை நீயும் கொண்டாடு!! என் இதயவீட்டில் துள்ளித்திரி! எல்லைகள் ஏறி மிதி!! தொல்லைகள் தூர ஏறி!! புண்ணியத்தலம் என்று பூஜி! அந்நியத்தலம் என்பதை மற!! "அண்ணி"யத்தலம் என்பதை மட்டும் நினைவில் வை!! உன் வீட்டுத் தொட்டிலில் உறங்கும் - என் வீட்டு மருமகன் இருட்டில் அழுவானா?! விட்டில் பூச்சி வீட்டில் நிரப்பட்டா?! உன் சிரிப்பில் சிதைந்து போன சில கோபுரச் சீமான்கள் இருக்கலாம்!! ஆனால்- அதில் புதைந்து கிடக்கும் அர்த்தம் அறியும் வித்தை பயின்றவன் நான்!! உண்மை ஒன்று உரைக்கிறேன்! உலகத்து செல்வ எல்லாம் உன் காலடியில் கிடத்திட முடியாது தான்!! ஆனால்- உனக்கென ஒரு உலகத்தை உருவாக்குவேன் நான்!! மெருதுவாய், மிக மெருதுவாய்! - இதை மீண்டும் ஒரு முறை உன் பார்வையால் வர

ஆலமரத்து வீடு!!

ஆலமரத்து வீடு !! ஆலமரத்து வீடு ஆயிரம் பாடம் சொல்லும் !! ஆலங்குயில் பாடம் சொல்லுமா ?! - என்று ஆச்சரியமா மனிதா ?! ஆம் ! அது பாடம் சொல்வது ஆறறிவு கொண்ட உமக்குத்தான் !!! ஆறாம் பாடமாய் மட்டுமே தமிழைப் பயின்ற மனிதா !! மருதநில வழக்கமே மாந்தர் அதிகாலை எழுவதுதான் ! மறந்தாயா ?! பகுத்துண்ணும் பழக்கத்தை பறவையினம் பார்த்தாவது பழகுவாயா ?! உழைத்து உண்டால்தான் - அவைக்கு உறக்கமே வரும் ! உண்மை அறிவாயா ?! தம் தகுதிதாண்டி உயரும் ஆசைகொள்ள அவை அனுமதிப்பது இல்லை !! எல்லாவற்றிற்கும் மேல் - அவை மறந்தும்கூட - தன் தாய்மொழியை மறக்க நினைப்பதில்லை !! அறிவாயா நீ ?! அப்படிப்பட்ட வீடுகள் எல்லாம் - இன்று நீ வளர்க்கும் நீண்ட இரும்பு மரங்களால் நிர்கதியாய் நிற்கின்றன !!! கொஞ்சம் மனிதனாய் மாறு மனிதா !!!                         - அ . ச . கி

விண்ணப்பம்!!

விண்ணப்பம் !! சாய்ந்திருக்க திண்தோள் !! மகிழ்ந்திருக்க சிறுவீடு !! காலையில் எழுந்திருக்க - என் கண்கள் !! துவண்டு - நீ விழும்போது என் மார்பு !! உறக்கம் வரா வேளையில் தலையணையாய் நான் !! பேச்சுத்துணைக்கு என் கவிதைகள் !! பேசாதிருக்க சில முத்தங்கள் !!! இசை கற்க - குழந்தைச் சிரிப்பு இரண்டு !!! முதுமையில் செலவு செய்ய , முதல் சேமிப்பாய் - என் மொத்த காதல் !!! நீ விளையாட சிறுகுழந்தையாய் நான் !! நாம் விளையாட இருகுழந்தையாய் நாம் !!! சமைத்திட - என் இதழ்கள் ! சமைக்க நீ !! சுவைக்க நாம் !!! காற்றோடு கைகோர்த்து நடக்கும் சில மாலைகள் !!! மேற்சொன்ன அனைத்திற்கும் , மாதம் " மூன்றுநாள் " விடுமுறை ... அம்மூன்றுநாளும் , தாயாய் நான் - என் மடியில் நீ !!! இத்தனையும் நான் உனக்கு தருவேன் !!! பதிலுக்கு நீ - சிறு சிரிப்பால் சம்மதம் என்று மட்டும் தெரிவி !!! - அ . ச . கி .