Posts

Showing posts from January, 2017

இளவரசன்!

இளவரசன்! காலணாவுக்கு அலைந்து! கால்கடுக்க நடந்து! கால் வயிற்று கஞ்சிக்கு கஷ்டப்பட்டு! நாளை காலை விடியக்கூடாது என்று எண்ணும் எங்கள் தெரு ராஜாவின் மகன்!!     - அ.ச.கி.

மௌனமாய் எழுப்பிய புரட்சி! மௌனத்தால் எழுதிய புரட்சி!!

தைத்திங்கள் அதன் விடியலில், அமைதியாய் ஒரு யுக மாற்றத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தது. இது பற்றி நம்மூர் அரசியல் ஆன்றோர்கள் அறிந்திருக்க நியாயமில்லை! அவர்கள் தத்தமது கனவுகளில் " முதல்வர் " பட்டத்தை தம் பெயர்ப்பலகையில் கருத்தாய் பொறித்துக்கொண்டிருந்தனர்!   'எமக்கு தொழில் கலாய்த்தல், மீம்ஸ் போடுதல்' என்றே இயங்கிக்கொண்டிருக்கிறது இளைஞ உலகம், என்ற விமர்சனத்தை இளையதலைமுறை தொடர்ந்து எதிர்கொண்டு வந்தது!    ஆனால் இன்று! " வெட்டி வீழ்த்தும் அளவு கூர்மையானது எங்கள் பார்வை! மொத்த உலகமும் திரும்பி பார்க்கும் அளவு சத்தமானது எங்கள் மௌனம்! கரைதாண்டும் கடலை, கட்டிப்போடும் வலிமைமிக்கது இணைந்த எம் கைகள்! " என்று சொல்லாமல் சொல்கிறது இந்த இளைஞர் பெருந்திரள்!!   கலாய்ப்பில் உள்ள கோபத்தையும், மீம்ஸ்-ல் உள்ள ஆழ்ந்த அரசியல் பார்வையும் உணரும் அளவுக்கு, பலரின் மனக்கண்கள் நல்ல நிலையில் இல்லை என்பது மட்டும் ' உள்ளங்கை நெல்லிக்கனி '.       " மச்சி! வெளிய போலாமா?! "- ஒரு இளைஞனிடம் நீங்கள் கேட்கும் இந்த ஒற்றை கேள்விக்கு ஓராயிரம் வகை

உழவர் திருநாள்!

உழவர் திருநாள்! நீர் - எமக்கு நீர் விடமறுப்பீரு! நாத்து நட போனா காத்துகூட வஞ்சிக்குது! சோத்துல நீவிர் கைவைக்க - நான் தோத்து, கன்னத்துல கைவைக்கேன் நிதமும்! கட்டிக் கரும்பு வெட்டி எடுத்து இரத்தச் சாறு குடிச்சு, எச்சமுனு நீவிர் துப்புறது கரும்பு சக்கை இல்ல! என் உடம்பு தக்கை!! உங்களுக்கு எல்லாம் தை பொறந்தா வழி! எமக்கு பொறந்தததிலிருந்தே வலி!! உரம்வாங்க காசுதான் இல்ல உடம்பு இருக்கே! உசுர கொடுக்கேன்! உரமாகும் இந்த மண்ணுக்கு!! இன்னும் எத்தனையோ பிரச்சனை இங்க மிச்சம் இருக்கு!! அதையெல்லாம் சித்த சுமக்கறீகளா?! இன்னைக்கி உழவர் திருநாளாம்! கொண்டாடிட்டு வந்தர்றேன்!!                     -அ.ச.கி.

ஓ! இளைய பாரதமே எழுக!!

ஓ! இளைய பாரதமே எழுக!! (சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்) (12/01/1863 - 04/07/1902) பழம்பெரும் பாரதத்தாயின் மடியில் மலர்ந்த மண்ணின் மைந்தனே! எழுந்திடு! விழித்திடு!! மது சுவாசத்திலும் மாது நாசத்திலும் மாட்டித் தவிக்கிறார்கள் உன் உடன்பிறந்தோர்! ஊழல் அலையிலும் ஊடுருவல் தொல்லையிலும் உருகுலைகிறார்கள் உன் குலத்தோர்! நாக விடம் கொண்ட நாகரிக நாட்டத்தால் நட்டப்படுகிறார்கள் நம்மவர்கள்! இழந்த பாரதப் பெருமையை ஈட்ட புல்லாரை புறந்தள்ள புயலேறு போல் புறப்படு! புதுரத்தம் பாய்ச்ச உத்வேக உருவெடு!! இளைஞ இந்தியாவே! காவித் துறவி காவியத் துறவி மேதினியெங்கும் மேவியத் துறவி வழிதனில் விழிதனை வைத்து விழிப்பை விதைத்திடு! எழுச்சியை எழுப்பிடு!! - அ.ச.கி. 

பூ நகை!

பூ நகை! பூக்கள் மலர்வது ஒருமுறை என்கிறார்கள் உன் புன்னகையை பார்க்காதவர்கள்!!               - அ.ச.கி.