Posts

Showing posts from August, 2018

தமிழ்த்தந்தை வாழ்த்து!

Image
தமிழ்த்தந்தை வாழ்த்து! (03/06/1924 - 07/08/2018) —————————— குமரியில் வள்ளுவனை நிறுத்தி இந்தியா இங்கிருந்து துவங்குகிறது என்றாய்! கொச்சைத் தமிழ் நீக்கி - பல கொஞ்சு தமிழ் செய்தாய்! சிலம்பையும் குறளையும் திசையெல்லாம் நெய்தாய்! எழுபது எண்பது ஆண்டாய் எழுத்து என்பது ஆண்டாய்! தெற்கிலிருந்து உதித்த முழுச் சூரிய துண்டாய்! எழுதாத நாளில்லை எதிர்க்காத ஆளில்லை எம்கோன் தமிழ் எழுத - சிறந்த எழுது கோளில்லை! உடன்பிறப்புக் கடிதங்கள் உற்சாக பானங்கள்! உன் கரகரப்பு மோனங்கள் உயிர்தடவும் கானங்கள்! பெரியாருக்கு தடி அடையாளம் அண்ணாவுக்கு பொடி அடையாளம் உனக்கு என்றும் தமிழ்க்குடி அடையாளம்! உன் மெய் பேணா திருந்ததனால்! உன் மை பேனா திருத்தாதனால்! உண்மை ஏனோ தெரிவில்லை - சொல் வன்மை இராவணன் வரவில்லை! என் தகையே தாய்த் தமிழே கலையே கடலே காதலே கதிரே கரகரப்பே! எம் கோனே தமிழ் தேனே தெற்குச் சூரியனே மடலே கனலே நெருப்பே சுறுசுறுப்பே! இதயத்தை இரவல் பெற்ற இளவலே! அண்ணாவிடம் திருப்பித்தர போனாயோ? தமிழ

வைகை நதி நாகரிகம்!

Image
பொருளாதாரச் செழிப்பு —————————— அன்றைய மதுரையின் பொருளாதாரச் செழிப்பை உணர்த்தும் விதமாய் பல இலக்கியச் சான்றுகள், நேரடிச் சான்றுகளும் கிடைக்கின்றன. அதில் ஒருத்தியாக தான் கோதை நிற்கிறாள். அதே சமயம் பொருளாதாரம் எப்படி பரவி விரவி கிடந்தது என்பதை பறைசாற்றும் விதமாய் ‘ அழகர்கோயில் கல்வெட்டு ’ நிற்கிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணப்பள்ளி அமைக்க மதுரையைச் சேர்ந்த ‘ ஆதன் ’ என்னும் பொற்கொல்லன் தானம் அளித்துள்ளான் என்று உரைக்கிறது. இது மதுரை பொற்கொல்லர்களின் உயர்வை காட்டுகிறது. அதேபோல் அதிக எண்ணிக்கையிலான பொற்கொல்லர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் கிடைக்கின்றன. அடுத்ததாய் ஒரு இலக்கிய ஆதாரம். அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாண்டியநாட்டு செல்வத்தை நந்த வம்சத்தின் செல்வச்செழிப்புடன் ஒப்பிடுகின்றார் ஆசிரியர். பொருள் தேடி வடதிசை சென்ற தலைவன் வர காலதாமதம் ஆனதால் கோபமுற்ற தலைவி, “பாடலிபுத்திரத்திலிருந்து எடுத்து சோணை நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்து வைத்த செல்வம், நம் செல்வத்தைவிட அதிகம் என்று எண்ணி அங்கு தேடிக்கொண்டிருக்கிறானோ?” என்று அந்