Posts

Showing posts from October, 2017

கண்டநாள் முதலாய்!

கண்டநாள் முதலாய்! உனக்கே தெரியாமல் உன்னை தொடரும்போது எனக்கே தெரியாமல் - என் உயிர் இறங்கி உன்னுடன் நடக்கும்! எதேச்சையாய் செய்வதுபோல் என்னை எதிர்பார்த்து திரும்புவாயே! அந்த நொடி பரவசத்துக்கே அரை ஆயுள் தொலைப்பேனடி! நிலவு தொட்டு மல்லி வரை உவமை தேடி தொடுத்தாலும் உன் அழகுக்கென்றும் பொருந்தியதே இல்லை! மருதாணி விரலெல்லாம் சிவப்பு என்ன சிவப்பு? வயதுவந்த முதல்நாள் என்னைக் கண்டு சிவந்தாயே! அதைவிடவா சிவப்பு? வார்த்தை கொண்டா பேசிச் சென்றாய்?! பார்வையில் அன்றோ வருடிச் சென்றாய்! அன்பின் தோள் ஏறி அழகே உனை அடைந்தேன்! ஆசை தமிழ் கொண்டு அணங்கே உனை வரைந்தேன்! உருகிடும் உன் அன்பை பனி போர்த்தி காத்திடவா? மருகிடும் உனை நானும் எனை போர்த்தி காத்திடவா?! இதயக் குழாயிக் கிடையே இணைப் பொன்று மாறியதோ! என் இதயக்கை பற்றி - உன் நினைவு என்மேல் ஏறியதோ?! இனி என்றும் உயிருள் கிறங்கி கிடப்பாயே! உணர்வுள் இறங்கி நடப்பாயே! -அ.ச.கி.

ஆரியம் திராவிடம்!

1971 முதல் சிந்து சமவெளிக் கலாச்சாரத்தை மொழி கோணத்தில் ஆராய்ந்து வருபவர் மொழியியலாளர் அஸ்கோ பர்ப்பொலா (Asko Parpola) . அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் கீழ் காண்க. (ஆரியம் திராவிடம் குறித்ததொரு பதில்) கேள்வி : ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்றும் சிந்துசமவெளி நாகரிகம் வேதகாலத்தையும் வேதங்களையும் சார்ந்ததென்றும் சில இந்திய ஆய்வாளர்கள் கூறிவருகின்றார்களே.. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன? பதில் : நகர்ப்புறக் கூறுகள்கொண்ட சிந்துசமவெளி நாகரிகம், வேதங்களில் காணப்படும் குடிபெயர் கலாச்சாரத்திலிருந்து வெகுவாக வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, வேதங்களில் விவரிக்கப்படும் சடங்குகளில் குதிரைக்கு ஒரு முக்கியப்பங்கு உண்டு. சிந்து சமவெளியில் குதிரை இருந்திருக்கவில்லை. எழுத்து முத்திரைகளில் விலங்குகளின் உருவம் வரிக்கோட்டு உருவம் காணப்பட்டாலும், குதிரை அவைகளில் பிரதிநிதித்துவப் படுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் கி.மு.2000த்திற்கு முற்பட்ட குதிரை எலும்பு தொல்லெச்சம் எதுவும் தென்னாசியாவில் கண்டறியப்படவில்லை. குதிரை தென்னாசியாவை சேர்ந்த விலங்கல்ல. சிந்த்ய்

அண்ணல் காந்தி!

அண்ணல் காந்தி! அரைநூற்றாண்டாய் அரைக்கு நூற்று ஆண்டாய்! பொய்யாமொழி நோற்று ஆண்டாய்! உலகு உய்யும்வழி ஏற்று ஆண்டாய்! உண்ணாதிருந்து வென்றாய்! உன் நா திருத்தி வென்றாய்! எண்ணாதிருந்து வென்றாய்! - வேறு எண்ணாதிருந்து வென்றாய்! பொய்யாதிருந்து வென்றாய்! - சில செய்யாதிருந்து வென்றாய்! அண்ணலே அய்யனே அகிம்சை ஆசானே! தடியனே தகப்பனே தன்னுயிர் தந்தோனே! பித்தனே பிதாவே பிறஉயிர் காவலனே! மன்னனே மதியோனே மண்ணை மதிப்போனே! விடுதலை தந்தாய் என்றே விடலையில் பயின்றோம் உன்னை! விமர்சனம் கடந்திருந்தால் விமர்சையாய் கொண்டாடியிருப்போம் நின்னை! காதலே கொண்டேன் உன்மேல் காவியமாய் ஆவாய் என்றே! கவலைகள் உன்மேல் எனக்கு காவியாய் நின்றாய் என்றே! ஒட்டிய தூசி தட்டியிருந்தால் கொட்டியிருப்பேன் என் நேசத்தை! எட்டிய இடமெல்லாம் உன்புகழை கொட்டடித்திருப்பேன் என் பாசத்தை! -அ.ச.கி.