Posts

Showing posts from September, 2018

தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (2)

Image
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (2) தொல்பழங்காலத்தலிருந்தே திராவிட இன மக்கள் அல்லது தமிழ்ப்பூர்வக்குடிகள் இந்தியா முழுமையும் பரவியிருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. சிந்துப்பகுதிகளில், மஹாராஷ்டிரத்தில், இலங்கையில், இன்ன பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் திராவிட குடியேற்றங்களுக்கான சான்றுகளை வெளிக்கொணர்ந்ததோடு, அதன் தொன்மையை, வளமையை உறுதிப்படுத்தியுள்ளன. பீஹார், வங்காளம், ஒரிஸா போன்ற இடங்களில் இன்றும் குய், குருக் போன்ற 14 தமிழின் கிளை மொழிகள் ( திராவிட மொழிக்குடும்பம் ) இன்றும் உயிர்த்திருப்பது தமிழர்கள் நாடெங்கிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நிறுவுகிறது. ஆரியர்களின் வருகையும் எழுச்சியும், அதனோடு ஒட்டி இங்கிருந்த பூர்வக்குடிகளின் வீழ்ச்சியும் தோல்வியும், அவர்களை தென்கோடி எல்லைக்கு தள்ளிவிட்டது எனலாம். ஹீராஸ் பாதிரியாரின் கூற்றுபடி ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படும் மொழி திராவிட மொழிக்குடும்பத்தின் பெற்றோராகும். அந்த வகையில் திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியான தமிழே ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படுவது என்று கொள்ள வேண்டும். பலுசிஸ்தானத்தில் காணப்படும் பிராஹ

தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (1)

Image
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (1) (நானறிந்த வரையிலான) பழந்தமிழர் வரலாற்றையும் அவர்தம் வாழ்க்கை முறையையும் அக, புற வாழ்க்கையினையும் தொகுத்து எழுதலாம் என்று எண்ணி துவங்குகிறேன். வரலாறு மிக நெடியது. சுருக்கிச் சொன்னாலும் ஒரு நாள் சொல்லலாம். அதனால் இதனை சின்னச்சின்ன தொடர் கட்டுரையாக எழுதுகிறேன். முதல் கட்டுரையில் தமிழர் பற்றிய சிறு முன்னுரை. தமிழ்நாடு மரபார்ந்த வகையில் கடல்களையும் மலைகளையும் எல்லைகளாக கொண்டுள்ளது. கால ஓட்டத்தில் ஆந்திரம், கேரளம் போன்று தனி மொழிகள் கிளைத்து தனித்தனி மாநிலங்களாகிவிட இன்று இருக்கும் தமிழகம் மட்டும் தமிழ்நாடாகியிருக்கிறது. முதன்மை நகரங்களாக முறையே மதுரை, தஞ்சாவூர், கோயமுத்தூர் மற்றும் காஞ்சிபுரம் முறையே பாண்டிய, சோழ, சேர, தொண்டை மண்டலங்களாக இருந்தன. இவை தவிர வெவ்வேறு காலக்கட்டங்களில் இலங்கையின் ஈழமும் தமிழர் வாழ்நிலமாக இருந்திருக்கிறது. தட்பவெப்ப நிலையிலும், இயற்கை வளங்களையும் கணக்கில் கொண்டால் தமிழகம் அவ்வளவு சிறப்பானது என்று கூறிவிட முடியாது. பெரும்பாலும் சூடு அதிகமான இடங்கள் தான். மழையை நம்பிய வெள்ளாமை என்பது குறைவுதான். பாசனம் தான் பெ