தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (3) இந்தக் கட்டுரையில் பழந்தமிழரின் வழிபாட்டு முறைகளையும் அதில் நிகழ்ந்து வந்த மாற்றங்களையும் பற்றி காண்போம். அவர்கள் இயற்கைக்கு நெருக்கமான வாழ்க்கை வந்தாலும், அவர்களின் வழிபாட்டு முறைகளிலும் இயற்கை ஆற்றல்கள் தான் பெரும்பான்மை இடத்தை பிடித்திருந்தன. ஆனாலும் மூடநம்பிக்கைகளும் தனித்த இடம் கொண்டிருந்தன. தமிழர் பின்பற்றிய வழிபாட்டு முறைக்கு தனித்த பெயர் இருந்ததில்லை. அதை ‘ தமிழர் வழிபாடு ’ என்றே கொள்வோம். அந்த தமிழர் வழிபாட்டில் ஒவ்வொரு வாழிடத்திற்கும் தகுந்தார் போல் வழிபாட்டுத் தெய்வங்கள் இருந்தன. குறிஞ்சி நிலத்தில் சேயோனும் , முல்லை நிலத்தில் மாயோனும் , மருத நிலத்தில் வேந்தனும் , நெய்தல் நிலத்தில் கடலோனும் , பாலை நிலத்திற்கு கொற்றவையும் வழிபாட்டுத் தெய்வங்களாய் இருந்து வந்தனர். இவை தவிர போரில் இறந்தவர்களையும், மூதாதையர்களையும் தெய்வமாய் வழிபடும் பழக்கமு தமிழர்களிடையே இருந்து வந்தது. போரில் இறந்தவர்களுக்கு ‘ நடுகற்கள் ’ அமைத்து அவர்கள் பெருமையை போற்றினர். இன்று இருக்கும் பல ஹிந்து வழிப்பாட்டுத் தலங்கள் ஒரு காலத்தில் தமிழர் வழிபாட்டிடங்கள...