தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (3)

தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (3)

இந்தக் கட்டுரையில் பழந்தமிழரின் வழிபாட்டு முறைகளையும் அதில் நிகழ்ந்து வந்த மாற்றங்களையும் பற்றி காண்போம்.


அவர்கள் இயற்கைக்கு நெருக்கமான வாழ்க்கை வந்தாலும், அவர்களின் வழிபாட்டு முறைகளிலும் இயற்கை ஆற்றல்கள் தான் பெரும்பான்மை இடத்தை பிடித்திருந்தன. ஆனாலும் மூடநம்பிக்கைகளும் தனித்த இடம் கொண்டிருந்தன. தமிழர் பின்பற்றிய வழிபாட்டு முறைக்கு தனித்த பெயர் இருந்ததில்லை. அதை ‘தமிழர் வழிபாடு’ என்றே கொள்வோம்.
அந்த தமிழர் வழிபாட்டில் ஒவ்வொரு வாழிடத்திற்கும் தகுந்தார் போல் வழிபாட்டுத் தெய்வங்கள் இருந்தன. குறிஞ்சி நிலத்தில் சேயோனும், முல்லை நிலத்தில் மாயோனும், மருத நிலத்தில் வேந்தனும், நெய்தல் நிலத்தில் கடலோனும், பாலை நிலத்திற்கு கொற்றவையும் வழிபாட்டுத் தெய்வங்களாய் இருந்து வந்தனர்.



இவை தவிர போரில் இறந்தவர்களையும், மூதாதையர்களையும் தெய்வமாய் வழிபடும் பழக்கமு தமிழர்களிடையே இருந்து வந்தது. போரில் இறந்தவர்களுக்கு ‘நடுகற்கள்’ அமைத்து அவர்கள் பெருமையை போற்றினர்.







இன்று இருக்கும் பல ஹிந்து வழிப்பாட்டுத் தலங்கள் ஒரு காலத்தில் தமிழர் வழிபாட்டிடங்களாக இருந்தவையே. ஹிந்து மதம் ஏற்றம் பெற்ற காலத்தில் தமிழர் வழிபாட்டிடங்களின் மீது இருந்த உரிமையை மெல்ல மெல்ல தமிழ் பூசாரிகளும், பாணர்களும் இழந்தனர். இப்படி பல தெய்வ வழிபாடுகளும் மூடநம்பிக்கைகளும் தமிழர் கொண்டிருந்தாலும் ‘ஜாதி’ என்பது தமிழர் கேட்டு அறியாத பொருள், பொருள் அறியாத சொல்.

இது இப்படி இருக்க, கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் வடஇந்தியாவில் இரண்டு பெரும் மதங்கள் தோன்றின. ஒன்று மகாவீரரால் நிறுவப்பட்ட சமணம். மற்றொன்று புத்தரால் நிறுவப்பட்ட பௌத்தம். இரண்டும் தான் முதன்முதலில் தென்னிந்தியாவிற்குள் நுழைந்த வேற்று மதங்கள். தமிழரின் வாழ்வியலை பெரிதும் மாற்றிய வழிபாட்டு முறைகள்.

கி.மு. நான்காம் நூற்றாண்டு வாக்கில் சமணம் தமிழகத்தை வந்தடைந்தது. மௌரியப் பேரரசரும், சமணத்துறவி பற்றபாகுவில் சீடருமான சந்திரகுப்த மௌரியர், வடஇந்திய சமணத்துறவிகளை தென்னிந்தியாவில் தம் மதத்தை பரப்பும் பொருட்டு இன்றைய கர்நாடகாவின் சரவணபெலகோலாவிற்கு கூட்டி வந்தார் என்கிறது வரலாறு. மகாவீரரின் நெறிகளை போதிப்பதற்காக இருப்பத்தைந்து ஆண்டு அரியணை துறந்தார். அதன் பின் தான் சமணத் துறவியர் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் பரவினர். சமணக் கோயில்கள் அமைத்து அது வலிபெற்று எழும் அதே சமயத்தில் தான் தமிழ் பூசாரிகளான பாணர்கள் தம் அதிகாரத்தை இழந்தனர். சிலப்பதிகாரத்தில் ‘அருகர்’ எனக் குறிப்பிடப்பட்ட உன்னத அறிவு தான் உலகை நிர்மாணிக்கிறது என்று சமணர்கள் நம்பினர்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் பௌத்தம் தமிழகத்தை வந்தடைந்தது. மற்றொரு மௌரியப் பேரரசரான அசோகர் பௌத்த பிரச்சாரகர்களை தென்னிந்தியாவிற்கு அனுப்பினார். புறநானூறு, பத்துப்பாட்டு போன்ற சங்க நூல்களும் மணிமேகலையும் தமிழரிடையே இம்மதம் பரவியிருந்ததை குறிப்பிடுகின்றது. பௌத்த ஆய்வாளர்களின் முயற்சியால் ஆயுர்வேத மருத்துவ முறை வளர்த்தெடுக்கப்பட்டு முன்னெடுத்து செல்லப்பட்டிருக்கிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகம் வந்த சீனப்பயணி யுவான் சுவாங், தமிழகத்திலும் இந்தியாவின் பிற இடங்களிலும் பௌத்தம் பரவியிருந்ததை குறிந்து ஆராய்ந்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் நூற்றுக்கணக்கான் பௌத்த மடாலயங்களையும், மகாயனப் பிரிவினரான (ஹீனயானா, மகாயானா என்பன பௌத்தத்தின் இரண்டு பிரிவுகள்) பத்தாயிரம் புத்த துறவிகளையும் கண்டதாக பதிவு செய்திருக்கிறார்.

சேர, பாண்டிய நாடுகளில் சமணம் செல்வாக்கு பெற்றிருக்க, சோழ தேசத்தில் பௌத்தம் பரவியிருந்திருக்கிறது. இம்மதங்களின் கொள்கையில் பல உலகம் போற்றும் அளவு சிறந்தவை என்றால் அது மிகையாகாது. கி.மு நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை ஏற்ற இறக்கங்களுடன் சமணமும், பௌத்தமும் தமிழகத்தில் புழங்கி வந்தது. ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் வழியே ஹிந்துமதம் பரவியதை ஒட்டு இவ்விரண்டு மதங்களும் வீழ்ச்சியுற்றன.

இவ்விரண்டு மதங்களை தொடர்ந்து, கிறிஸ்துவம் தமிழகத்தை வந்தடைகிறது. கி.பி. 52ல் அரபுக்கடலின் வழியே கிழக்கு நோக்கி பயணித்து மலபார் கடற்கரையில் மலங்காராவில் வந்து இறங்கினார் ஜெருசலேத்தின் புனித தாமஸ். அடுத்த இருபதாண்டுகள் போதனை பல செய்து எண்ணற்றவர்களை மதமாற்றம் செய்தார். ஏழு தேவாலயங்களையும் நிறுவினார். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சென்று சென்னையின் அருகே சிறுமலையில் போதனைகள் செய்து வந்தார். அந்த மலைதான் இன்று இருக்கும் பரங்கி மலை (ஆங்கிலத்தில் புனித தாமஸ் மௌண்ட்).



அதன் பின்னர் கிறிஸ்துவம் பெரிதாக வளர்ச்சி பெறவில்லை என்றாலும், கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து அடுத்த அலையான கிறிஸ்துவர்களின் வருகையால் அம்மதம் ஏற்றம் பெற்றட்டது. இதனூடே யூதர்களும் மலபார் கடற்கரையை அடைந்து அவர்கள் மதத்தை முன்னெடுத்த செல்ல நினைத்தார்கள். கொச்சியில் உள்ள யூதாலயம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

இப்படி ஒரு கட்டத்தில் தமிழரிடத்தில் ஐந்து மதங்கள் விரவிக்கிடந்தன.
#அசகி #தமிழர்வரலாறு

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!