மலர்தான் நான்! இன்னும் எத்தனை நேரம்?! இப்படியே அசைவற்று இருப்பது! இன்னும் எத்தனை நேரம்?! இமைநிறைய வேடிக்கை மட்டுமே காண்பது! இன்னும் எத்தனை நேரம்?! கரையின்மேல் அமர்ந்து கொண்டே கடலோடு உரையாடுவது!! நான் அசையாமல் இருக்க இருகைகள் அழுத்திப் பிடிக்கின்றன! காற்றோடு பறக்கலாம் என்றால் கயிறு கொண்டு கட்டிவிட்டார்கள்! ஏன்?! என்னை மட்டும் ஏன்! இத்தனை பேர் சுற்றியிருக்க என்மேல் மட்டும் ஏன் இத்தனை கரிசனம்?! விளையாடுவதில் கிடைக்கும் விடலைகளின் இன்பம் யார் அறிவார்?! சரி! எனக்காய் இத்தனை பிரயத்தனப்படும் இவர்களுக்கென, இரண்டு நிமிடம் துறவியாகிறேன்! ஆசைகளை துறக்கிறேன்!! அட! நான் மனதில் நினைத்ததை இவர்கள் செவிக்கு தூது சொன்னவன் யார்?!! துறவி என்றவுடன் தூக்கி பூஜையில் அமர்த்துகிறார்கள்!! "கவனிப்புகள்" கூடுகின்றன! ஊதுவர்த்தி தொடங்கி ஆர்த்திவரை அத்தனையும் செய்தாகிவிட்டது!! சாதமும் பரிமாறுகிறார்கள்?! பூஜைக்கு பின் பிரசாதமோ! ஆஹா! ஆவலாய்! ஆர்வமாய்!! ஆசையாய்!!! நான் எதிர்பார்த்த நொடி வந்தேவிட்டது!! கடலுடன் என்...