நான் அறிந்த பெரியார்!
நான் அறிந்த பெரியார்! என்னிடம் பல நண்பர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. நீ பெரியாரை தூக்கிப் பிடிப்பது ஏன், அவர் அப்படி என்ன செய்து விட்டார், கடவுள் மறுப்பால் விளைந்தது என்ன... இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்பது வாடிக்கை! அவர்களுக்கெல்லாம் அங்கங்கே நான் பதில் சொல்லியிருந்தாலும், ஒரு முழுமையான பதில், பெரியாரைப் பற்றிய முழுத்தரவை, தகவல் தொகுப்பை எங்கேயும் தர இயலவில்லை. நேரம் இல்லாதது, சிலருக்கு விளக்கம் கேட்க மனமில்லாமை என பல காரணங்கள் உண்டு! ஆகையால் இந்த பதிவில் என்னால் இயன்றதை, நான் அறிந்ததை பதிவிடுகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகமோ, கருத்து மாறுதலோ இருப்பின் கருத்திடவும். பெரியார் என்றாலே அவரை கேள்விப்பட்டோர், அரைகுறை ஞானம் கொண்டோர், முழுதாய் அறிந்தோர் என எல்லோருக்கும் முன்வந்து நிற்பது அவர்தம் 'கடவுள் மறுப்பு கொள்கை'. அதைத் தாண்டிய அவரின் செயல்பாடுகள், அவரைப் பற்றி முழுமையாய் அறியும் முயற்சி எடுத்தவர்கள் மட்டுமே அறிந்தவை. அவையாவன: -சாதிய ஏற்றத்தாழ்வை எதிர்த்தல் -பெண்ணுக்கு சம உரிமை -கடவுள், மத நம்பிக்கை என்ற பெயரில் நிகழ்ந்த மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது -சுயமரியாதைக் கொள்கை -...