வணக்கம்!
வணக்கம்!
ஆழ்மன நினைவுகளில்
அந்தரங்கமாய் ஒளிந்திருப்பவர்களே!
அரைகுறை பிரசவம் போல்
அவசரகதியில் நட்பதிகாரம் எழுதியவர்களே!
இங்குதான் என் நினைவெல்லாம்
இதயம்தாண்டி வேறெங்கு - என்று
இலக்கண நட்பு இயற்றியவர்களே!
உணர்தலும் உணர்தல் நிமித்தமுமே
உண்மை நட்பென்று
உணர்த்திய சில உயிர்களே!
வேறு பாதை ஏற்பதில்லை
உணவு வேண்டி நோற்பதில்லை
உறுதி உளம் கொண்டோரே!
ஓரிரு நாள் நட்போடு
ஓரம் ஒதுங்கி கொண்டவரே!
நட்பில் துவங்கி காதலில் முடித்தவரே!
காதலென்று துவங்கி நட்பை முறித்தவரே!!
உயர்வுக்கென்று ஒரு சிலரும்
ஊதியம் தருமென்று ஒரு சிலரும்
உருப்படியாய் படித்த வெகுசிலரே!!
உத்தமம் இதுதான் என்றும்
ஊரார் சொன்னார் என்றும்
உகந்தது இதுதான் என்றும்
உற்றார் வைதார் என்றும்
கட்ஆஃப் கிடைத்தது என்றும்
கதைஎழுத தெரியும் என்றும்
வேறுவழி இல்லை என்றும்
வேறு சிலகாரணம் கொண்டும்
பொறியியல் பட்டதாரி ஆனோரே!
எப்படி சந்திப்பு நிகழ்ந்திருந்தாலும்
என் சிந்திப்பில் நிற்கும்
என்னருமை நட்புறவுகளே!
இறுதிநாள் முடியும்போது
இமைவிட்டு இறங்கிய
ஈரத்துளிகளின் காரணகர்த்தாக்களே!
என் நினைவுகளை
தூசி தட்டியபோது
உங்கள் நினைவு கிட்டியது!
உங்கள் எலார்க்கும் வணக்கம்!!
-அ.ச.கி.
ஆழ்மன நினைவுகளில்
அந்தரங்கமாய் ஒளிந்திருப்பவர்களே!
அரைகுறை பிரசவம் போல்
அவசரகதியில் நட்பதிகாரம் எழுதியவர்களே!
இங்குதான் என் நினைவெல்லாம்
இதயம்தாண்டி வேறெங்கு - என்று
இலக்கண நட்பு இயற்றியவர்களே!
உணர்தலும் உணர்தல் நிமித்தமுமே
உண்மை நட்பென்று
உணர்த்திய சில உயிர்களே!
வேறு பாதை ஏற்பதில்லை
உணவு வேண்டி நோற்பதில்லை
உறுதி உளம் கொண்டோரே!
ஓரிரு நாள் நட்போடு
ஓரம் ஒதுங்கி கொண்டவரே!
நட்பில் துவங்கி காதலில் முடித்தவரே!
காதலென்று துவங்கி நட்பை முறித்தவரே!!
உயர்வுக்கென்று ஒரு சிலரும்
ஊதியம் தருமென்று ஒரு சிலரும்
உருப்படியாய் படித்த வெகுசிலரே!!
உத்தமம் இதுதான் என்றும்
ஊரார் சொன்னார் என்றும்
உகந்தது இதுதான் என்றும்
உற்றார் வைதார் என்றும்
கட்ஆஃப் கிடைத்தது என்றும்
கதைஎழுத தெரியும் என்றும்
வேறுவழி இல்லை என்றும்
வேறு சிலகாரணம் கொண்டும்
பொறியியல் பட்டதாரி ஆனோரே!
எப்படி சந்திப்பு நிகழ்ந்திருந்தாலும்
என் சிந்திப்பில் நிற்கும்
என்னருமை நட்புறவுகளே!
இறுதிநாள் முடியும்போது
இமைவிட்டு இறங்கிய
ஈரத்துளிகளின் காரணகர்த்தாக்களே!
என் நினைவுகளை
தூசி தட்டியபோது
உங்கள் நினைவு கிட்டியது!
உங்கள் எலார்க்கும் வணக்கம்!!
-அ.ச.கி.
Comments
Post a Comment