நான் அறிந்த பெரியார்!
நான் அறிந்த பெரியார்!
என்னிடம் பல நண்பர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. நீ பெரியாரை தூக்கிப் பிடிப்பது ஏன், அவர் அப்படி என்ன செய்து விட்டார், கடவுள் மறுப்பால் விளைந்தது என்ன... இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்பது வாடிக்கை! அவர்களுக்கெல்லாம் அங்கங்கே நான் பதில் சொல்லியிருந்தாலும், ஒரு முழுமையான பதில், பெரியாரைப் பற்றிய முழுத்தரவை, தகவல் தொகுப்பை எங்கேயும் தர இயலவில்லை. நேரம் இல்லாதது, சிலருக்கு விளக்கம் கேட்க மனமில்லாமை என பல காரணங்கள் உண்டு! ஆகையால் இந்த பதிவில் என்னால் இயன்றதை, நான் அறிந்ததை பதிவிடுகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகமோ, கருத்து மாறுதலோ இருப்பின் கருத்திடவும்.
பெரியார் என்றாலே அவரை கேள்விப்பட்டோர், அரைகுறை ஞானம் கொண்டோர், முழுதாய் அறிந்தோர் என எல்லோருக்கும் முன்வந்து நிற்பது அவர்தம் 'கடவுள் மறுப்பு கொள்கை'. அதைத் தாண்டிய அவரின் செயல்பாடுகள், அவரைப் பற்றி முழுமையாய் அறியும் முயற்சி எடுத்தவர்கள் மட்டுமே அறிந்தவை. அவையாவன:
என்னிடம் பல நண்பர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. நீ பெரியாரை தூக்கிப் பிடிப்பது ஏன், அவர் அப்படி என்ன செய்து விட்டார், கடவுள் மறுப்பால் விளைந்தது என்ன... இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்பது வாடிக்கை! அவர்களுக்கெல்லாம் அங்கங்கே நான் பதில் சொல்லியிருந்தாலும், ஒரு முழுமையான பதில், பெரியாரைப் பற்றிய முழுத்தரவை, தகவல் தொகுப்பை எங்கேயும் தர இயலவில்லை. நேரம் இல்லாதது, சிலருக்கு விளக்கம் கேட்க மனமில்லாமை என பல காரணங்கள் உண்டு! ஆகையால் இந்த பதிவில் என்னால் இயன்றதை, நான் அறிந்ததை பதிவிடுகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகமோ, கருத்து மாறுதலோ இருப்பின் கருத்திடவும்.
பெரியார் என்றாலே அவரை கேள்விப்பட்டோர், அரைகுறை ஞானம் கொண்டோர், முழுதாய் அறிந்தோர் என எல்லோருக்கும் முன்வந்து நிற்பது அவர்தம் 'கடவுள் மறுப்பு கொள்கை'. அதைத் தாண்டிய அவரின் செயல்பாடுகள், அவரைப் பற்றி முழுமையாய் அறியும் முயற்சி எடுத்தவர்கள் மட்டுமே அறிந்தவை. அவையாவன:
-சாதிய ஏற்றத்தாழ்வை எதிர்த்தல்
-பெண்ணுக்கு சம உரிமை
-கடவுள், மத நம்பிக்கை என்ற பெயரில் நிகழ்ந்த மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது
-சுயமரியாதைக் கொள்கை
-இட ஒதுக்கீடு
-அடக்கி ஆளப்பட்ட மக்களுக்கான சமூக நீதி
போன்றவை மிக முக்கியமானவை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசயத்தில் சார்பு கொள்கைகள் வெவ்வேறாக இருக்க வாய்ப்புண்டு. அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நடுநிலையோடு மேற்சொன்ன விசயங்களை சற்று உற்று நோக்கினால் அத்தனைக்கும் ஆணிவேர் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கையின் பெயரால் இருந்துவந்த மூடநம்பிக்கைகள் தான் என்பது புரியும். எனவே தான் கடவுள் எதிர்ப்பையும் சாதி ஒழிப்பையும் தன் முதல் மூச்சாக்கிக் கொண்டார். அவரின் வாழ்க்கை வரலாறை படித்தால் இதுபுரியும்.
பழம்பெரும் இந்த பாரத திருநாட்டில் இன்றும் தமிழ்நாட்டை தவிர்த்து பிறமாநிலங்களில் சாதி பெயரை சேர்க்காத மக்கள் கூட்டம் மிகக்குறைவு. நம் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை சேர்ப்பதை அவமானமாகவும் நம் மனம் ஏற்காத விசயமாகவுன் மாற்றியதுதான் இந்தக் கிழவனின் சாதனை.
அந்தக் காலத்தில் சுதந்திரத்திற்கும் சமூக நீதிக்கும் பாடுபட்ட ஒரே இயக்கம் என மார்தட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கூட தன் மாநாட்டு விளம்பரங்களில் 'பிராமணர்களுக்கு தனி இடம், தனிச் சாப்பாடு உண்டு' என்று விளம்பரப்படுத்தி வந்த காலம் அது. அப்படி பட்ட சூழலில் வெறும் எதிர்ப்பு போதாது, துவம்சம் செய்யும் அளவு எதிர்ப்பு பேராற்றல் தேவை என்பதறிந்துதான் பெரியாரின் செயலாக்கங்கள் இருந்தன.
இட ஒதுக்கீடு பற்று இன்று பலர் பலவாறாக சொன்னாலும், உண்மையில் அதன் பலனும் அதன் வெற்றியும் அனுபவிக்கும்போதுதான் தெரியும். பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டு கிடந்த (சரியாகச் சொன்னால் 'அடிமைப்படுத்தி' வைக்கப்பட்ட) சமூகத்தை மேலெழுப்பி கொண்டு வருவதும், அத்தனை பேருக்கும் விழிப்புணர்வு ஊட்டுவதும், வேரூன்றிக் கிடக்கும் கருத்துகளை எதிர்ப்பதும் மிக சாதாரண காரியங்கள் அல்ல. அவற்றை எல்லாம் மிகச் எளிதாக சாதிக்கவில்லை. உடல்நிலை ஒத்துழைக்காத சமயத்திலும்கூட அவரின் ஓட்டம் நிற்கவில்லை.
தீண்டாமை தாண்டாவமாடிய நாட்களில் அதன் தலையில் கொட்டி அழுத்தியவர் தான் இந்த பெரியார். இரட்டைக்குவளை முறை, தனித்தனி தெருக்கள், நீர்நிலைகளை கூட தனித்தனியாக பிரித்து வைத்திருந்தனர். அப்படி இருந்த ஊரை இத்தனை தூரம் கூட்டி வந்திருக்கிறார் இந்தக் கிழவன். பெண் பிள்ளைகளுக்கு கட்டாயக் கல்வி, சம உரிமை எனப்பல்வேறு நிலைகளில் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்சென்றவர். பெண்கள் பங்கெடுக்காமல் எந்த சமூக மாற்றமும் நிகழாது என்று சொன்னவர், அதோடு நில்லாமல் தன் வீட்டு பெண்டிரையும் எடுத்துக்காட்டாய் நிற்க வைத்தவர் இவர்.
கள்ளுக்கடை எதிர்ப்பு துவங்கிய சமயம், தென்னை தான் கள்ளுக்கு ஆதாரம் என்று தெரிந்ததும் தன் தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தியவர் இவர்.
சமூக சீர்த்திருக்கங்களை பெரியாருக்கு முன்னும் பின்னும் பலர் முன்னெடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் பெரியார் அளவுக்கு வெற்றி ஈட்டியதில்லை, மாற்றங்களை நிகழ்த்தியதில்லை. பெரும்பாலானோர் தோல்விப்பாதையையே அடைந்திருக்கின்றனர்.
தள்ளாத வயதிலும் மூத்திரப் பையை தூக்கிக்கொண்டு ஊரெல்லாம் சென்று பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும், சமூகப் போராட்டத்தையும் முன்னெடுத்தவர். பாமர மக்களுக்கு எட்டாத விசயங்களையும் செய்திகளையும் ஆன்மிகம் என்பதும், கடவுளை அடையும் வழி என்று அர்த்தம் கற்பிப்பது எல்லாம் எவ்வளவு மூடத்தனம் என்று எடுத்துரைத்தார். மேலும் அந்த கருத்துக்களின் பின்னூட்டம் கீழ்தட்டு மக்களை அடக்கியாள்தல் தான் என்பது பற்றி அறியா மக்களையும், அறிந்தும் ஒன்று செய்ய இயலா மக்களையும் தட்டியெழுப்பியவர் இவர். அவை எப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் என்பதை பற்றி விவரிக்க ஒரு முழு நூல் கூட போதாது.
"இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியார் மக்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள். பெரியார் சுற்றுப் பயணம் செய்த தூரம் - 8,20,000 மைல்கள். பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு. பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700. உரையாற்றிய நேரம் - 21,400 மணி நேரம். அத்தனை சொற்பொழிவுகளையும் பதிவுசெய்து ஒலிபரப்பினால், 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்."
http://tamil.thehindu.com/…/%E0%AE%8E%E0…/article5494933.ece
இன்னும் எத்தனையோ சம்பவங்களும், அவர் முன்னெடுத்த சமூகப் போராட்டங்களும் எண்ணிலடங்காதவை. முழுமையான புரிதலின்றி மதவாதிகள் பரப்பும் எதிர்ப்பு பிரச்சாரங்களை மட்டும் நம்பி எந்த முடிவுக்கும் வரவேண்டாம். நானே கூட பல செய்திகள் எழுதாமல் விட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் எனக்கு சொல்லுங்கள். மாற்றுக்கருத்து இருப்பின் விவாதிக்கலாம்.
இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெரியார் பெயர் சொல்லாமல் சமூக மாற்றங்களை பட்டியிலிட முடியாது. அவர் கருத்து சொல்லாத எந்த சமூக மாற்றமும் இருக்காது என்பது நிதர்சனம். 'காரல் மார்க்ஸ்' கம்யூனிஸத்தின் தந்தை என்றால், சமூக சீர்திருத்தங்களின் தந்தை பெரியார்.
வாழ் கிழவா வாழ்! - ஆழி
சூழ் உலகும் - நீல
நீள் வானும் - இன்னும்
காணும் உயிரனைத்தும்
வாழும் வரை வாழ் கிழவா!!
-அ.ச.கி.
Comments
Post a Comment