Skip to main content

அண்ணல் காந்தி!

அண்ணல் காந்தி!
அரைநூற்றாண்டாய்
அரைக்கு நூற்று ஆண்டாய்!
பொய்யாமொழி
நோற்று ஆண்டாய்!
உலகு உய்யும்வழி
ஏற்று ஆண்டாய்!

உண்ணாதிருந்து வென்றாய்!
உன் நா திருத்தி வென்றாய்!
எண்ணாதிருந்து வென்றாய்! - வேறு
எண்ணாதிருந்து வென்றாய்!
பொய்யாதிருந்து வென்றாய்! - சில
செய்யாதிருந்து வென்றாய்!

அண்ணலே அய்யனே
அகிம்சை ஆசானே!
தடியனே தகப்பனே
தன்னுயிர் தந்தோனே!

பித்தனே பிதாவே
பிறஉயிர் காவலனே!
மன்னனே மதியோனே
மண்ணை மதிப்போனே!

விடுதலை தந்தாய் என்றே
விடலையில் பயின்றோம் உன்னை!
விமர்சனம் கடந்திருந்தால்
விமர்சையாய் கொண்டாடியிருப்போம் நின்னை!

காதலே கொண்டேன் உன்மேல்
காவியமாய் ஆவாய் என்றே!
கவலைகள் உன்மேல் எனக்கு
காவியாய் நின்றாய் என்றே!

ஒட்டிய தூசி தட்டியிருந்தால்
கொட்டியிருப்பேன் என் நேசத்தை!
எட்டிய இடமெல்லாம் உன்புகழை
கொட்டடித்திருப்பேன் என் பாசத்தை!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!