வைகை நதி நாகரிகம்!
பொருளாதாரச் செழிப்பு
——————————
அன்றைய மதுரையின் பொருளாதாரச் செழிப்பை உணர்த்தும் விதமாய் பல இலக்கியச் சான்றுகள், நேரடிச் சான்றுகளும் கிடைக்கின்றன. அதில் ஒருத்தியாக தான் கோதை நிற்கிறாள்.
அதே சமயம் பொருளாதாரம் எப்படி பரவி விரவி கிடந்தது என்பதை பறைசாற்றும் விதமாய் ‘அழகர்கோயில் கல்வெட்டு’ நிற்கிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணப்பள்ளி அமைக்க மதுரையைச் சேர்ந்த ‘ஆதன்’ என்னும் பொற்கொல்லன் தானம் அளித்துள்ளான் என்று உரைக்கிறது. இது மதுரை பொற்கொல்லர்களின் உயர்வை காட்டுகிறது. அதேபோல் அதிக எண்ணிக்கையிலான பொற்கொல்லர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் கிடைக்கின்றன.
அடுத்ததாய் ஒரு இலக்கிய ஆதாரம். அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாண்டியநாட்டு செல்வத்தை நந்த வம்சத்தின் செல்வச்செழிப்புடன் ஒப்பிடுகின்றார் ஆசிரியர். பொருள் தேடி வடதிசை சென்ற தலைவன் வர காலதாமதம் ஆனதால் கோபமுற்ற தலைவி, “பாடலிபுத்திரத்திலிருந்து எடுத்து சோணை நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்து வைத்த செல்வம், நம் செல்வத்தைவிட அதிகம் என்று எண்ணி அங்கு தேடிக்கொண்டிருக்கிறானோ?” என்று அந்த பாடலில் கேட்கிறாள்.
பழந்தமிழ்
—————
மொத்தமாய் இந்தியாவில் இதுவரை கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் கிட்டதட்ட 60% கல்வெட்டுகள் இருப்பது தமிழ்நாட்டில் தான். அதிலும் பெரும்பான்மை மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் தான். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘புள்ளிமான்கோம்பை’ நடுகல், ‘தமிழி’ எழுத்துக்கள் கொண்டது என்றும் அது அசோகர் காலத்துக்கும் முந்தையது என்றும் ஆய்வறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் ‘அசோகர் காலம்’ முதன்முதலில் எழுத்து வடிவம் துவங்கிய காலம் என்று இருந்த கூற்றே பொய்யானது.

மேலும் இந்தியாவிலேயே எழுத்தும் எழுத்து சார்ந்த அடையாளங்களும் மதுரையில் தான் அதிகம் கிடைக்கிறது. இங்கு தான் பண்டைய சமணப் பள்ளிகளும், பௌத்தப்பள்ளிகளும், வேதப் பள்ளிகளும் மிகுந்து இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. இன்று இருக்கும் சான்றுகளும் அதையே உறுதிப்படுத்துகின்றன.
இதர செய்திகள்
———————
வைகையின் தொடக்க இடமான வெள்ளிமலையில் இருந்து அது வங்கக்கடலில் கலக்கும் இடமான அழகன்குளம் ஆத்தங்கரை வரை, நதியின் இருபுறமும் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள எல்லா கிராமங்களிலும் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட சுமார் 350 கிராமங்களில் 293 கிராமங்களில் ஏதேனும் ஒருவகை தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. 256 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு நதியில் சுமார் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு கிராமம் பழமைகளை சுமந்தபடி நிற்கிறது.
கீழடியில் தோண்டப்பட்ட 43 அகழாய்வுக் குழிகளில் சுமார் 2 லட்சம் பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. தவிர கீழடியில் இதுவரை 5300 வெவ்வேறு தொல் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. அதில் குறிப்பாக அந்த 5300 பொருட்களில் ஒன்று கூட மதச் சார்பானவையோ, கடவுள் சார்பானவையோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணற்ற கட்டிடங்களின் தரைதளங்கள், நீண்டு செல்லும் மதிற்சுவர்கள், முத்துக்கள், சதுரங்கக் காய்கள், தந்தத்தால் ஆன பல்வேறு பொருட்கள், எண்ணிலடங்கா மணிகள், எடைக்கற்கள், நெசவுக்கான தக்கை, பானை ஓடுகள், பிராமி எழுத்துக்கள், ஆப்கானிஸ்தான் பகுதியை சேர்ந்த சூதுபவளத்தால் ஆன மணிகள், ரோமானிய மண்பாண்டங்கள், வடமொழி பிராகிருந்தங்கள் என ஏராளமாய் கிடைத்திருக்கிறது. மூடிய வடிகால், திறந்த வடிகால், சுடுமண் குழாய்களால் ஆன வடிகால்கள் கிடைத்திருக்கின்றன. இவை இதுவரை இந்தியாவிலேயே வேறெங்கும் கிடைக்கவில்லை.
இப்படி தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான முழு அடையாளங்களும் இங்கு தான் முதன்முறை கிடைத்திருக்கிறது. இன்னும் ஓரு குறிப்பிடப்பட வேண்டிய செய்தி, கீழடியில் உள்ள தொல்லியல் மேட்டின் மொத்த பரப்பளவு 110 ஏக்கர், அதில் வெறும் 50 செண்ட் அளவில் தான் அகழ்வாய்வு நடந்துள்ளது.
கோவலன் முதன்முறை மதுரையை அடைந்து அந்நகரை பார்க்கும்போது, அந்நகரின் அழகை கோவலனின் கண்வழியே அந்நகரின் அழகை விவரித்துவிட்டு வருவார். அப்போது மதுரையின் கம்பீரமிக்க கோட்டைமதில்களை பாதுகாக்கும் பணியில் யவன (கிரேக்க) வீரர்கள் ஈடுபட்டு இருப்பதை குறிப்பிடுகிறார். அதைத் தவிர்த்து கிரேக்க வீரர்கள் தங்கியிருந்த ‘யவனச்சேரிகள்’ பற்றிய குறிப்பு இலக்கியங்களில் ஏராளமாய் கிடைக்கிறது.
கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கான ஆதாரம் இப்போது கிடைத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 129 இடங்களில் ரோமனிய நாணயங்கள் கிடைத்திருக்கிறது. அதில் 90 சதவிகிதம் தமிழ்நாட்டில் கிடைத்திருக்கிறது. அதேபோல் ரோமானிய செனட்டில் முத்துக்களுக்காக கண்டன உரை நிகழ்த்தப்பட்டதும், வைகை கரை நெடுகிலும் ரோமானிய நாணயங்கள் கிடைத்ததும் வரலாற்று ஆதாரங்களாய் நின்று நமக்கும் ரோமானியர்களுக்குமான உறவை சொல்லுகிறது.
மிகப்பழமையான ‘தமிழ் பிராமி’ எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் 33 கிடைத்திருக்கிறது. அவற்றில் சுமார் 22 கல்வெட்டுகள் வைகைப் பகுதியில் தான் கிடைத்திருக்கிறது.
மொழியியல் அறிஞர் கால்டுவெல் தமிழ்மொழியின் சிறப்பை பற்றிக்கூறும்போது ‘இது ஒரு சமயச்சார்பற்ற மொழி’ என்கிறார். இதற்கான அடையாளமாய் தான் கீழடியும், இன்ன பிற தொல்லியல் சான்றுகளும் நிற்கின்றன.
உலகின் தொல்நாகரிகங்கள் ஒன்றான ‘வைகை நதி நாகரிகம்’ கம்பீரமாய் பல ஆயிரம் ஆண்டுகளின் நினைவுகளையும் பெருமைகளையும் சுமந்தபடி நிற்கிறது.
#அசகி
#வைகைநதிநாகரிகம்
Comments
Post a Comment