விண்ணப்பம்!!

விண்ணப்பம்!!


சாய்ந்திருக்க திண்தோள்!!
மகிழ்ந்திருக்க சிறுவீடு!!


காலையில் எழுந்திருக்க - என்
கண்கள்!!


துவண்டு - நீ விழும்போது
என் மார்பு!!


உறக்கம் வரா வேளையில்
தலையணையாய் நான்!!


பேச்சுத்துணைக்கு என் கவிதைகள்!!
பேசாதிருக்க சில முத்தங்கள்!!!


இசை கற்க- குழந்தைச் சிரிப்பு
இரண்டு!!!


முதுமையில் செலவு செய்ய,
முதல் சேமிப்பாய் - என்
மொத்த காதல்!!!




நீ விளையாட
சிறுகுழந்தையாய் நான்!!
நாம் விளையாட
இருகுழந்தையாய் நாம்!!!


சமைத்திட - என் இதழ்கள்!
சமைக்க நீ!!
சுவைக்க நாம்!!!


காற்றோடு கைகோர்த்து நடக்கும்
சில மாலைகள்!!!


மேற்சொன்ன அனைத்திற்கும்,
மாதம் "மூன்றுநாள்" விடுமுறை...
அம்மூன்றுநாளும்,
தாயாய் நான் - என்
மடியில் நீ!!!


இத்தனையும்
நான் உனக்கு தருவேன்!!!
பதிலுக்கு நீ -
சிறு சிரிப்பால்
சம்மதம் என்று மட்டும் தெரிவி!!!


- ..கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!