மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு
என்னை மறந்து
எங்கோ பறந்த
இருதயம் இழுத்து வந்து!!
இருநிமிடம் இருத்தி வைத்து,
அமைதி கொண்டு
தைத்து வைத்த
சொல்லின் மெத்தை இதோ!!!

அண்ணன் தங்கைக்கான உறவில்
அடைந்து கிடக்கும் இன்பம் பற்றி
அறிவாயா?!

இதயத்தில் - என்
இனியவளுக்கு மட்டுமா
இடம் கொடுப்பேன்?!
(இதய) சொத்தில் சமஉரிமை
நீயும் கொண்டாடு!!

என்
இதயவீட்டில் துள்ளித்திரி!
எல்லைகள் ஏறி மிதி!!
தொல்லைகள் தூர ஏறி!!

புண்ணியத்தலம் என்று பூஜி!
அந்நியத்தலம் என்பதை மற!!
"அண்ணி"யத்தலம் என்பதை மட்டும்
நினைவில் வை!!

உன்
வீட்டுத் தொட்டிலில் உறங்கும் - என்
வீட்டு மருமகன்
இருட்டில் அழுவானா?!
விட்டில் பூச்சி
வீட்டில் நிரப்பட்டா?!

உன்
சிரிப்பில் சிதைந்து போன
சில கோபுரச் சீமான்கள் இருக்கலாம்!!
ஆனால்-
அதில் புதைந்து கிடக்கும்
அர்த்தம் அறியும்
வித்தை பயின்றவன் நான்!!

உண்மை ஒன்று உரைக்கிறேன்!
உலகத்து செல்வ எல்லாம்
உன் காலடியில் கிடத்திட முடியாது தான்!!
ஆனால்-
உனக்கென ஒரு உலகத்தை
உருவாக்குவேன் நான்!!

மெருதுவாய்,
மிக மெருதுவாய்! - இதை
மீண்டும் ஒரு முறை
உன் பார்வையால் வருடுவாய்!!
என் உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு
என்று இதை கருதுவாய்!!!

                     -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!