ஆலமரத்து வீடு!!

ஆலமரத்து வீடு!!


ஆலமரத்து வீடு
ஆயிரம் பாடம் சொல்லும்!!

ஆலங்குயில் பாடம் சொல்லுமா?! - என்று
ஆச்சரியமா மனிதா?!
ஆம்!
அது பாடம் சொல்வது
ஆறறிவு கொண்ட உமக்குத்தான்!!!


ஆறாம் பாடமாய் மட்டுமே
தமிழைப் பயின்ற மனிதா!!
மருதநில வழக்கமே
மாந்தர் அதிகாலை எழுவதுதான்!
மறந்தாயா?!


பகுத்துண்ணும் பழக்கத்தை
பறவையினம் பார்த்தாவது
பழகுவாயா?!


உழைத்து உண்டால்தான்- அவைக்கு
உறக்கமே வரும்!
உண்மை அறிவாயா?!
தம் தகுதிதாண்டி
உயரும் ஆசைகொள்ள
அவை அனுமதிப்பது இல்லை!!


எல்லாவற்றிற்கும் மேல்-அவை
மறந்தும்கூட- தன் தாய்மொழியை
மறக்க நினைப்பதில்லை!!
அறிவாயா நீ?!


அப்படிப்பட்ட வீடுகள் எல்லாம்-இன்று
நீ வளர்க்கும்
நீண்ட இரும்பு மரங்களால்
நிர்கதியாய் நிற்கின்றன!!!


கொஞ்சம் மனிதனாய் மாறு
மனிதா!!!


                        -..கி

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!