எதை எனக்கு அருள்வாய்?!
எதை எனக்கு அருள்வாய்?!
பஞ்சணை தேவையில்லை - உன்
நெஞ்சணைத்த போதினிலே!
துஞ்சிட தோணவில்லை - நீ
கொஞ்சி பேசயிலே!
காணும் திசை யாவிலும்
கண்ணே உன்னால் நகர்கிறேன்!
பாரின் மிசை சாவிலும்
பெண்ணே உன்னை நுகர்கிறேன்!
காதலும் ஓர் நோய்தான்
உருக்குதே உயிரையும்!
சாதலும் ஓர் வரம்தான்
சேர்க்குமே நம்மையும்!
நம்மிடையே காதலை
அழைப்புகள் அளக்குமே!
காதலின் கரைகளை
கண்ணீர் வரையுமே!
காதலை பிரிந்தபின்
உயிர் வாழ்வது எவ்விதம்?!
தீயும் அணைந்தபின்
வெப்பம் இருக்குமே அவ்விதம்!
உந்தன் விழி கண்மையே
கலைந்து விடக்கூடாதே!
என்னை ஈர்த்த பெண்மையே
நீயும் அழுது விடாதே!
எதுகையும் மோனையும்
எதுக்கடி உன்னிடம்?!
என் கவிதைத் தமிழுமே
பிறந்ததே உன்னிடம்!
தாண்டி செல்ல மனமில்லை - உன்
தூண்டில் விழி வீழ்ந்தபின்!
மண்டி யிட்டு கேட்கிறேன்
ஏன்டி எதை எனக்கருள்வாய்?!
காவி ஏற்க (எனக்கு) மனமில்லை - என்
காதலை ஏற்றிடு!
பாவி - தோற்க மனமில்லை
சாதலை நோற்கிறேன்!
-அ.ச.கி.
பஞ்சணை தேவையில்லை - உன்
நெஞ்சணைத்த போதினிலே!
துஞ்சிட தோணவில்லை - நீ
கொஞ்சி பேசயிலே!
காணும் திசை யாவிலும்
கண்ணே உன்னால் நகர்கிறேன்!
பாரின் மிசை சாவிலும்
பெண்ணே உன்னை நுகர்கிறேன்!
காதலும் ஓர் நோய்தான்
உருக்குதே உயிரையும்!
சாதலும் ஓர் வரம்தான்
சேர்க்குமே நம்மையும்!
நம்மிடையே காதலை
அழைப்புகள் அளக்குமே!
காதலின் கரைகளை
கண்ணீர் வரையுமே!
காதலை பிரிந்தபின்
உயிர் வாழ்வது எவ்விதம்?!
தீயும் அணைந்தபின்
வெப்பம் இருக்குமே அவ்விதம்!
உந்தன் விழி கண்மையே
கலைந்து விடக்கூடாதே!
என்னை ஈர்த்த பெண்மையே
நீயும் அழுது விடாதே!
எதுகையும் மோனையும்
எதுக்கடி உன்னிடம்?!
என் கவிதைத் தமிழுமே
பிறந்ததே உன்னிடம்!
தாண்டி செல்ல மனமில்லை - உன்
தூண்டில் விழி வீழ்ந்தபின்!
மண்டி யிட்டு கேட்கிறேன்
ஏன்டி எதை எனக்கருள்வாய்?!
காவி ஏற்க (எனக்கு) மனமில்லை - என்
காதலை ஏற்றிடு!
பாவி - தோற்க மனமில்லை
சாதலை நோற்கிறேன்!
-அ.ச.கி.
Comments
Post a Comment