தைத்திங்கள் அதன் விடியலில், அமைதியாய் ஒரு யுக மாற்றத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தது. இது பற்றி நம்மூர் அரசியல் ஆன்றோர்கள் அறிந்திருக்க நியாயமில்லை! அவர்கள் தத்தமது கனவுகளில் " முதல்வர் " பட்டத்தை தம் பெயர்ப்பலகையில் கருத்தாய் பொறித்துக்கொண்டிருந்தனர்! 'எமக்கு தொழில் கலாய்த்தல், மீம்ஸ் போடுதல்' என்றே இயங்கிக்கொண்டிருக்கிறது இளைஞ உலகம், என்ற விமர்சனத்தை இளையதலைமுறை தொடர்ந்து எதிர்கொண்டு வந்தது! ஆனால் இன்று! " வெட்டி வீழ்த்தும் அளவு கூர்மையானது எங்கள் பார்வை! மொத்த உலகமும் திரும்பி பார்க்கும் அளவு சத்தமானது எங்கள் மௌனம்! கரைதாண்டும் கடலை, கட்டிப்போடும் வலிமைமிக்கது இணைந்த எம் கைகள்! " என்று சொல்லாமல் சொல்கிறது இந்த இளைஞர் பெருந்திரள்!! கலாய்ப்பில் உள்ள கோபத்தையும், மீம்ஸ்-ல் உள்ள ஆழ்ந்த அரசியல் பார்வையும் உணரும் அளவுக்கு, பலரின் மனக்கண்கள் நல்ல நிலையில் இல்லை என்பது மட்டும் ' உள்ளங்கை நெல்லிக்கனி '. " மச்சி! வெளிய போலாமா?! "- ஒரு இளைஞனிடம் நீங்கள் கேட்கும் இந்த ஒற்றை கேள்விக்கு ஓராயிரம் வகை...