உழவர் திருநாள்!
உழவர் திருநாள்!
நீர் - எமக்கு
நீர் விடமறுப்பீரு!
நாத்து நட போனா
காத்துகூட வஞ்சிக்குது!
சோத்துல நீவிர் கைவைக்க - நான்
தோத்து, கன்னத்துல கைவைக்கேன்
நிதமும்!
கட்டிக் கரும்பு
வெட்டி எடுத்து
இரத்தச் சாறு குடிச்சு,
எச்சமுனு நீவிர் துப்புறது
கரும்பு சக்கை இல்ல!
என் உடம்பு தக்கை!!
உங்களுக்கு எல்லாம்
தை பொறந்தா வழி!
எமக்கு
பொறந்தததிலிருந்தே வலி!!
உரம்வாங்க காசுதான் இல்ல
உடம்பு இருக்கே!
உசுர கொடுக்கேன்!
உரமாகும் இந்த மண்ணுக்கு!!
இன்னும் எத்தனையோ பிரச்சனை
இங்க மிச்சம் இருக்கு!!
அதையெல்லாம் சித்த சுமக்கறீகளா?!
இன்னைக்கி உழவர் திருநாளாம்!
கொண்டாடிட்டு வந்தர்றேன்!!
-அ.ச.கி.
Comments
Post a Comment