வேலுப்பிள்ளை பிரபாகரன்!

அருமை தலைவா! அருந்தமிழ் புதல்வா!!
வேலுப்பிள்ளை பிரபாகரன்!
(26/11/1954 - 18/05/2009)
மஞ்சள் பூசிய
தீக்கொழுந்து ஒன்றின்
தீவிரம் காட்டியவன்!

தாயின் கருவறை
இருட்டிலேயே - புரட்சி
திட்டம் தீட்டியவன்!

மண்ணின் மகுடம்
மலைகளைப் போன்றே
மன உறுதி கொண்டவன்!

உற்ற உறவுகள்
இன்புற்றிருக்கவே
உள உறுதி பூண்டவன்!

மகரந்தம் கூடி
வளர்த்த செடிபோல்
தேனொழுகும் பேச்சுடையான்!

வேண்டியதெல்லாம்
விடுதலை என்றே
ஒற்றை மூச்சுடையான்!

முப்படை கொண்டே
தனி ராஜ்ஜியம் செய்த
ராஜ ராஜனவன்!

'கரிகாலன்' என்றோர்
பெயரும் கொண்டு
நடமாடிய காலனவன்!

தாய்த்திருநாட்டின்
சொந்தத்தை எல்லாம்
அடைகாத்த அண்ணலவன்!

'கடமை கண்ணியம் கட்டுப்பாடு'
காத்த விதத்தில்
அண்ணாவுக்கும் அண்ணனவன்!

ஆழிப் பேரலையும்
ஊழிப் பெருங்காற்றும்
கலவு கொள்ள
பிறந்த மகன்!

சூழ்ந்த நீள்வானமும்
வாழ்ந்த யாழ்ப்பாணமும்
இழவு கொள்ள
இறந்த மகன்!

'மயிர் போல் அன்றோ உயிரும்?
என்றோ ஒருநாள்
உதிர்ந்தே போகும்!'
என்றே வாழ்ந்தவனை
வென்றே வீழ்ந்தது மண்ணும்!

'புலி' பசித்தாலும் புல் மேய்வதில்லை!
உயிர் நசித்தாலும் கால் ஓய்வதில்லை!!

தன்னுயிர் மதியாதவர்களை
உலகம் மதிக்கும்!
வேற்றுயிர் காத்துப் பார்
உலகம் உன்னை துதிக்கும்!
                   -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!