அக்கா மகள்!

அக்கா மகள்!
பூவையிவள் பூப்படைந்தாள் இன்று!
பூவே இவள் பூத்துவிட்டாள் இன்று!!
மொட்டவிழ்ந்த சேதி ஒன்றை
கொட்டடித்து சொல்லோம், வாரீர்!!

உடல் மறைக்கும் பச்சை சேலை
உடுத்திவிட அத்தைமாரே வருக!
முற்றம் மறைக்கும் பச்சை ஓலை
முடைந்துகட்ட மாமன்மாரே வருக!!

சத்து சேர்க்கும் பச்சை முட்டை
மிச்சமில்லாமல் குடிச்சிடனும்!
மாமன்பேசும் குறும்புவார்த்தை
அத்தைக்கு சொல்லாம வெச்சுகிடனும்!!
இப்படி அப்படி அறிவுரை சொல்லி
மனசுக்கும் வயசுக்கும் பலம்சேர்க்க
மற்றோர் எல்லாம் வருக!!

பார்வதி (கௌரி) மகளை
பாடிட வருக!
வள்ளிமணாளன்(முத்துக்குமார்) வாரிசுக்கு
வாழ்த்துச் சொல்ல வருக!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

ஓ! இளைய பாரதமே எழுக!!

தொன்மதுரை!