ஸ்டெர்லைட் எரிகிறது!

#ஸ்டெர்லைட் எரிகிறது!

எங்க மண்ணை தான கேட்டோம்
அந்த ஒன்ன தான கேட்டோம்!
உசிரக் கூட தாரோம்
எங்க மண்ணை தான கேட்டோம்!

எங்க மக்க எல்லாம்
இங்க மரிச்சு கெடக்கான்
நக்கி பிழைச்சவனெல்லாம்
எக்கி நெஞ்சுல மிதிக்கான்!

எங்க உசுர எல்லாம்
மசுருனு சொன்னான்!
விசிறின பணத்துக்காக
தோட்டாவ தொண்டைக்குள் விட்டான்!

துப்பாக்கிக்கு உசிர் இருந்தா
குண்டை துப்பியிருக்குமா?
துப்புக்கெட்ட அரசு அதிகாரி
மண்டை தப்பியிருக்குமா?

இலட்சம் 15 தர்றோம்முனு
சொன்னவங்க தாங்க!
இலட்சணம் - ஜனநாயகத்த
கொன்னவங்க தாங்க!!

சோறு கெட்டு போனா தின்னு
வாழ முடியுமா? - இந்த
கூறு கெட்ட போன அரசு
ஆள முடியுமா?

வீடு வாசக் காத்திருக்குமே
என்னனு சொல்ல?
குடும்பம் குழந்தை காத்திருக்கும்
என்னனு சொல்ல?

எங்க மண்ண தான கேட்டோம்
அந்த ஒன்ன தான கேட்டோம்!
உசிரக் கூட தாரோம்
எங்க மண்ண தான கேட்டோம்!

துப்பாக்கிக்கு உசிர் இருந்தா
குண்டை துப்பியிருக்குமா?
துப்புக்கெட்ட அரசு அதிகாரி
மண்டை தப்பியிருக்குமா?
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!