கடல்தாண்டிய வணிகம்

கடல்தாண்டிய வணிகம் வைகை நதி கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில் இருக்கிறது ‘ அழகன்குளம் ’ என்ற துறைமுக நகரம். இன்று கோட்டைமேடு என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், ஓரு உடைந்த பானையை கண்டுபிடித்தனர். அது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று மதிப்பிட்டனர். 16 செண்டிமீட்டர் அகலம் கொண்ட அந்த உடைந்த பானையில் ஒரு கப்பல் வரையப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கப்பல் ரோமனியக் கப்பல் என்று உறுதி செய்துள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில் ரோமனியர்களுடன் கடல் வாணிபம் இருந்தது பல ஆதாரங்களுடன் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது. கிரேக்கர்களும், ரோம் நாட்டவரும் அன்று ‘ யவனர்கள் ’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களை பற்றிய குறிப்பும் தமிழ் இலக்கியத்தில் ஏராளமாய் உள்ளது. புறநானூறு, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் பல தமிழ்ப்புலவர்களும், பெரிபுளஸ், ஸ்டராபோ, பிளினி, தாலமி போன்ற கிரேக்கத்தை சேர்ந்த புலவர்களும் இந்த வர்த்தகத்தை பற்றி விரிவாக பதிவு செய்துள்ளனர். இதுவரை இத்தகைய இலக்கியச் சான்றுகள் தான் இந்த வணிகத்தை பற்றி ...