அஹிம்சை பூமி!

அஹிம்சை பூமி!

வாங்க வாங்க எல்லாரும்
ஒன்னா கூடுவோம்!
ஊருசிரிக்கும் எங்க வாழ்க்கைய
சேர்ந்து பாடுவோம்!

சாதிக்க தடையான
சாதியிடம் தோத்திருந்தோம்!
ஈரோட்டு வெண்தாடி - வந்து
சத்தமிட காத்திருந்தோம்!

பெயரளவில் சாதியெல்லாம்
மறைஞ்சு போக பாத்திருந்தோம்!
வேரளவில் இன்னும் நின்னு - ரத்தம்
உறிஞ்சு போக பாத்திருக்கோம்!

உலகம்பேசும் திட்டமென்று
ஊரை எரிக்கிறோம்!
கையாலாகா எங்கள் நிலையை
எண்ணிச் சிரிக்கிறோம்!

உறவெல்லாம் சாக - நின்னு
பார்த்த கண்ணிது!
நம் வீட்டுக்குள்ளும் கொன்னு
பார்க்கும் மண்ணிது!

வள்ளலாரும் வள்ளுவனும்
வாழ்ந்த மண்ணிது!
எவன் செத்த எனக்கென்ன
என்று நினைக்குது!

நீரையுந்தான் காசுகொடுத்து
வாங்க பழகினோம்!
சத்து நிறைஞ்சு இருக்குதுனு
பூசி மொழிகினோம்!

நீட்டிய பணத்தை நமதென்று
வாங்கிப் பழகினோம்! - இன்று
‘நீட்’ என்று நீட்டும்போது
திக்கித் திணறினோம்!

நாடுதனை உயர்த்த என்று
பல வரி(லி)யும் பொறுக்கிறோம்!
நல்ல கல்வி தருவோம் என்று
நாலு உயிரை எடுக்கிறோம்!

என்ன செய்ய!
இங்கே அஹிம்சை உலகம்
படைக்கக் கூட
போர்கள் தானே புரிகிறோம்!
#அசகி

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

தொன்மதுரை!