மகன்!!

மகன்!!
எனக்கு இரு பிள்ளைகள்!
ஒன்று பெற்றெடுத்த பிள்ளை!
மற்றொன்று தென்னம் பிள்ளை!!

எனது
கண்ணீர் கண்டு களிகொள்வான்
முதலாமவன்!
தாகத்தை இளநீர் கொண்டு தீர்த்திடுவான்
இரண்டாமவன்!!

எனக்கு
இகழ் தந்து இச்சிப்பான்
மகனானவன்!
நிழல் தந்து இரச்சிப்பான்
மரமானவன்!!

என்
இறப்புக்கும் எட்டிப்பார்க்காது போனான்
என்னவன்!
இறந்த பின்னும் எனைச் சுமந்தான்
பின்னவன்!!

மரமே! (மன்னிக்கவும்)
மகனே!!
பல்லாண்டு வாழ்வாயாக!!

-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!