கனவு தூரிகை!

கனவு தூரிகை!
ஏ! பெண்ணே!!
கண்டநொடி முதல்
கண்ணாலே பேசி
கிறங்கடிக்கிறாய்!
காணாத நாட்களில்
என் தூக்கத்தைத் துரத்துகிறாய்!!

என் கனவு தூரிகையில்
சிக்கிய ஓவியமாய்
சிந்தையில் நிற்கிறாய்!
விழி வழி நுழைந்து - என்னை
வீழ்த்தியது போதும்!
செவி வழி பிளந்து
இதயம் சென்றடைய
உன்னை பேசச் சொல்லி கேட்கிறேன்!!
அதற்கு நீ
தீர்க்கமாய் உதிர்த்த
அந்த ஒற்றை சிரிப்பில்
சிதைந்து போன
கோபுரச் சீமான்கள் எத்தனையோ!!
          -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!