மாலை நேரம்!
மாலை நேரம்!
வெளிச்சம் போயாச்சு
வெள்ளாடு மேஞ்சாச்சு
வெள்ளையம்மா இங்கிருக்க
வெள்ளச்சாமி எங்க போற?!!
ஆட்டை கொண்டு போய்
அடச்சு வெச்சுப்புட்டு!
ஆத்தோரம் போய்
அழகா குளிச்சுப்புட்டு!!
வீடு வந்து பாத்தாதான்
வீட்டு விளக்கு விழிச்சிருக்கும்!
அவ முகத்த பாத்தா
அழகா சிரிச்சிருக்கும்!!
வெள்ளச்சாமி...
வீரநடை போட்டு வந்த
வீராச்சாமி எங்க போனான்?!
வில் போல் பார்வை கொண்ட
வில் விசயன் எங்க போனான்?!!
வெள்ளயம்மா முகத்த பாத்து
வெக்கப்பட்டு ஓடிப் போனான்!!!
-அ.ச.கி.
Comments
Post a Comment