தேவதையோடு சில உரையாடல்கள்!!
தேவதையோடு சில உரையாடல்கள்!!
தூங்கி சாய்கிறேன்
கனவின் வாசலில்!
அங்கே ஓர் தேவதை
கேள்விகளோடு என்னை வரவேற்றாள்!!
தேவதை:- "பூமியில் புன்னகைக்கக்கூட நேரமிருக்கிறதா?!
உன் புன்னகையின் காரணம்?!"
நான்:- "அவளின் பொன்னான பூமுகம்!!"
(கேள்வி பதில்கள் தொடர்கிறது...)
இந்த பூமியில் எப்படி இருக்கிறாய்?!
அவளின் விழியீர்ப்பு விசையினால்!!
வாழ்க்கை மிரட்டியதுண்டா?!
குழந்தைபோல் மிரட்சியில் அவள் இருக்கையில்!!
உயிர் உணர்ந்த நேரம்?!
முடியிரண்டு முகம் மோதிய நேரம்!!
வானில் பறந்த அனுபவம்?!
அடியிரண்டு தள்ளி அவள் அமர்ந்தபோது!!
அன்பு அரவணைப்பு அறிந்ததுண்டா?!
காதல் நேசம் காட்டியதுண்டு!!
வாழ்வு போதும் என்றெண்ணியதுண்டா?!
சாகசம் என்றெண்ணி நான் செய்த
கோமாளித்தனம் கண்டு அவள் சிரித்த நொடி!!
நீ தொட விரும்புவது?!
இந்த கவிதையின் மூலம் அவள் மனதை!!
தொடர விரும்புவது?!
அவள் விட்டு செல்லும் பாதச்சுவடு!!
விட்டுவிட விரும்புவது?!
அவளின் மடியில் என் இறுதி மூச்சு!!
தேவலோக பெண்கள் கண்டதுண்டா?!
பூமியில் தேவதை கண்டதுண்டு!!
அவள், அவள்... யாரவள்?!
அவள், அவள்... என்னவள்!!!
-அ.ச.கி.
Sema sema.......Supr da
ReplyDeleteSema sema.......Supr da
ReplyDelete