வள்ளுவன்!

வள்ளுவன்!
ஒற்றை நூல் தந்தவன்!
இரண்டடியில் உலகளந்தவன்!
முப்பாலில் வாழ்வை பிரித்தவன்!
நால்திசை எங்கும் தமிழ்சுவை நவின்றவன்!
ஐந்திணை நிலத்துக்கும் இலக்கணம் வகுத்தவன்!
ஆறு போல் நல்கருத்ததை அளித்தவன்!
ஏழ்கடலை புகட்டி சிறு குறள் தறித்தவன்!
எட்டும் இடமெல்லாம் சிறப்புற வாழ்பவன்!

உலகோர் யாவருக்கும்
உய்யும் வழி மொழிந்தவன்!
மதம் இனம் மொழி
வேற்றுமை களைந்தவன்!
எவரும் ஏற்கும்
பொதுமறை தந்தவன்!
நம் முப்பாட்டன் வள்ளுவன்.....!!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!