அவள் பெயர் கௌசல்யா!

அவள் பெயர் கௌசல்யா!
நீதி மீண்டு(ம்) ஒருமுறை
நிலைகுத்தி கம்பீரமாய் நிற்கிறது!
நீதியின் காலடியில்
காதல்ரத்தம் ஈரமாய் நிற்கிறது!

காதலின் ரத்தம் எடுத்து
சாதியின் வேர்களுக்கா விட்டுவைத்தீர்?
உன் ஒருத்தனுக்கு ஒளிகிடைக்க
ஊரையா பற்ற வைப்பீர்?

உணர்வில்லா வெறும்
உடல் கொண்ட உனக்கு
உயிர் எதற்கு?! உடை எதற்கு?!
அதர்மத்தின் அடியொற்றி வாழும்
அடியோன் உனக்கு
அடுத்தவன் அம்மணம்தானே மூலதனம்!

உன் முகத்தில் உமிழ்வதைக்கூட
என் மனம் விரும்பவில்லை!
மலம் விற்று பிழைக்கும் உனக்கு
எச்சில் எல்லாம் எம்மாத்திரம்?

என்னதான் சொன்னாலும்
ஒப்பாறி வைத்தாலும்
தூக்குக் கயிறாலும் கூட
துக்கத்தின் தழும்பை
சீர் செய்யமுடியுமா?
தீ சுட்ட காயத்தினை
நேர் செய்யமுடியுமா?
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!