தேனூர் கருவேலமரம்
தேனூர் கருவேலமரம் முதலாம் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டும், சாடவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும், சங்க இலக்கியங்களும் தேனூரை பற்றிய சிறப்பை பதிவு செய்வதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் யாரும் தேடிக் கண்டெடுக்காமல் சுயம்புவாகவே வெளிவந்த கண்டுபிடிப்பு ஒன்று உண்டு. தேனூரில் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையில், கருவேலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தூருக்கு அடியிலிருந்து ஒரு மண்முட்டி மேலெழுந்து வர, அதை அங்கிருந்த சிறுவர்கள் எடுத்து விளையாடத் துவங்கினர். அதனுள்ளே விரலளவு உள்ள ஏழு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவை ஏழும் தங்கக்கட்டிகள், மொத்தம் சுமார் 700கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகள் . ஏழு தங்கக்கட்டிகளிலும் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிலும் ஒரே பெயர் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் ஒரு பெண்ணின் பெயர் - ‘ கோதை ’. இந்த தங்கக்கட்டிகள் கி.மு. முதல் நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்பொருள்துறை கூறுகிறது. இந்தியாவிலேயே பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் தங்கக்கட்டிகள் இங்கு தான் முதலில் கிடைத்திருக்கிறது. 2100 ஆண்டுகளுக்கு முன் த...