சிலப்பதிகாரத்தின் நிகழ் சான்றுகள்
எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய ‘வைகைநதிநாகரிகம்’ என்ற
நூல் படித்தேன். அதிலிருந்து சிறு சிறு துணுக்குகளாக இங்கு பதிவிடலாம்
என்று நினைத்தேன். அதன்படி இன்று முதலாவதாக ‘வரலாற்றின் ஆச்சரியங்களில்’
ஒன்றாக இன்றும் இருக்கும் சிலப்பதிகாரம் பற்றிய சிறு துணுக்கு.
திகைப்புற்ற ஆசிரியர், அவ்வூர் மக்களிடம் “எதற்காக கவுந்தியடிகள் பெயரில் ஒரு ஆசிரமம்?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “அந்த அம்மாதானே கோவலனையும் கண்ணகியையும் எங்க ஊருக்கு கூட்டிட்டு வந்துச்சு”.
அவ்வூரில் யாரும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் இல்லை. அதை தினமும் படித்து பகர்பவர்களும் இல்லை. இருப்பினும் சிலப்பதிகாரம் பற்றி அரைகுறையாய் பள்ளியில் பயின்ற நம்மில் பலரும் அறியாத ஓர் செய்தியை, கவுந்தியடிகள் பற்றிய செய்தியை, (இன்னும் கூர்ந்து கவனியுங்கள் கவுந்தியடிகள் ஓர் பெண் என்பதுவரை தெளிவாய் சொல்கிறார்கள்) மிகச் சாதரணமாய் அவ்வூர் மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சரியம் அதோடு நிற்கவில்லை. மதுரைக்கு வந்தவர்கள் எப்படி இவ்வூருக்கு வந்தார்கள் என்ற கேள்விக்கு, இன்னும் தெளிவாய் பதில் சொல்கிறார்கள். “மதுரைக்கு செல்லும் வழியில் இங்கு வந்து முதல் நாள் தங்கிதான் போனாங்க. அவுங்கள கூட்டி வந்து தங்கவச்சது கவுந்தியடிகள் தான். அது மட்டுமல்ல அவுங்க தங்கியிருந்த வீடு அருகில்தான் இருக்கிறது” என்றவர் அந்த வீட்டிற்கு கூட்டிச் சென்று காண்பிக்கிறார்.
அங்கிருந்து வரலாறு இன்னும் விரிகிறது. “கண்ணகியும் கோவலனும் கடைசியா தங்கியிருந்தது இந்த வீட்டில் தான். இங்கிருந்து தான் கோவலன் கண்ணகியின் ஒரு சிலம்பை விற்க எடுத்துச் சென்றான். அடுத்து அவன் கொலையுண்ட செய்தி கேட்டு, தன் ‘கடைசி சிலம்பை ஏந்தி’ இங்கிருந்து தான் நீதி கேட்டு புறப்பட்டுச் சென்றாள். அதனால் தான் எங்க ஊருக்கு ‘கடைச் சிலம்பு ஏந்தல்’ என்ற பெயர் வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட பெயர்ப்பலகை எல்லாம் ‘கடைச்சிலம்பு ஏந்தல்’ என்று தான் இருந்தது. பின் பேச்சு வழக்கில் ‘கடச்சனேந்தல்’ ஆகிவிட்டது” என்று முடித்தார்.
ஒரு வரலாறு எப்படி இலக்கியமாகவும், செவிவழி கதைகளாகவும், நிகழ்கால நேரடிச் சான்றுகளாகவும் நின்று சாட்சியம் கூறுகின்றன. இப்படி எத்தனை வரலாறுகள் ஒளிந்து கிடக்கின்றன என்பது யார் அறிவாரோ? -அ.ச.கி.
சிலப்பதிகாரத்தின் நிகழ் சான்றுகள்
மதுரைக்கு அருகே உள்ள ஒரு சிற்றூர் கடச்சனேந்தல். அங்கு ‘கவுந்தியடிகள்’
பெயரில் ஓர் ஆசிரமம் இருப்பதை (கவுந்தியடிகள் ஆசிரமம்) பார்த்து
திகைக்கிறார் ஆசிரியர். கோவலன் கண்ணகியும் அறிந்த நம்மில் பலரும்
கவுந்தியடிகளை அறிந்திருப்பது இல்லை. அவர்களை பற்றி கீழே அவ்வூர் மக்கள்
வாயிலாகவே காண்போம். திகைப்புற்ற ஆசிரியர், அவ்வூர் மக்களிடம் “எதற்காக கவுந்தியடிகள் பெயரில் ஒரு ஆசிரமம்?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “அந்த அம்மாதானே கோவலனையும் கண்ணகியையும் எங்க ஊருக்கு கூட்டிட்டு வந்துச்சு”.
அவ்வூரில் யாரும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் இல்லை. அதை தினமும் படித்து பகர்பவர்களும் இல்லை. இருப்பினும் சிலப்பதிகாரம் பற்றி அரைகுறையாய் பள்ளியில் பயின்ற நம்மில் பலரும் அறியாத ஓர் செய்தியை, கவுந்தியடிகள் பற்றிய செய்தியை, (இன்னும் கூர்ந்து கவனியுங்கள் கவுந்தியடிகள் ஓர் பெண் என்பதுவரை தெளிவாய் சொல்கிறார்கள்) மிகச் சாதரணமாய் அவ்வூர் மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சரியம் அதோடு நிற்கவில்லை. மதுரைக்கு வந்தவர்கள் எப்படி இவ்வூருக்கு வந்தார்கள் என்ற கேள்விக்கு, இன்னும் தெளிவாய் பதில் சொல்கிறார்கள். “மதுரைக்கு செல்லும் வழியில் இங்கு வந்து முதல் நாள் தங்கிதான் போனாங்க. அவுங்கள கூட்டி வந்து தங்கவச்சது கவுந்தியடிகள் தான். அது மட்டுமல்ல அவுங்க தங்கியிருந்த வீடு அருகில்தான் இருக்கிறது” என்றவர் அந்த வீட்டிற்கு கூட்டிச் சென்று காண்பிக்கிறார்.
அங்கிருந்து வரலாறு இன்னும் விரிகிறது. “கண்ணகியும் கோவலனும் கடைசியா தங்கியிருந்தது இந்த வீட்டில் தான். இங்கிருந்து தான் கோவலன் கண்ணகியின் ஒரு சிலம்பை விற்க எடுத்துச் சென்றான். அடுத்து அவன் கொலையுண்ட செய்தி கேட்டு, தன் ‘கடைசி சிலம்பை ஏந்தி’ இங்கிருந்து தான் நீதி கேட்டு புறப்பட்டுச் சென்றாள். அதனால் தான் எங்க ஊருக்கு ‘கடைச் சிலம்பு ஏந்தல்’ என்ற பெயர் வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட பெயர்ப்பலகை எல்லாம் ‘கடைச்சிலம்பு ஏந்தல்’ என்று தான் இருந்தது. பின் பேச்சு வழக்கில் ‘கடச்சனேந்தல்’ ஆகிவிட்டது” என்று முடித்தார்.
ஒரு வரலாறு எப்படி இலக்கியமாகவும், செவிவழி கதைகளாகவும், நிகழ்கால நேரடிச் சான்றுகளாகவும் நின்று சாட்சியம் கூறுகின்றன. இப்படி எத்தனை வரலாறுகள் ஒளிந்து கிடக்கின்றன என்பது யார் அறிவாரோ? -அ.ச.கி.
Comments
Post a Comment