பெண் சிசுவுக்கு!
பெண் சிசுவுக்கு!
ஓ! பெண்ணே!
மறுசனனம் ஒன்றெடுத்து - ஆண்
மகவு உருவெடுத்து - இம்
மண்ணில் பாதம் பதி!
அன்று உனக்கு
இவ்வுலகில் இடம் இருக்கும்!
இல்லையேல்-
உன் அன்னையின்
மார்பு காம்பை நீ கவ்வும்முன்
இம்மண் உன்னைக் கவ்வும்!
பால்மனம்-
உன் நாசியை நிறைக்கும்முன்
பாழும் உலகம்
உன் கழுத்தை நெரிக்கும்!!
-அ.ச.கி.
Comments
Post a Comment