சிறு சொல்லாய்வு ! பின்வரும் சொற்களின் வேர்ச்சொல்லான வினைச்சொல் '- ற்று ' என்றே முடிகிறது . அதாவது ஆற்று , தேற்று , ஏற்று , மாற்று என்பன வேர்ச் சொற்கள் . அதன்மூலம் எழும் சொற்கள் :- ஆறுதல் - ஆற்றுதல் தேறுதல் - தேற்றுதல் ஏறுதல் - ஏற்றுதல் மாறுதல் - மாற்றுதல் இச்சொற்களில் முதலில் வருவன , அதாவது , ஆறுதல் , தேறுதல் , ஏறுதல் , மாறுதல் என்பன ' தன்னிலை ' (First person) தன்மீதே ஆற்றும் தொழிலை குறிக்கும் சொற்கள் . அதைத்தொடர்ந்து வருவன ' தன்னிலை ' பிறர் மீது ஆற்றும் தொழிலை குறிப்பது . பின்வரும் தொடர்களை காண்க :- நான் மரம் ' ஏறுகிறேன் ' அதை மேலே ' ஏற்றுகிறேன் ' மேற்சொன்ன சொற்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமையை கவனியுங்கள் . அனைத்து சொற்களின் முதலெழுத்து நெடிலாகவே அமைந்து இருக்கிறது . முதலெழுத்து குறிலாக அமையும் வார்த்தைகள் இந்த இரட்டை முறையில் வருவது இல்லை . எ . கா :- சுற்றுதல் , கற்றல் , விற்றல் ஆக , முதலெழுத்து நெடில...