என்று விடியும்?!
என்று விடியும்?!
என்று விடியும்
என்று கேட்கிறார்கள்-
வறுமையை வரம் வாங்கியவர்கள்!
கொடுமையில் உழன்றவர்கள்!
பசி அரக்கனுக்கு இரையானவர்கள்!
குண்டு சிதறலிலும்
குழந்தைக் கதறலிலுமே
இசை கற்று வளர்ந்தவர்கள்!
சிரிப்பென்ற வார்த்தையை
சிந்தித்தே அறியாதவர்கள்!
அழுகை தவிர வேறேதுவும்
அனுபவித்து அறியாதவர்கள்!
அன்னை பூமியிலேயே
அகதிப் பட்டம் வாங்கியவர்கள்!!
-அ.ச.கி.
-அ.ச.கி.
Comments
Post a Comment