சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

நித்திரை கலைத்தெழு தமிழா!
சுற்றியுள்ள ஊர் எங்கும் - உம்மை
சுற்றிசுற்றி அடிக்கின்றனர்!
தண்ணீர் தர மறுக்கிறான் ஒருபுறம்!
தண்ணீர் சமாதிகள் மறுபுறம்!
செம்மரம் ஒன்றே காரணம் என்று
செங்குருதி குடிக்கிறான் இன்னொருவன்!
பிரதிநாள் ஒவ்வொன்றும் - புதுப்புது
பிரச்சனைகளை தேடித்தேடி
பிரயத்தனப்படுகிறான் பிறிதொருவன்!!

இனிச்சொல்லுங்கள்
தேவைதானா இன்றைய உற்சாகம்?!

என்று வாழ்த்துக்களாக மட்டுமே
வருடப்பிறப்பு இல்லாமல்
வாழ்த்தும் வண்ணம்
வாழ்க்கை அமையுமோ
அன்று கொண்டாடுவோம்
வெற்றிக் குலவையிடுவோம்
தமிழனாய் தலைநிமிர்வோம்
தமிழர் திருநாள் கொண்டாடுவோம்!

-..கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!